மீண்டும் பக்கவாத நோய் வராமல் தடுக்கும் சிகிச்சை முறை

0

ஒருமுறை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, மீண்டும் பக்கவாத நோய் வராமல் தடுக்கும் சிகிச்சை முறை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

இதற்கு பக்கவாத நோய் எந்த காரணியால் வந்தது என்பதை முதலில் கண்டறிந்து அதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதை பற்றி 5 முதல் 15 வாரத் தொடரில் நான் விரிவாக கூறியிருந்தேன். இதில் மிகவும் முக்கியமான கருத்துக்களை நினைவு கூறினால் தான் தடுக்கும் சிகிச்சை முறை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.


பக்கவாத காரணிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

1. மாற்ற முடியாதவை (வயது, பாலினம், மரபணு).

- Advertisement -

- Advertisement -

2. மாற்ற கூடியவை – இதில் மிகவும் முக்கியமானது நம் வாழ்வியல் முறை (உணவு, உறக்கம், புகை மற்றும் மதுப் பழக்கம்), அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மாரடைப்பு, இதயத்தின் இயக்க கோளாறுகள், இதயத்தின் பிறவி மற்றும் வால்வுகளில் வரும் கோளாறுகள், அதிகமான கொழுப்பின் அளவு, இரத்த உறைதலில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவைகள் அடங்கும்.

ஒரு முறை பக்கவாத நோய் வந்தவருக்கு, மீண்டும் பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்புகள் முதல் ஒரு வருடத்தில் அதிகம் (50 சதவிகிதம்). இதைத் தடுக்க, எதனால் அவருக்கு பக்கவாத நோய் வந்தது என்பதற்கான மேற்க்கூறிய காரணிகளை முதலில் கண்டறிய வேண்டும். அதாவது அவரது வாழ்வியல் முறையை பற்றியும், ஏதேனும் தவறான பழக்கவழக்கங்களால் வந்ததா என்பதைப் பற்றியும், பக்கவாத நோயை ஏற்படுத்தும் பிற காரணிகளால் வந்ததா என்பதை பற்றியும் ஒரு பட்டியல் தயார் செய்து, இதில் எந்தெந்த காரணிகளை நோயாளியால் மாற்ற முடியும் என்பதை பற்றி நோயாளிக்கு அறிவுறுத்துகிறோம்.

வாழ்வியல் முறை மாற்றங்கள் பற்றி முதலில் கூறுகிறேன்.

1. பக்கவாத நோய் வருவதற்கு முன்னால் நாம் எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம் என்பதை எக்காரணத்தை கொண்டும் ஒப்பிட்டு பார்க்க கூடாது.

2. ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் ஏற்பட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

3. உண்ணும் உணவில் அரோக்கியத்தை தரும் இயற்கை உணவுகளை உண்ண வேண்டும்

4 bismi svs

4. மைதாவினால் ஆன பண்டங்கள், இனிப்பு வகைகள், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் மாமிச உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து விடவேண்டும்.

5. பசிக்காமல் உணவை உண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

6. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு கண்டிப்பாக உணவு உண்ணக் கூடாது.

7. பகலில் அதிக நேரம் உறங்குவதை பழக்கமாக்கிக் கொள்ளாமல் இரவில் 7 மணி நேரம் உறங்க வேண்டும்.

8. தன்னால் முடிந்த வேலைகளை தானே செய்து கொள்ள வேண்டும்.

9. புகை, மது மற்றும் போதை பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தை கட்டாயம் கைவிடவேண்டும். சில நோயாளிகள் சிறிது சிறிதாக குறைத்து பிறகு நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். இவ்வாறு செய்யாமல் எல்லா கெட்ட பழக்கங்களையும் உடனே விட்டு விட வேண்டும்

10. ஒரளவு முன்னேற்றம் அடைந்த பின் வேலை வேலை என்று மன அழுத்தத்துடன் சுற்றக்கூடாது. உடலுக்கும் மனதிற்கும் இடையே உள்ள போராட்டத்தை விடுத்து, உடல் மற்றும் உள்ளத்தின் அமைதியை நாட வேண்டும்.

11. நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலையும், உறுதியையும் அதிகரிக்கும் வண்ணம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

12. உள்ளத்தின் அமைதிக்காக தியானப் பயிற்சி செய்யவேண்டும்;.

13. நோயாளிக்கு அன்றாட வேலைகளை பூர்த்தி செய்வதற்கே சிரமங்கள் இருக்கலாம், நாம் வீட்டில் உள்ளவர்களுக்கு பாரமாக இருக்கிறோம் என்ற எதிர்மறையான எண்ணத்தை விடுத்து, நான் விரைவில் குணமாகி விடுவேன் என்று மனதிற்கு நம்பிக்கை சொல்ல வேண்டும்.

அடுத்து பக்கவாத நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்ப்போம்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.