நான் போலீஸ்… போலீஸ் பிடிபட்டவர் ஆவேசம்… உட்காருடா…ஏட்டய்யா எகிறல்…..

0
நான் போலீஸ்… போலீஸ்
பிடிபட்டவர் ஆவேசம்…
உட்காருடா…ஏட்டய்யா எகிறல்…..
காவல்துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் பல காவலர்களின் செயல்பாடுகள் குறித்து நாம் அதிக அளவில் படித்து அவர்களை பாராட்டி வருகிறோம்.
அதே நேரம் திருட்டு நகைகளை முழுமையாக கோர்ட்டில் ஒப்படைக்காத இன்ஸ்பெக்டர்… புகார் தெரிவித்த பெண்ணையே கரெக்ட் செய்த இன்ஸ்பெக்டர்.. திருட்டுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர்.. என்று காவல்துறையில் உள்ள சிலரது கேவலமான நடவடிக்கைகள் குறித்தும் நாம் படித்து வருகிறோம் .

 

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை  சேர்ந்தவர் ரியாசிதீன். இரு சக்கர வாகன மெக்கானிக். இவர்  தனது இருசக்கர வாகனத்தில் சிறுமிகள் அனுஷா, அகிலா, யமுனா ஆகியோரை அழைத்துக் கொண்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி சென்றார்.
திருச்சி புதிய வெங்காய மண்டி சர்வீஸ் சாலையில் சென்றபோது ,அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். தன்னை போலீஸ்காரர் என அறிமுகம் செய்த அவர் ஆர். சி. புக், லைசன்ஸ் ஆகியவற்றை கேட்டார். ஒரே பைக்கில் நான்கு பேர் போகலாமா என்றும் அதட்டினார்.
அதன் பின்னர்  4 பேரின் செல்போன்களையும் வாங்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக்க என்று கூறி சென்றுவிட்டார்.
பாதிக்கப்பட்ட 4 பேரும் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையம் வந்தனர். செல்போனகளை கேட்டனர். அப்போது தான், இப்படி ஒரு பிரச்சனை நடந்திருக்கிறது என்ற விவரமே காந்தி மார்க்கெட் போலீஸ்காரர்களுக்கு தெரிய வந்தது.
இன்ஸ்பெக்டர் நாஞ்சில் குமார்  தலைமையிலான குழுவினர் செல்போன் பறித்த நபர் குறித்து விசாரணை நடத்தினர் இதில், இதில்,அந்த நபர் ரியல் போலீஸ் என்பதை கேட்டு அதிர்ந்தே போயினர். சம்பந்தப்பட்ட நபர் அரியமங்கலம் திடீர் நகர் மேல அம்பிகாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர்  மணிவேல் ( 39) என்பதும், திருவரம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
திருவரம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் அந்த நபர் மீது ஏற்கனவே சில அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற கூடுதல் தகவல்களும் கடந்த 9ஆம் தேதி முதல் அவர் பணிக்கு வராமல் ஊர் சுற்றிக்கொண்டு வழிபறிகளில் ஈடுபடுவதும் போலீஸ்காரர்களுக்கு தெரிய வந்தது.
தலையில் அடித்துக் கொண்ட காந்தி மார்க்கெட் போலீசார் ரியல் போலீஸ் மணிவேலை காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் சட்டை இல்லாமல் அமர வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தன்னை விசாரிக்க வந்த ஏட்டையாவை பார்த்த மணிவேல், நான் போலீஸ்காரன் என்னையே தரையில் உட்கார வைத்து விசாரிக்கிறியா என்று எகிற தொடங்கினார்.
ஏட்டையாவோ ரொம்ப கூலாக… கீழே உட்காருடா போலீஸ்காரனா இருந்துகிட்டு…
ஏண்டா இப்படி நடந்துக்கிற என்று கடுமையாக டோஸ் விட்டார்.
தொடர்ந்து மணிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.