ஐடிஐ, பாலிடெக்னிக் பயின்ற மாணவா்களுக்கு வேலைவாயப்ப்பு முகாம்!!
தமிழக அரசின் நிறுவனமான டான்செம் மற்றும் டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான இமயம் பொறியியல் கல்லூரி இணைந்து ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற மாணாக்கர்களுக்காக வேலைவாயப்ப்பு முகாமை நடத்தவிருக்கிறது.
தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு அந்த வேலை சார்ந்த பயிற்சிகளை அளித்து மாணாக்கர்கள் வேலையில் அமர்த்தும் பணியை டான்செம் சிறப்பாக செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முகாமை வருகிற ஏப்ரல் 16, 2025 அன்று நடத்தவிருக்கிறது.
காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனத்தின் சார்பில் நேர்காணல் நடத்தப்படும். அதில் வெற்றியடைந்த இளைஞர்களுக்கு அன்றே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சியில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு:
மின்னஞ்சல் : gcc.tansam@gmail.com
தொடர்பு எண்கள் : +91 8695881001 / 91 9566359960 / +91 8681878889 / +91 9514838485
வேலைவாயப்பு நடைபெறும் இடம்:
இமயம் பொறியியல் கல்லூரி, துறையூர் நாமக்கல் சாலை, கண்ணனூர்,
துறையூர் திருச்சி மாவட்டம்.