அழகுபடுத்துவது, சுத்தப்படுத்துவதாகுமா?

உய்யகொண்டான் கண்ணீர் விட்டு நண்பனிடம் தன் கதை கூறல்...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

என்ன நண்பா, இந்த வாரம் காலைல 6 மணிக்கெல்லாம் வந்துட்ட?
இல்ல, ‘சிட்டிசன் பார் உய்யங்கொண்டான்’ (Citizen For Uyyakondan) குழு காலை 6.30 மணியிலேயிருந்து உன்னை சுத்தம் செய்வதா பேஸ்புக்ல போட்டுருந்தாங்க, அதான் முன்னாடியே வந்துட்டேன்.

ஓ! அவங்களா… ஆமா, அவுங்க தொடர்ந்து 17 ஞாயித்துக்கிழமைகள்ல கூடி வாரா வாரம் என்னை சுத்தம் பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க… இந்த திருச்சி மக்களுக்கு இப்ப திடீர்னு என் மேல ஏன் நிறைய பாசம்னு தெரியல… என்னை எப்பவும் ஏதாவது ஒரு அமைப்பினர் வந்து என்னை சுத்தம் பண்ணிக்கிட்டுத்தான் இருப்பாங்க… அதே மாதிரிதான் இவங்களும்னு நா நெனைச்சுக்கிட்டு இருந்தேன்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ஆனா, இவங்களோட அணுகுமுறை வேற மாதிரியா இருந்துஞ்சு, என்னை மீட்டெடுத்தேயாக வேண்டும் என்று அவர்கள் போராடுவதை உணர்கிறேன். இந்த குழுவை டாக்டர் நரசிம்மராவ், ஆர்கிடெக்ட் விஜயகுமார், இன்ஜினியர் மனோஜ், சென்னையைச் சேர்ந்த மாணவன் அரவிந்த் ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைக்கிறார்கள் போல… சும்மா சொல்லக்கூடாது

உணர்வு பூர்வமா என்னை காப்பாத்தனும்ற நினைப்பு அவங்களுக்கு நிறையவே இருக்கு.. பார்ப்போம்… இன்னும் என்னை வருங்காலத்தில் சந்திக்க வரும்போது என்ன நடக்குதுன்னு நீ பாக்கத்தானே போற…
என்னை திருச்சிவாசிகளுக்கு அடையாளப்படுத்தியே தீரவேண்டும் என்ற இவங்களோட முயற்சியின் ஒரு பகுதியாக மாருதி மருத்துவமனைக்கு பின்புறமா இருக்குற என்னோட கரை மீது நடைபாதையையே உருவாக்கியிருக்காங்க… இவர்களோட முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும், இதுவர பல அமைப்புகள் எம்மேல காட்டுன அக்கறை மாதிரி இவங்களோட முயற்சியும் என்ன ஏமாத்திடுமோன்னு எனக்கு பயமாயிருக்கு.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

உண்மையில நான் அசுத்தமானவன் அல்ல, பலரோட சுயலாபத்திற்காக என்னை அசுத்தம் செய்ஞ்சாங்க, செய்யிறாங்க அப்படின்னு இவங்களுக்கெல்லாம் தெரிஞ்சாலும், என்னை அழகுபடுத்துவதையே தங்களது முயற்சியாக வச்சிருக்காங்க…

அந்த குழுவுல இருக்குற இன்ஜினியர் மனோஜிடம் ஒரு நாள் பேசினேன்… ‘‘நீ அடைந்த மாசினால் வேதனையுற்றவனில் நானும் ஒருவன், எனவே உன்னை மீட்டெடுக்கவேண்டும் என்ற முயற்சியின் விளைவாகவே சிட்டிசன் பார் உய்யங்கொண்டான் என்ற குழுவாக இணைந்தோம். இதுல, உன்னை சுத்தம் செய்ய விருப்பம் உள்ள ஆர்வலர்கள் அவங்களாகவே இணைந்தாங்க… உன்னைப்பொலிவுறச்செய்வதே எங்களோட வேலை…

இந்த, குழுவுல பல அமைப்பை சேர்ந்தவங்க இருக்காங்க. ஆனா, அவங்க யாரும் அவங்க சார்ந்திருக்கிற அமைப்பின் அடையாளத்தை வச்சுக்கிட்டு இந்த குழுவுல செயல்படமாட்டாங்க. ஒவ்வொருவரும் தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே இணைந்திருக்காங்க. இது என்னைக்குமே உன்னை சுத்தம் செய்யும் குழுவே அன்றி அமைப்பு இல்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நாங்க செய்யிற சிறு சிறு முயற்சி நிச்சயம் உன்னிடம் இந்த நகரத்தோட சாக்கடை தண்ணீர் கலக்குறதிலிருந்து மீட்டெடுக்கும், அதுமட்டும் இல்ல, மூணுலேயிருந்து நாலு வருசத்துக்கு உன்னை சுத்தம் செய்ய நாங்க திட்டம் வச்சிருக்கோம்.

