ஆண்ட்ரியா வனதுர்க்கையா ? சூப்பர் ஹீரோயினா ? கா பட சுவாரஸ்யம் !

மெசேஜ் சொல்வது என்பது சினிமா இல்லை என்பதை நான் நம்புகிறேன். சினிமா என்பது அனுபவம் அதிலிருந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் ...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆண்ட்ரியா வனதுர்க்கையா ? சூப்பர் ஹீரோயினா ? கா பட சுவாரஸ்யம் !

சிகலா புரொடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும்,  தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில்,  இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில்,  ஆண்ட்ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம்,  “கா”.  இப்படம் இம்மாத இறுதியில்  ரிலீஸாகிறது. இதன் முன்னோட்டமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இவ்விழாவினில்

சசிகலா புரொடக்சன்ஸ்  ஆண்டனி தாஸ் பேசியதாவது …

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

“எல்லோரும் ஈஸியா ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி சிம்பிளான டைட்டிலாக வைத்து விட்டார் இயக்குநர். படம் எடுத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது‌. சில கரெக்சன்கள் இருந்தது அதனால் தான் இந்த தாமதம். எல்லோரும் என்ன பிரச்சனை எனக் கேட்டார்கள். சினிமாவைப் பொறுத்தவரை அது நம் கையில் இல்லை. எல்லாம் மேலே உள்ளவன் மனசு வைக்க வேண்டும். இறுதியாக உங்கள் முன் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். நாஞ்சில் மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். திரைக்கதையை  அத்தனை ஸ்பீடாக கொண்டு போயுள்ளார். மும்பையில் படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டினார்கள்.  படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி”.

ஸ்டண்ட் மாஸ்டர் இளங்கோ பேசியதாவது …

இந்தப்படம் காட்டுக்குள் தான் நிறையக் காட்சிகள் எடுத்தோம். இயக்குநர் ஷாட் வைக்கும் இடத்திற்கு நார்மலாக மனிதர்கள் போக முடியாது அத்தனை கஷ்டம். எல்லோரும் அர்ப்பணிப்போடு உழைத்து படத்தை உருவாக்கியுள்ளோம். வாய்ப்புத் தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி.

நடிகர் கமலேஷ் பேசியதாவது …

எனக்கு வாய்ப்புத்தந்த ஜான் மேக்ஸ் சார், இயக்குநர் நாஞ்சில் ஆகியோருக்கு நன்றி. கண்டிப்பாக இது வெற்றிப்படமாக இருக்கும். இப்படத்தில் ஆண்ட் ரியா மேடத்தை சூப்பர் ஹீரோயினாகப் பார்க்கலாம். அட்டகாசமாக நடித்துள்ளார். எனக்குக் கிடைத்த வாய்ப்பு மிகப்பெரியது. இயக்குநர் நாஞ்சில் மிகப்பெரிய இயக்குநராக வலம் வருவார். இப்படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் நன்றி.

இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு பேசியதாவது …

கா என்பது இறைவன், இந்த படத்தில் ஆண்ட்ரியா மேடமே வன துர்க்கை போன்று தான் இருப்பார். மரங்கள் வெட்டாதீர்கள் என்பதை ஒரு அழகான கமர்ஷியல் திரில்லராக எடுத்துள்ளார். ஜான் மேக்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். என் முழு உழைப்பைத் தந்துள்ளேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது …

கா, காட்டைக்குறிக்கும் தலைப்பு. காட்டை வைத்து படம் எடுப்பது கடினமானது. நான் அந்த மாதிரி கஷ்டப்பட்டிருக்கிறேன். தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் அற்புதமான தயாரிப்பாளர். அவரது தயாரிப்பான மைனா படம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். ஆண்ட்ரியா மற்ற நடிகைகள் போல் இல்லாமல் பட விழாவிற்கு வந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். வித்தியாசமான களத்தில் வித்தியாசமான படத்தை எடுத்துள்ள படக்குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் நாஞ்சில் பேசியதாவது …

மெசேஜ் சொல்வது என்பது சினிமா இல்லை என்பதை நான் நம்புகிறேன். சினிமா என்பது அனுபவம் அதிலிருந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஹீரோயின் ஆண்ட்ரியாவிற்கு நன்றி. படம் ஆரம்பித்தலிருந்து இன்று வரை உடன் நிற்கிறார். சலீம் கௌஸ் சாரை நிறையப் போராடித்தான் வர வைத்தேன். கதையைக் கடைசி வரை கேட்கவேயில்லை. என்னைப்பற்றிக் கேட்டார்.எனக்குப் பிடித்த இயக்குநர் பற்றி கேட்டார் பின் எனக்காக வந்தார். இனிமேலும் கதை கேட்க மாட்டேன். எப்போது வேண்டுமானாலும் கூப்பிடு வருகிறேன் என்றார். இப்போது அவர் இல்லாததது வருத்தம். இப்படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோருக்கும் நன்றி. இப்படத்தினை தயாரித்த என் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும் ஒரு படமாக இருக்கும். நன்றி.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கதையின் நாயகி ஆண்ட்ரியா பேசியதாவது …

“நாஞ்சில் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தை முடித்துள்ளார். கொரோனாவிற்கு முன்னதாக கேட்ட கதை இப்போது திரைக்கு வந்துள்ளது. ஒரு படம் குழந்தை என்றால் இயக்குநரும் தயாரிப்பாளரும் அம்மா அப்பா மாதிரி. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே படம் நன்றாக வரும். இப்படத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.  எனக்கு கடவுளை விட  காடு மிகவும் பிடிக்கும். செல்போன் சிக்னலே இல்லாத பல இடங்களில் காட்டின் உள்ளே  போய் படம் எடுத்துள்ளோம். நாங்கள் பட்ட கஷ்டத்திற்குப் பலன் கிடைக்கும். இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”

இயக்குநர் பாக்யராஜ் …

“சசிகலா புரொடக்சன்ஸ் எனக்குத் தெரிந்தவர்கள். அதனால் அவர்கள் அழைத்தால்  வந்தால் உடனே வந்துவிடுவேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார். அவருக்கு வாழ்த்துக்கள். சினிமா என்பது அனுபவம் என்றார் டைரக்டர் நாஞ்சில்.அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது.  இப்படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியதாவது “படம் பிரம்மாதமாக வந்துள்ளது. ஆண்டனி தாஸ் எங்கள் படத்தை வாங்கி நல்ல வகையில் மக்களிடம் சேர்த்து வருகிறார். அவருக்கு என் நன்றி. இங்கு வாழ்த்த வந்த ஆளுமைகள் பாக்யராஜ், கே ராஜன், உதயகுமார்  அனைவருக்கும் நன்றி. ஆண்ட்ரியா கடின உழைப்பைத் தந்துள்ளார். நாஞ்சில் அருமையான படத்தைத் தந்துள்ளார் உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி”.

தொழில் நுட்பக் கலைஞர்கள்

இயக்குனர் – நாஞ்சில்

தயாரிப்பாளர் – ஜான் மேக்ஸ்.

வெளியீடு – பி. ஆண்டனி தாஸ்.

இசை – சுந்தர் சி பாபு

ஒளிப்பதிவு  – அறிவழகன்

கலை – பழனிவேல்

எடிட்டிங் – எலிசா

ஸ்டண்ட் – இடி மின்னல் இளங்கோ

பாடலாசிரியர் – பாலா சீதாராமன்.

மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திரு முருகன்.

மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.