இந்திய அரசியலும் இசுலாமியர்களும் ! செய்ததும் செய்யத்தவறியதும் ! பாகம் 1

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்நாட்டின் இஸ்லாமிய கட்சிகள் சரியான பாதையில் பயணிக்கின்றனவா? மேற்கண்ட கேள்விக்கு கண்டிப்பாக இல்லை என்பதே என் பதில்.  எதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் இஸ்லாமிய கட்சிகள் சரியான பாதையில் பயணிக்கவில்லை? உணர்வுகளை தள்ளிவைத்து யதார்த்தமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும், புள்ளிவிபரங்கள் அடிப்படையிலும், சற்று விரிவாகக் காண்போமா?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒப்பிடுகையில் இந்திய முஸ்லீம்களுக்கு கொஞ்சம் கூட அரசியல் தெளிவு இல்லை என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மை. எப்படி? இதோ விளக்கங்கள் வருகின்றன.

இந்த வார அங்குசம் வார இதழில்…

பொதுவாக அரசியல்கட்சியை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால் அதன் வெற்றியோ தோல்வியோ மக்களின் அங்கீகாரத்தைப் பொறுத்தது. அது மட்டுமல்ல இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் ஆணைய வரைமுறைக்கு உட்பட்டு யார் கட்சி ஆரம்பித்தாலும் பதிவு செய்து கொண்டு பதிவுச்சான்று அளித்துவிடும். ஆனால் தேர்தல் ஆணையத்தால் ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட சில விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதன்படி இந்திய அளவில்  அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்று கூட இல்லை.

இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் 6. அவை. 1. இந்திய தேசிய காங்கிரஸ். 2. பகுஜன் சமாஜ் கட்சி. 3. பாரதீய ஜனதா கட்சி, 4. ஆம் ஆத்மி கட்சி, 5. தேசிய மக்கள் கட்சி. 6. இந்திய கம்யூனிஸ கட்சி (மார்க்ஸிஸ்ட்)

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதேபோல இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகள் இன்றைய அளவில் 56  உள்ளன. இதில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் 5. இவற்றுள் முதன்மையானது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகும். இவைபற்றி ஒவ்வொன்றாகக் காண்போம்.

  1. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக். (Indian Union Muslim League – IUML)) அங்கீகார மாநிலம்: கேரளா. இந்திய அளவில் அதிகமான லோக்சபா எம்பிக்களை வைத்துள்ள கட்சி. மொத்தம் 3 எம்பிக்கள். கேரளாவின் மலப்புரத்தில் இருந்து E.T.முகம்மது பஷீர், கேரளாவின் பொன்னானியில் இருந்து அப்துஸ்ஸமது ஸமதானி, தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தில் இருந்து நவாஸ்கனி ஆகியோர் லோக்சபா எம்பிக்கள். இந்தியாவில் 2 மாநிலங்களில் லோக்சபா எம்பிக்கள் வைத்துள்ள ஒரே முஸ்லிம் கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கே! அதேபோல் கேரளாவில் இருந்து P.V.அப்துல் வகாப் மற்றும் ஹாரிஸ் பீரான் ஆகிய இருவர் இராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ளனர். ஆகவே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மொத்தம் 5 எம்பிக்களை இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது. அதேபோல சட்டசபையைப் பொறுத்து கேரளாவில் மொத்தம் 15 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதன் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னம் “ஏணி” ஆகும். கேரளாவில் பெற்ற அங்கீகாரத்தைக் கொண்டே தமிழ்நாட்டில் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் கட்சிகளில் சொந்த சின்னம் வைத்துள்ள ஒரே அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மட்டுமே என்பதை நினைவிற் கொள்க!

தொடரும்

—        H.உபைதுல்லாஹ்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.