கிணறாக மாறிய என் கதை…தொடர் – 4

0

 

கிணறாக மாறிய என் கதை… தொடர் – 4

https://businesstrichy.com/the-royal-mahal/

என்ன நண்பா! ஏதோ ஆழ்ந்த யோசனையில இருக்க மாதிரி இருக்கு……
இல்ல…. எங்க அப்பா சொன்னாரு 10வருசத்துக்கு முன்னாடி உய்யங்கொண்டான்ல நான் குளிச்சு இருக்கேன். ஆனா இப்போ குளிச்சா அவ்வளவு தான். தோல்வியாதி வந்துருன்னு சொன்னாரு….. அவருக்கு அவங்க அப்பா விட்டுவச்சிட்டு போனத ஏன்? எனக்கு எங்க அப்பா செய்யலேன்னு யோசிச்சிட்டு இருக்கேன்….

உங்க அப்பாவ மட்டும் ஏன் குத்தம் சொல்லற, அவரு ஒருத்தரால மட்டும் எப்படி இத மாத்தி இருக்க முடியும். அதுக்குத் தானே பொதுப்பணித்துறை, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம், மாநகராட்சின்னு எல்லாம் இருக்கு. என்ன பாதுகாக்கன்னு உங்க அப்பா கொடுக்கிற 100பங்கு உழைப்புக்கு, இவர்களின் ஒரு பங்கு உழைப்பு சமமாகாதா, இதை நீ ஏன் இப்படி சிந்திக்க தவறா. இது உன்னோட பிரச்சனை மட்டும் இல்ல,

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

பெரும்பான்மையானவங்களோட பிரச்சனை இதான்.
அப்ப இது வரைக்கும் அவங்க யாரும் உன்னை கண்டு கொள்ளவே இல்லையா?….

ச்சச்சச்ச…… அப்புடில்லாம் இல்ல


கடந்த 2015ம் ஆண்டு அரசு சார்பில் என்னைய ஆறுகண்ணில் இருந்து செந்தண்ணீர்புரம் வரைக்கும் 6கி.மீ தூர்வாரினாங்க, பாலக்கரைல இருந்து பெரியார் பாலம் வரைக்கும் தடுப்பு சுவர் கட்டினாங்க, அப்புறம் அதுக்க மேல குப்பைய உள்ள போட முடியாத அளவுக்கு கம்பிவேலி போட்டாங்க, இது எல்லாத்துக்கும் சேத்து ரூ.11 கோடி பில்லும் போட்டாங்க……

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வாய்க்காலில் தேங்கி இருக்கும் மண்ணாலும், குப்பைகளினாலும் ஏற்படும் அடைப்பின் காரணமாக தண்ணீர் முன்னோக்கி செல்லாமல் ஒரே இடத்திலேயே நின்றுவிடும். இதனால், தண்ணீர் யாருக்கும் பயனற்றும், கழிவுகள் கலந்து அசுத்தமாகியும், தூர்நாற்றம் அடிக்கும் நிலைமை ஏற்படுகிறது. ஆதனால், அதை சுத்தம் செய்து, குப்பைகளை அள்ளி, மண்ணை எடுத்து கரையோரம் ஏற்றி சாய்தளம் போல் அமைத்து கரைஅரிக்காதவாறு இருக்கி, தண்ணீர் முன்னோக்கி தடையின்றிசெல்ல வழிவகை செய்வதே தூர்வாருதலின் முக்கிய நோக்கம். அந்த வகையில் மாநகராட்சிக்குள் திருச்சி வாசிகளால் அதிகப்படியான, கழிவுகளுக்கு நான் உள்ளாக்கப்பட்டதால், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் என்னை தூர்வார அரசு முன்வந்தது. இதை முறையாக செய்யாமல் இன்று தமிழகத்தில் பல குளங்களையும், ஏரிகள், வாய்க்கால்களையும் இழந்து விட்டோம் என்பது வேறு கதை.

ரூ.11கோடியா………. அதெல்லாம் சரி வாய்க்காலின் கரை சாய்தளமாக இருக்கனும்னு சொல்லற ஆன உனக்கு மட்டும் செங்குத்தா தடுப்பு சுவர் எதுக்காக கட்டினாங்க!..

