மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 21
அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடக நடிகர் எனப் பன்முகக் கலையாற்றல் கொண்டவர் திரு. வல்லநாடன் அவர்கள். இயற்பெயர் திரு. இல. கணேசன். தெற்கு ரயில்வேயில் வனிகப் பிரிவில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர்.
3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy
அன்னைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் என இரண்டு மொழிகளிலும் அழகுறக் கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றவர். இந்த இரண்டு மொழிகளிலுமே இவரது நூல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கவொன்றாகும்.
அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...
வார்ப்புகள், தொற்றே தொலைந்து போ, பொங்கி வரும் கங்கை, சூழ் கொண்ட மேகம், மனம் தோய்ந்த மார்கழி எனத் தமிழிலும், Thoughts, Unmuted என ஆங்கிலத்திலும் இவரது நூல்கள் வெளிவந்துள்ளன.
சந்தக்கவி, பாவலர், நாடக நன்மணி, நூலக சேவைச் செம்மல், பல்கலை வித்தகர் இதுபோன்ற பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர். திருச்சி மாவட்ட மத்திய நூலக வாசகர் வட்ட துணைத் தலைவராகப் பொறுப்பு வகிப்பவர்.
திரு. வல்லநாடன் அவர்களின் இலக்கியப் பணி சிறக்க
வாழ்த்துகள்
-பாட்டாளி
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen