அனுமதி முடிந்தும் கொடி கட்டி பறக்கும் 14 குவாரிகள் ! அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ! – நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்

0

அனுமதி முடிந்தும் கொடி கட்டி பறக்கும் 14 குவாரிகள் !

அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ! – நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்

 

கலெக்டர் களம் இறங்குவார் என நம்புவோம் அனுமதியல்லாம் முடிந்து ரொம்ப காலமாச்சு. ஆனால் இன்னமும் கரூர் மாவட்டத்தில் 14 கல்குவாரிகள் ஓகோவென ஓடுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் சமூக ஆர்வலர் கரூர் மாவட்ட சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் மனு கொடுத்தும், ம்… இதுவரை நடவடிக்கை இல்லை. இனி மேலாவது கரூர் மாவட்ட கலெக்டர பிரபு சங்கர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவோமோ சரி மேட்டருக்கு வருவோம்…

கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் குப்பம் கிராமத்தில் கிரசர் மேடு பகுதியை சுற்றி அனுமதி முடிந்த பின்பும் தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்கி வரும் 14 கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் குப்பம் கிராமத்தில் கிரசர் மேடு பகுதியை சுற்றி அனுமதி முடிந்த பின்பும் தொடர்ந்து சட்டவிரோதமாக 14 கல்குவாரிகள் இயங்கி வருகிறது.

கலெக்டர் பிரபு சங்கர்
கலெக்டர் பிரபு சங்கர்

அதன் விவரம் வருமாறு :

வெங்கடாசலபதி ப்ளு மெட்டல் (புல எண் 213/1, 214)2ஏ,2பி,2சி, 220/3 பி,221/1 பி அனுமதி முடிந்த காலம் 22.06.2022)

சதாசிவம் கல்குவாரி (புலஎண் 211/1,2 தற்போது மாநில சுற்றுச்சூழல்  மதிப்பீட்டு குழுமத்திடம் அனுமதி கேட்டு உள்ளது)

என்.சக்திவேல் கல்குவாரி (புலஎண் 75/3ஏ&76.1 அனுமதி முடிந்த காலம் 4.05.2011)

கவிதா கல்குவாரி (புலஎண் 75/1 ஏ, பி,2 அனுமதி முடிந்த காலம் 5.8.2021) நியூ ஸ்டார்

ப்ளு மெட்டல் (புலஎண் 533/1 534/1 550/சி அனுமதி முடிந்த காலம் 2.12.2021)

காளியப்பன் கல்குவாரி (புலஎண் 22/3 பி, அனுமதி முடிந்த காலம் 4.7.2022)

ஜீவானந்தம் கல்குவாரி (புலஎண் 524/3 ஏ2, 3பி அனுமதி முடிந்த காலம் 4.7.2022)

கேஎஸ்.கந்தசாமி கல்குவாரி (புலஎண் 388/1 அனுமதி முடிந்த காலம் 4.7.2022)

ஆர்.கந்தசாமி கல்குவாரி (புலஎண் 26(பகுதி) அனுமதி முடிந்த காலம் 15.8.2022)

அமராவதி கல்குவாரி (புலஎண் 508/2 அனுமதி முடிந்த காலம் 17.8.2022) என்.டி.சி.

இன்பரா ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் கல்குவாரி (புலஎண் 491/பகுதி அனுமதி முடிந்த காலம் 23.8.2022)

நாட்ராயன் கல்குவாரி (புலஎண் 112/1பி,2பி,3 அனுமதி முடிந்த காலம் 5.9.2022)

மேற்கண்ட குவாரிகளின் காலம் முடிந்த பிறகும் மீண்டும் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மிகப்பெரிய அளவில் வெடிபொருட்களை பயன்படுத்தி வெடி வைத்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இலட்சக்கணக்கான கோடிகளில் கடனில் தவிக்கும் தமிழக அரசு, இப்படி தினமும் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

எனவே மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அவர்கள் மேற்படி சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளை உடனே ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்து சமூக சொத்தான கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

– நமது நிருபர் 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.