அதுதான் இதுவரைக்கும் எனக்கு தெரில. பொதுவா என்னை போன்ற வாய்க்காலுக்கு இருபுறமும் கருங்கற்களைக்கொண்டு வாய்காலின் உள்ளே இருந்து கரைவரையில் சாய்தளமாக அமைப்பார்கள். அதற்கிடையில் ஆங்காங்கே படித்துறைகள் இருக்கும் குளிக்கும் மக்கள் அதை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான உலக நாடுகளில் இதுவே முறை. ஆனால், இங்கோ நேர்மாறாக தடுப்புச் சுவர் என்ற பெயரில் செங்குத்தாக சுவர்கட்டி என்னை கிணறு மாதிரி மாத்திட்டாங்க. தெரியாமல் நீரில் உள்ளே விழுபவர்கள் கூட கரைக்கு ஏறிவர முடியாது. மேலும், இது போன்று செங்குத்தாக தடுப்புச்சுவர் கட்டுவதினால், குளித்துவிட்டு மேலே ஏற நினைப்பவர்களால் கூட கரைக்கு வர முடியாமல் சிரமப்படும் சூழ்நிலை ஏற்படுது.

சாய்தளம் மாதியான வடிவமைப்பே மக்களுக்கும் எனக்குமான தொடர்ப்பு நெருக்கமாக அமைய வழிவகுக்கும். ஆனால், தற்போது உள்ள தடுப்பு சுவரினால் மக்கள் என்னை காட்சிப்பொருளாக மட்டுமே பார்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகிருச்சு. அதுமட்டுமில்லாம, இது வரைக்கும் திருச்சி மாநகராட்சிக்குள்ள மட்டும் எனக்குள்ள விழுந்து 5பேர் இறந்துட்டாங்க. அதுக்கு முக்கிய காரணமாக இருக்கறது தடுப்புச்சுவர் இந்த வடிவமைப்புல இருக்கறது தான்.

எனக்குள்ள இருக்கக்கூடிய பாட்டில்கள், பிளாஸ்டிக்ஸ் மாதிரியானபொருட்கள எடுக்கமுடியாம இருக்கறதுக்கு இது ஒரு காரணமா இருக்கு. தடுப்புச்சுவருக்கு மேல இரும்புக்கம்பிய வச்சா, மக்கள் என்மேல குப்பைகளைக்போடா மாட்டாங்கன்னு எப்படி முடிவு பன்னுனாங்கனு தெரியல. அள்ளமுடியாத குப்பைகள் என்மீது இருப்பத திருச்சிவாசிகள் அனைவரும் தினம், தினம் அத பாத்துக்கிட்டுதா இருக்காங்க. இதுக்கு காரணம் அவங்க யாரும் என்னை வாய்க்காலாக நினைக்கல. உணர்வு ரீதியா என்னுடன் யாரும் தொடர்புல இல்ல. ஏனா அவங்கள பொறுத்த வரைக்கும் நான் ஒரு சாக்கடை.

நா நினைக்கறேன் நகரத்துக்குள்ள சாக்கடை போறதுக்கு இவங்களால ஒரு பாதாள சாக்கடைய அமைக்க முடியாததால என்னைய அழகுபடுத்தறேங்கற பேருல செங்குத்தா தடுப்பு சுவர்கட்டி சாக்கடையா மாத்தறதுதான்… அவங்க திட்டம்னு… இதுல இன்னொரு பிரச்சனையும் இருக்கு. தொடர்ந்து சாக்கடைபோய்க்கிட்டே இருக்கறதால தடுப்பு சுவர்கள் எல்லாம் தண்ணீலேயே ஊறிப்போய் இடிந்து விழும் அபாயமும் இருக்கு. அப்புறம் இவங்க செலவு பண்ண மொத்த பணமும் தேவையில்லாததா ஆகிடும். அதுமட்டுமில்ல இது போன்ற செலவ, இவங்க ஒரு முறை, இரு முறை இல்ல பல முறை பண்ணியிருக்காங்க…… என்னை சுத்தம் செய்யறவங்களுக்கு இதெல்லாம் தெரியுமான்னு எனக்குதெரில, ஆனா எந்த வேலைசெஞ்சாலும் அடிப்படைய தெரிஞ்சு செய்யனுங்கறது தான் நினைக்கிறது.

சரி ரொம்ப நேரம் ஆகிருச்சு வெயில்வேற சுள்ளுன்னு அடிக்கிது நீ வீட்டுக்கு போய்ட்டுவா……

அடுத்த வாரம் பாக்கலாம்……

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.