ஜெகஜ்ஜால இன்ஸ்பெக்டரும்…. தெறிக்கவிட்ட  ஐ.ஜியும்.!

0

ஜெகஜ்ஜால இன்ஸ்பெக்டரும்…. தெறிக்கவிட்ட  ஐ.ஜியும்.!

இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மனநலக் காப்பகம் இருப்பதாலோ என்னவோ, இந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் இன்ஸ்பெக்டர்களோ, சப்-இன்ஸ்பெக்டர்களோ சில பேர் ஏறுக்குமாறாகவும் கோக்குமாக்காவும் நடந்து ஏரியா மக்களையும் மாவட்ட உயர்போலீஸ் அதிகாரிகளையும் அலற வைத்துவிடுவார்கள்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கு இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்ச்செல்வி என்பவர் கள்ளச்சாராய வியாபாரியுடனும் டாஸ்மாக் சரக்குகளை பிளாக்கில் சப்ளை செய்யும் பார்ட்டிகளுடனும் கைகோர்த்துக் கொண்டு கல்லா கட்டினார். போலீஸ் ஜீப்பில் போவதைவிட, சாராயப் பார்ட்டிகளின் காரில் பவனி வருவது தான் தமிழ்ச்செல்விக்கு ரொம்பவும் பிடிக்கும். இவரின் பராக்கிரமங்கள், அப்போது  எஸ்.பி.யாக இருந்த வருண்குமார் காதுக்குப் போனது, ஓப்பன் வயர்லெஸ்லிலேயே வறுத்து எடுத்ததுடன், போலீஸ் ஜீப்பையும் பறிமுதல் செய்து இராமநாதபுரத்துக் கொண்டு போய்விட்டார். சில வாரங்களில் தமிழ்ச் செல்வியையும் தேனிக்குத் தூக்கியடித்தார்.

அதன் பின் சில இன்ஸ்பெக்டர்கள் ஏர்வாடி க்கு வருவதும் போவதுமாக இருந்தனர். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு இங்கு இன்ஸ்பெக்டராக வந்திறங்கினார் கஜேந்திரன். சொந்த ஊர் இவருக்கு தூத்துக்குடி என்றாலும் ஏர்வாடி ஸ்டேஷனுக்கு வருவதற்கு முன்பு, இதே இராமநாதபுரம் மாவட்ட மண்டபம், சிக்கல் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டராக இருந்து தனது ‘ஜெகஜ்ஜால’ லீலைகளால் மக்களிடம் கெட்ட பெயர் வாங்கி நாறியவர்.

- Advertisement -

சிக்கலில் கஜேந்திரன் இன்ஸ்பெக்டராக இருந்த போது, கசமுசா மேட்டருக்காக போலீஸ் குவார்ட்டர்ஸில் ஒரு பெண் கான்ஸ்டபிளின் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்த சிலர், வெளித்தாழ்ப்பாள் போட்டுவிட்டு, கீழக்கரை டி.எஸ்.பி.க்குத் தகவல் கொடுத்தனர். ஸ்பாட்டுக்கு வந்த டி.எஸ்.பி. காரித்துப்பாத குறையாக கஜேந்திரனைத் திட்டி விரட்டிவிட்டார்.  இப்போது அதே லீலைகளை ஏர்வாடியிலும் அரங்கேற்றி ஆரம்பித்திருக்கிறார் இந்த கஜேந்திரன். இந்த செய்தியில் ஊர்ப்பெயரையோ, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையோ நாம் குறிப்பிட விரும்பவில்லை.

இதுபோல் பல சம்பவங்கள் புகார்களாகி, கீழக்கரை டி.எஸ்.பி.சுபாஷிடம் போயுள்ளது. (சுபாஷும் கஜேந்திரனும் ஒரே பேட்ச் மேட் தான். ஒழுக்கமாக இருந்திருந்தால் கஜேந்திரனும் டி.எஸ்.பி.யாகியிருக்க வேண்டியவர்.) சுபாஷும் கஜேந்திரனும் கூப்பிட்டு, ‘ஏய்யா இப்படி நாறடிக்கிற’ என கடிந்துள்ளார். ஆனாலும் கஜேந்திரன் அடங்கவில்லை. இத்துடன் கஜேந்திரனும் டீன்ஏஜ் மகனும் போலீஸ் ஜீப்பில் ரவுண்டடித்து அக்கப்போர் பண்ணியுள்ளார்.

