அங்குசம் செய்தி எதிரொலி : அதிரடி காட்டிய கலைமகள் சபா அதிகாரிகள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வீடியோவைக் காண

 

இந்த வார அங்குசம் வார இதழில்…

”ஆக்கிரமிப்பில் … கலைமகள் சபா சொத்துக்கள்!” என்ற தலைப்பில், கடந்த செப்-09 தேதியிட்ட அங்குசம் செய்தி வார இதழில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் – ஆரணி செல்லும் சாலையில் SSS மகளிர் கல்லூரி எதிரில் சுமார் 15 ஏக்கர் அளவுள்ள காலியிடத்தை பாதுகாத்து கலைமகள் சபா நிர்வாகத்தின் சார்பில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில், சமூகவிரோதிகள் சிலர் அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் பெயர்ப்பலகையின் மீது மஞ்சள் வண்ணத்தை பூசி அழித்திருப்பதாக, திருவண்ணாமலையைச் சேர்ந்த கலைமகள் சபாவின் உறுப்பினர் சங்கர் நம்மிடம் தெரிவித்த தகவலை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

கலைமகள் சபா அதிரடி!அங்குசம் இதழில் வெளியான செய்தியை, கலைமகள் சபா நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம். இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு களநிலவரத்தை தெரிந்து கொண்டதோடு, மஞ்சள் வண்ணம் பூசி அழிக்கப்பட்ட பெயர்ப்பலகையை மீட்டு ” இந்த இடம் கலைமகள் சபாவுக்கு சொந்தமானது” என்பதாக தொடர்பு எண்ணுடன் கூடிய பெயர்ப்பலகையை நிறுவியிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு என்று கலைமகள் சபாவின் மேலாளர்கள் நியமிக்கப்படாத நிலையில், கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். உத்தரவின்பேரில், சென்னையிலிருந்தே ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இப்பணியை செய்து முடித்ததாக, கலைமகள் சபா நிர்வாக தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழகத்தில் மட்டும் 33 மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு சொந்தமான இடங்கள் உள்ள நிலையில், இவற்றுள் பெரும்பாலான சொத்துக்கள் பிரதான சாலையோரம் அமைந்திருப்பதால், உள்ளூர் ஆக்கிரமிப்பாளர்கள் பலரும் பல்வேறு வகைகளில் ஆக்கிரமிப்பை தொடர்ந்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்த பின்புலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலைமகள் சபா உறுப்பினர் சங்கரின் முன்முயற்சியும்; அதன்மீது உடனடி கவனத்தை செலுத்தி நிலத்தை மீட்ட கலைமகள் சபா நிர்வாகத்தின் எதிர்வினையும் கவனத்தை பெற்றிருக்கிறது.

உங்களது மாவட்டத்திலும் இதுபோன்ற அந்நியரின் ஆக்கிரமிப்பில் கலைமகள் சபா – சொத்துக்கள் இருக்கும்பட்சத்தில், அவை குறித்த புகைப்பட ஆதாரங்களோடு எமக்கு அனுப்பி வைத்தால் உடனடியாக செய்தியாக்க காத்திருக்கிறோம்.

செய்திகளை 94888 42025 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள்.

வீடியோவைக் காண

–  அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.