இதுக்கு பேரு கூட்டமா ? சேர்மனை கூட்டத்தில் அவமதிப்பதா ? ஆளும் கட்சி கவுன்சிலரின் வைரல் ஆடியோ !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

சேர்மனை கூட்டத்தில் அவமதிப்பதா ? ஆவேசமான ஆளும் கட்சி கவுன்சிலர் ஆதங்கத்தில் வெளியிட்ட ஆடியோ வைரல்.

திருச்சி மாவட்டம், துறையூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் பாலக்கரையில் நடைபெற்றது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நீங்கள் வேலை பெறுவது எளிது...

திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் K.N.நேரு கலந்து கொள்வதாக இருந்தது. சேலத்தில் நடைபெற்ற மீட்டிங்கில் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. கூட்ட மேடையில் துறையூர் எம்.எல்.ஏ.ஸ்டாலின், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகரச் செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி, அம்பிகாபதி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்ரன், முத்துச்செல்வன், அசோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

3
மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் பாலக்கரையில்
மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் பாலக்கரையில்

மேடையின் கீழே துறையூர் நகர் மன்றத் தலைவர் செல்வராணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். அமைச்சர் K.N.நேரு கலந்து கொள்ள முடியாததால் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், எம்எல்ஏ ஸ்டாலின் குமார் ஆகியோர் பேசினர். அவரைத் தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர்கள் பேசியவுடன் கூட்டம் முடிந்தது.

4

இந்நிலையில் துறையூரில் திமுகவினரின் வாட்ஸ் அப் குரூப்பில் ஒரு ஆடியோ வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் பேசியிருப்பவர் ஆளுங்கட்சியான திமுகவின் துறையூர் நகர்மன்ற உறுப்பினர் வீரமணிகண்டன் என்பது கூடுதல் பரபரப்பாக கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வெளியாகி உள்ளது.

துறையூர் நகர் மன்றத் தலைவர் செல்வராணி
துறையூர் நகர் மன்றத் தலைவர் செல்வராணி

அந்த ஆடியோவில் , “வணக்கம் , பேராசிரியரோட நூற்றாண்டு விழா நடக்குது துறையூர்ல, துறையூர்ல வந்து ஒரு ஆண் நகராட்சி தலைவரா இருந்தா அவர நகர்மன்ற தலைவர், நகரத் தந்தை அப்படின்னு சொல்லுவாங்க. அதே மாதிரி பெண் ஒருத்தர் இப்போ நகர்மன்றத் தலைவரா இருக்காங்க. இந்த துறையூர் நகரத்துல கூட்டம் நடத்துறீங்க, நகர்மன்றத் தலைவர மேடைக்கு அழைக்கவில்லையே, இதுக்கு பேரு கூட்டமா, இல்ல உங்க இஷ்டப்படி தான் பண்ணுவீங்களா?  ஒரு மாவட்ட செயலாளர் வராரு , அவரு தலைமையில கூட்டம் நடக்குது, அவர் கேட்கணும்ல, எங்க மேடையில நகர்மன்ற சேர்மன காணோம்னு. கூட்டம் நடத்துறது நகராட்சியில, ஆனா நகராட்சி சேர்மன் எங்க உட்கார்ந்திருக்காங்க கீழயா , யார் அவங்கள கீழ உட்காரச் சொன்னது. கட்சி கூட்டம் நடத்த தெரியுமா? தெரியாதா? தெரியும்னா தெரியும்னு சொல்லுங்க , தெரியலன்னு சொன்னா , நாங்க சொல்லித் தர்றோம். நீங்க கட்சியில ஒண்ணும் சீனியர் கிடையாது, கட்சி வரலாறு தெரிஞ்ச ஆளுங்களும் கிடையாது. இதுதான் உண்மை. ஒரு நகர்மன்றத் தலைவர கீழ உட்கார வெச்சிட்டு இந்த துறையூர் நகரத்தில கூட்டம் நடக்குது. இது என்ன கட்சி கூட்டமா ?

வீரமணிகண்டன் துறையூர் நகர்மன்ற 22-வது வார்டு உறுப்பினர்.
வீரமணிகண்டன் துறையூர் நகர்மன்ற 22-வது வார்டு உறுப்பினர்.

எனத் தனது ஆதங்கத்தை ஒரு திமுக நகர்மன்ற உறுப்பினரான மணிகண்டன் பேசி வெளியிட்ட ஆடியோ தற்போது வைரலாகி மேலும் இது பற்றி கட்சி மேலிடத்திற்கும் ஆதாரத்துடன் படங்களுடன் சொல்வேன் என பதிவும் வெளியிட்டுள்ளார். தனது கட்சி தலைமையை விட இந்த விஷயம் அமைச்சர் நேருவிற்கு தெரிந்து என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் துறையூர் நகர திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர். மேலும் கட்சி நிகழ்வுகள் மட்டுமல்லாது துறையூர் நகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறை விஷயங்கள் அனைத்திலுமே நகர்மன்றத் தலைவர் புறக்கணிக்கப்படுவதாகவும், அதில் பல்வேறு நிகழ்வுகள் சாட்சியங்களாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

– ஜோஸ்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.