இந்த வார வேலைவாய்ப்பு செய்திகள் (22-10.2026 – 27.10.2026)
எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஆர்டிசன்’ பிரிவில் பிட்டர் 278, வெல்டர் 104, மெஷினிஸ்ட் 101, எலக்ட்ரீசியன் 90, டர்னர் 52, எலக்ட்ரானிக் மெக்கானிக் 23 உட்பட மொத்தம் 660 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஐ.டி.ஐ.,
வயது : 14 – 27 (1.10.2026ன் படி)
தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 1072. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 472
கடைசிநாள் : விரைவில் அறிவிக்கப்படும்
விவரங்களுக்கு : careers.bhel.in
அழைக்கிறது டாடா மையம்
மத்திய அரசின் கீழ் செயல்படும் ‘டாடா மெமோரியல் மையத்தில்’ காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிரேடு உதவியாளர் 23, மெடிக்கல் ஆபிசர் 15, கிளர்க் 6, டெக்னீசியன் 5, நிர்வாக அதிகாரி 5, அட்டென்டன்ட் 4, சயின்டிபிக் ஆபிசர் 2 உட்பட மொத்தம் 72 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது : 18 – 50 (28.10.2026ன் படி)
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 300. பெண்கள். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 28.10.2026
விவரங்களுக்கு : tmc.gov.in
மத்திய பட்டு வாரியத்தில் வேலை
மத்திய பட்டு வாரியத்தில் (சி.எஸ்.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
‘செரிகல்சர் அசிஸ்டென்ட்’ பிரிவில் மொத்தம் 16 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.இ., (செரிகல்சர் /அக்ரிகல்சர்/பயாலஜி/ தாவரவியல்/விலங்கியல்)
வயது: 18-35 (6.11.2026ன் படி)
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 30.10.2026
விவரங்களுக்கு: csb.gov.in
“யூகோ“ வங்கியில் ‘அப்ரென்டிஸ்’ வேலை
பொதுத்துறையை சேர்ந்த ‘யூகோ’ வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
‘அப்ரென்டிஸ்’ பிரிவில் மேற்கு வங்கம் 86, உ.பி., 45, ஒடிசா 41, ராஜஸ்தான் 37, பீஹார் 34, தமிழகம் 21 உட்பட மொத்தம் 530 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
வயது : 20 – 28 (1.10.2026ன் படி)
ஸ்டைபண்டு : மாதம் ரூ. 16,650
தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200
கடைசிநாள் : 29.10.2026
விவரங்களுக்கு : uco.bank.in
‘ஆயில் இந்தியா‘ நிறுவனத்தில் வேலை
‘ஆயில் இந்தியா’ நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் ஆபிசர் 18, சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 6, ரிசர்ச் சயின்டிஸ்ட் 5, ஹிந்தி ஆபிசர் 2, செக்ரட்டரி 1 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., / ஐ.சி.ஏ.ஐ.,
வயது : 18 – 37 (14.11.2026ன் படி)
தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 14.11.2026
விவரங்களுக்கு : oil-india.com
Comments are closed, but trackbacks and pingbacks are open.