அதேபோல உன்னை சுத்தம் செய்ய ஆரம்பிச்ச உடன, நிறைய பேர். என்ன வேண்டும்? ஏதேனும் நன்கொடை வேணுமான்னு கேட்கிறாங்க. ஆனா, ஒரு விசயத்துல நாங்க தெளிவா இருக்கோம். யாரிடமும் பணமாக ஏதும் வாங்க கூடாதுன்னு.. நீங்க இதுல பங்கு பெறனும்னு நினைச்சா.. எங்களுக்கு வேலை செய்ய தேவைப்படுற பொருட்களா வாங்கி கொடுத்திடுங்கன்னு சொல்லிடுறோம். நிறைய பிசினஸ்மேன்கள் ஜெ.சி.பி இயந்திரம், எம்.சண்ட், ஜல்லி, கையில மாட்டிக்க கையுறை போன்ற அவங்களால எது முடியுதோ அதை வாங்கி தராங்க… மாநகராட்சியும் அவங்க பங்குக்கு உன்னை சுத்தம் செஞ்சு எடுக்கும் கழிவுகள அப்புறப்படுத்த உதவுறாங்க… உங்களுக்கு ஒத்துழைப்பு தரோம்னு கலெக்டரும் சொல்லியிருக்காரு..’’ அப்படின்னார்.

அதுமட்டுமல்ல நண்பா, இதபத்தி யோசிக்கும் போது மற்றொரு கேள்வி எனக்குள்ளேயே எழுந்தது. திருச்சியில இருப்பவங்களுக்கு என்ன சுத்தமா வச்சுக்கனும்னு எண்ணம் தோன்றுவது சரி, சென்னையில் இருந்து இங்க படிக்க வந்தவருக்கு நம்ம மேல என்ன அக்கறை. இத தெரிஞ்சிக்கலாம்னு அரவிந்திடம் கேட்டேன்.. அப்போ அவர், ‘‘நான் சென்னைக்காரன், தஞ்சாவூருல படிக்கிறேன். என்விரான்மன்டல் பவுண்டேசன் ஆப் இந்தியா (Environmental Foundation of India) என்ற என்.ஜி.ஓ.வில் உறுப்பினரா இருக்கேன்.

இதுவரை இந்தியா முழுவதிலும் 8 மாநிலத்துல 89 ஏரிகள தூர்வாரியிருக்கோம். இதனால, இங்கு உன்னை டெக்னிக்ல்லா எப்படி சுத்தம் செய்யலாம்னு இந்த குழுவுல இணைஞ்சு குழுவை சேர்ந்தவங்கட்ட சொல்லி உன்னை சுத்தம் செய்ய முயற்சி பண்ணிக்கிட்டுருக்கேன்’ என்று சொன்னிச்சு அந்த தம்பி.

இது எனக்கு நம்பிக்கையை தந்தாலும், இதெல்லாம் என்னை அழகுபடுத்தத்தானே பயன்படும். இந்த நகரத்தின் மொத்த சாக்கடையும் என்னிடம் வந்து சேராம தடுக்கவோ? என்னோட முக்கிய பிரச்சினையான இந்த நகரத்தோட கட்டமைப்பில் மழை வடிகால் இல்லாததால தான் நான் நாசமாகுறேன்றதே உணராம இருக்காங்க. மொத்த நகர கட்டமைப்புல இருக்குற சாக்கடை தண்ணீய என்னோட கலக்காம எப்படி வெளியேத்தலாம்றதுக்கு ஒரு திட்டம் இவர்களிடமோ அதிகாரிகளிடமோ இல்லை.

எனக்காக சமூக ஆர்வலர் சார்லஸ்ன்ற தம்பி மட்டும், என்ன வந்து சேருற சாக்கடையெல்லாம் மாநகராட்சியாலதான்னு ஒரு கேஸ போட்டார், அதுமட்டுமில்லாம உண்ணாவிரதமெல்லாம் இருந்தாரு. இருந்தாலும், நான் சாக்கடையாதான் திருச்சிய வலம் வரேன். ஒவ்வொரு வருஷமும் யாராவது சிலர் என்னை சுத்தம் செய்ய கையில் உறைய மாட்டிக்கிட்டு வந்துடுறாங்க… இதுனால திருச்சில இருக்குற எல்லா பத்திரிக்கையும் ஒரு மாசம் என்னை வச்சு செய்தி வெளியிடுவாங்க. அப்புறம் வழக்கம் போலத்தான். ஆனா, இந்த சிட்டிசன் பார் உய்யகொண்டான் குழுவால ஏதாவது மாற்றம் வருதான்னு பார்ப்போம். இங்க இருக்குற இந்த நிலமை மாறனும்னா ஒரே வழி உயிராதாரமா உள்ள தண்ணீய நஞ்சா மாத்துற ஒவ்வொருத்தரும் அத தன்னோட பாவ கணக்குல சேருறத சிந்திச்சா போதும்.

நம்ம மனசு சுத்தமா இருந்தா கட்டாயம் சுத்தி உள்ள எல்லாத்தையும் சுத்தமா வச்சிக்கனும்ற எண்ணம் எப்பதான் இந்த மனுசங்களுக்கு வரப்போது ன்னே தெரியல… என்னை புதுசா மாத்துனா இந்த ஊரு தன்னால செழிப்பாயிரும்… சரி நீ வந்து ரொம்ப நேரமாயிருச்சு… அடுத்த வாரம் வா.. இந்த மாநகராட்சி என்னன்ன அட்டூழியம் பண்ணாங்கன்னு சொல்றேன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.