அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உலகின் முதல் அறுவை சிகிச்சை ! பைபிள் புதிரா? புனிதமா? – தொடர் – 05

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

உலகின் முதல் அறுவை சிகிச்சை ! பைபிளில் முதல் புத்தகமான ஆதியாகமத்தில், மனித படைப்பின் போது கடவுள் செய்த ‘அறுவை சிகிச்சை’ குறித்து விளக்கமா சொல்கிறது. ஆதியாகமம் 2:21-22 – கடவுள் ஆதாமின் மேல் ஒரு “அயர்ந்த நித்திரையை” வரப்பண்ணினார். இது இன்றைய நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்து போன்ற ஒரு நிலை என ஒப்பிடப்படுகிறது.

ஆதாம் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் மூடினார். இதுவே உலகின் முதல் அறுவை சிகிச்சை என்று வர்ணிக்கப்படுகிறது. கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த அந்த விலா எலும்பை ஒரு ஸ்திரீயாக (ஏவாள்) உருவாக்கி, அவளை ஆதாமிடம் கொண்டு வந்தார். இதன் மூலம், ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் இணையானவர்கள் மற்றும் ஒரு உடலாக இருக்கிறார்கள் என்பதை பைபிள் உணர்த்துகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

பைபிளில் “அயர்ந்த நித்திரை” என்று குறிப்பிடப்படுவது, நவீன அறுவை சிகிச்சையின் முதல் படிநிலையான General Anesthesia-க்கு ஒப்பானது. நோயாளிக்கு வலி தெரியாமல் இருக்கச் செய்யப்படும் இந்த முறையைத் தான் கடவுள் ஆதாமுக்குச் செய்தார் என விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

“எலும்பை எடுத்துவிட்டு அந்த இடத்தைச் சதையினால் மூடினார்” என்பது இன்றைய பிளாஸ்டிக் சர்ஜரி அல்லது Reconstructive Surgery-க்கு இணையானது. காயத்தை மூடி தையல் போடுவது அல்லது திசுக்களைக் கொண்டு சரி செய்யும் நுட்பம் இதில் பொதிந்துள்ளது.

யாவரும் கேளீர்

அறிவியல் ரீதியாக, மனித உடலில் மீண்டும் வளரக்கூடிய ஒரே எலும்பு விலா எலும்பு (Rib Bone) ஆகும். விலா எலும்பைச் சுற்றியுள்ள ‘பெரியோஸ்டியம்’ (Periosteum) என்ற சவ்வு சேதமடையாமல் இருந்தால், அந்த எலும்பு மீண்டும் வளரும். கடவுள் ஏன் கை அல்லது கால் எலும்பை எடுக்காமல், விலா எலும்பை எடுத்தார் என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த உயிரியல் காரணமாகக் கருதப்படுகிறது. National Center for Biotechnology Information (NCBI) இது போன்ற எலும்பு வளர்ச்சியைப் பற்றி விளக்குகிறது.

ஆதாமிடமிருந்து ஒரு பகுதியை எடுத்து ஏவாளைப் படைத்தது என்பது, ஒரு உயிரணுவில் இருந்து மற்றொரு உயிரை உருவாக்கும் Cloning அல்லது மரபணு மாற்ற நுட்பத்தை (Genetic Engineering) அடையாளப்படுத்துவதாக அறிவியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

  ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.