எதையும் சமாளிப்பேன் என்ற எம்.ஜி.ஆர்

0

17.2.1980 அன்று தமிழகத்தை அரசியல் புயல் தாக்கியது. இந்தியா முழுவதுமாக 9 மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. மத்தியில் ஆட்சி செய்த இந்திராகாந்தி அரசால். அதில், தமிழ்நாட்டில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அரசும் கலைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தோல்வியில் இருந்து மீழ்வதற்குள் எம்.ஜி.ஆர் அரசு மீது மத்தியில் அரசாண்ட இந்திராகாந்தியால் அடுத்த நெருக்கடி தரப்பட்டது. தேர்தல் வேலைகளை உயர்மட்டக்குழு ஒன்று மூலம் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டது. திடீரென நாஞ்சில் மனோகரன் தி.மு.கவில் சேர்ந்தார்.
அவரது விலகல் எம்.ஜி.ஆருக்கு மிகுந்து வருத்தத்தைத் தந்தது.

எம்.ஜி.ஆருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், காமராஜ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அ.இ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து எம்.ஜி.ஆருடன் கைகோர்த்தனர். தொகுதிகள் பிரிப்பட்டது. அ.தி.மு.கவிற்கு 168, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, கா.கா.தே.க 12, காமராஜ் காங்கிரஸ் 7 இன்னும் இதரகட்சிகளுக்கு தொகுதிகள் பிரித்துகொடுக்கப்பட்டது.

நெருக்கடிகள் பல இருந்த போதும் வியூகம் வகுப்பத்தில் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர். ‘’மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை, அரசியல் காரணங்களுக்காக அநியாயமாக கலைத்துவிட்டதற்கு, தகுந்த நியாயம் வழங்கவேண்டும்’’ என்று மக்களிடம் முறையிட்டார். என்ன தவறுசெய்துவிட்டோம். எங்கள் ஆட்சியியை ஏன் கலைத்தார்கள்? என்று மக்களைக் கேட்டார்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த சாதனைகளை பட்டியலிட்டது தவறா? இது தவறா? என்று மக்களிடம் எம்.ஜி.ஆர் கேட்டார். இது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாங்கள் என்ன தவறு செய்தோம்? தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அளித்த தீர்ப்பு தவறு என்றால் அதை இப்போது, இந்த சட்டசபை தேர்தலில் திருத்தி எழுதுங்கள்.

அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்தார் எம்.ஜி.ஆர். தி.மு.க, காங்கிரஸ் தலா 109 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகின மக்களின் அமோக ஆதரவுடன் தன் முதல்வர் நாற்காலியை மீண்டும் கைப்பற்றினார். எம்.ஜி.ஆர். மிகக்குறைந்த இடங்களில் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சியுமான காங்கிரஸ் வெற்றிபெற்று தோல்வியைத்தழுவினர். அ.இ.அ.தி.மு.கவிற்கு கிடைத்திருக்கும் இந்த மகத்தான வெற்றி எம்.ஜி.ஆர் மீது மக்கள் கொண்டிருக்கும், அன்பிற்கும், மதிப்பிற்கும் அடையாளமாகும்.

அவரது, நியாயமாக, நேர்மையான, லஞ்ச, ஊழல் அற்ற ஆட்சிக்கு தமிழக மக்கள் வழங்கிய நற்சான்றிதழ். எதிர்கட்சிகள் எம்.ஜி.ஆர் மீது கூறிய அபாண்டமான லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் அவருக்கு வெற்றி மாலையாக மாறியது. தேர்தலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் வெற்றி பற்றி எம்.ஜி.ஆர் கூறியது ‘’மக்கள் இந்த ராமசந்திரனை நம்பினார்கள், ராமசந்திரன் மக்களை நம்பினான்’’.
மாநிலத்தில் மக்கள் திலகத்தின் எம்.ஜி.ஆர் ஆட்சி!, மத்தியில் இந்திரா ஆட்சி!!.

– ஹரிகிருஷ்ணன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.