திருச்சி மாவட்டத்தில் எந்தெந்த தேதியில் யார் தலைமையில் ஜமாபந்தி நடக்கப்போகுது ?

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 1434-ஆம் பசலி ஆண்டிற்கான (2024-2025) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும், 20.05.2025 முதல் தொடங்கி 30.05.2025 வரை நடைபெற உள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மணப்பாறை வட்டத்திலும்,.

மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் திருவெறும்பூர் வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீரங்கம் அவர்கள் தலைமையில் ஸ்ரீரங்கம் வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் இலால்குடி அவர்கள் தலைமையில் மண்ணச்சநல்லுார் வட்டத்திலும்,

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஜமாபந்தி
ஜமாபந்தி

வருவாய் கோட்டாட்சியர் முசிறி அவர்கள் தலைமையில் முசிறி வட்டத்திலும், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் மருங்காபுரி வட்டத்திலும், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் தொட்டியம் வட்டத்திலும், உதவி ஆணையர்(கலால்), திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் இலால்குடி வட்டத்திலும், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டத்திலும்,

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் துறையூர் வட்டத்திலும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.