சம்பவம் 1

4 bismi svs

இந்த ஸ்டேஷன் லிமிட்டிற்குட்பட்ட ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர்,  தனது 17 வயது மகளைக் காணவில்லை என்ற புகாருடன் வந்துள்ளார். ”கண்டிப்பா கண்டுபிடிச்சுருவோம்” என ஆறுதல் சொல்லி அனுப்பிய கஜேந்திரன், அந்தப் பெண்ணின் செல்போனுக்கு தொடர்ந்து தொடர்பு கொண்டு, “நீ ரொம்ப அழகா இருக்க, லட்டு மாதிரி இருக்க, தேனடை மாதிரி இருக்க” என வர்ணித்துவிட்டு, ஆபாசமாகவும் பேச ஆரம்பித்துள்ளார்.  கடுப்பான அந்தப் பெண்ணும் கடுமையான வார்த்தைகளால் கஜேந்திரனைத் திட்டித் தீர்த்திருக்கிறார்.

சம்பவம் 2

நிலத்தகறாரு காரணமாக இரு பெண்களும் அவர்களுக்குத் துணையாக ஒரு பெண்ணும் ஸ்டேஷனுக்கு வந்துள்ளனர். “இதெல்லாம் ஒரு மேட்டரா, நான் பார்த்துக்குறேன், டோண்ட் ஒர்ரி பி ஹேப்பி” எனச் சொல்லி அனுப்பிவிட்டு, துணைக்கு வந்த பெண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் தூண்டில் போட்டுள்ளார். “அடி செருப்பால நாயே” என ஹாட்டானதும் கஜேந்திரன் கப்சிப்பாகிவிட்டார். ஸ்டேஷனில் இருக்கும் மற்ற காவலர்களிடம் இதைப் பற்றி அந்தப் பெண் அழுதபடி கூறியும் தங்களது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளனர் காவலர்கள்.

இந்தக் கூத்துகளும் புகாராகி எஸ்.பி. கார்த்திக்கிடம் போனதும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார் எஸ்.பி. அப்படியும் கஜேந்திரன் திருந்தாததால் ஏர்வாடி ஏரியா மக்களிடமிருந்து தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிற்கு ஆதாரங்களுடன் புகார் போயுள்ளது. மதுரையிலிருந்தபடியே தீரவிசாரித்த அஸ்ரா கார்க், கஜேந்திரனின்  லீலைகளை கன்ஃபார்ம் பண்ணியுள்ளார்.

எஸ்.பி.கார்த்திக்கிற்குப் போன் போட்ட அஸ்ரா கார்க், “இன்னும் அரை மணி நேரத்துல அந்த கஜேந்திரன் ஏர்வாடியவிட்டு கிளம்பி ஆயுதப்படை டூட்டிக்குப் போய் கையெழுத்துப் போட்டிருக்கணும். இல்லேனா சஸ்பெண்ட் பண்ணிருவேன்” என தடாலடியாக உத்தரவு போட, “சார் ஆர்டர் காப்பி” என இழுத்திருக்கிறார் எஸ்.பி. “அதுக்கென்ன அவசரம். அத நாளைக்குக் கூட அனுப்புவேன்” என்றாராம் ஐ.ஜி.அஸ்ரா கார்க்.

ஐ.ஜி.யின் இந்த தடாலடி திகிலடி ஆக்ஷனைப் பார்த்து அரண்டு போயிருக்கிறார்களாம் தென்மண்டலங்களில் பணிபுரியும் கஜேந்திரன் போன்ற லீலை மன்னர்கள்.

-பாலாஜி, மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.