சாலையில் கிடந்த மணிபர்ஸை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள் !

0

மதுரை திருநகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் இருவர் சாலையில்  கிடந்த மணிபர்ஸை எடுத்து திருநகர் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் நேர்மையான சேவைக்கு திருநகர் காவல் ஆய்வாளர் சுரேஷ் சால்வை அணிவித்து பாராட்டு

மதுரையில் திருநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் பள்ளிகூடம் சென்றுள்ளனர். அப்பொழுது சாலையில் கிடந்த மணிபர்ஸை பார்த்ததும் அது யாருடையது என்று அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். யாரும் தெரியவில்லை என்று சொன்னதும் உடனடியாக அருகாமையில் உள்ள திருநகர் காவல் நிலையத்திற்கு முகம்மது ஆசிப், ஹரிஸ் ஆகிய இரண்டு மாணவர்களும் நேரடியாக சென்று இந்த மணிபர்ஸ் சாலையில் கிடந்தது யாருடையது என்று தெரியவில்லை விசாரித்து உரியவரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினர்.

2 dhanalakshmi joseph
சாலையில் கிடந்த மணிபர்ஸை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள் !
சாலையில் கிடந்த மணிபர்ஸை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள் !
4 bismi svs

திருநகர் காவல்துறையினர் சக மாணவர்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் காவல் ஆய்வாளர் இன்னும் சிறிது நேரம் வந்து விடுவார் இங்கே காத்திருங்கள் என்று சொல்லி இருக்கிறார், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஆய்வாளர் சுரேஷ் உடனடியாக காவல் நிலையம் விரைந்து வந்து முகம்மது ஆசிப், ஹரிஸ் இரண்டு மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தி அவர்களை பாராட்டினார். மணி பரிசில் அளவுக்கு அதிகமான பணம் இருந்தும் காவல்துறையினரிடம் மாணவர்கள் ஒப்படைத்தது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

- Advertisement -

- Advertisement -

-ஷாகுல் 

படங்கள்: ஆனந்த்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.