மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 8

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 8

எழுத்தாளர்களிலேயே வித்தியாசமான எழுத்தாளர் இவர். “என்னவோ தெரியவில்லை. பத்திரிகைகளில் வெளிவருவதில் ஆர்வமற்றவனாகவே இருந்திருக்கிறேன்.” என்று கூறி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துபவர். ஆரம்ப காலத்தில் கவிஞர், பின்னர் சிறுகதையாளர், மொழிபெயர்ப்பாளர் எனத் தடம் பதித்தவர். ஆசிரியராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். மிகச் தேர்ந்த வாசகர், மூத்த எழுத்தாளர் திரு. எஸ். அற்புதராஜ் அவர்கள்.

 

மூத்த எழுத்தாளர் திரு. எஸ். அற்புதராஜ்
மூத்த எழுத்தாளர் திரு. எஸ். அற்புதராஜ்

Srirangam MLA palaniyandi birthday

‘சத்யஜித் ரே கதைகள்’ என்பது இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். தொடர்ந்து திருச்சியின் நவீன இலக்கிய இசங்களின் விமர்சகர் பேரா. எஸ். ஆல்பர்ட் அவர்கள் குறித்த நூல் ஒன்றினையும் எழுதி வெளியிட்டுள்ளார். இம் மாத புதிய மனிதனில் இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதை வெளிவந்துள்ளது.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

‘திருச்சி வாசகர் அரங்கம்’ என்கிற அமைப்பின் மூலமாக 1970-களில் வெளிவந்த “இன்று”, என்ற சிறுபத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவர். அதில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். இவரின் பல கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி வெளியிடப்படாமல் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று வங்க மொழிப் படைப்பான ‘பதிக் சந்த்’ என்கிற குறுநாவல்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இன்னும் இன்னுமாய் அச்சேற்றம் பெறாமல் காத்திருக்கும் இவரது கவிதைகளும் கதைகளும் விரைவில் அச்சேற்றம் பெற வேண்டும். தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதிக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்

 

-பாட்டாளி 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.