‘கட்டாகுஸ்தி-2’ சூப்பர் ஹிட்! ஐசரி கணேஷ் கொடுத்த குஷி கிஃப்ட்!
கடந்த 03—ஆம் தேதி ஆயிரம் திரைகளில் வெளியான ‘கட்டாகுஸ்தி-2’ விமர்சன ரீதியாகவும் கலெக்ஷன் ரீதியாகவும் சூப்பர்டூப்பர் ஹிட்டாகியுள்ளது. ஐந்தே நாட்களில் 23 கோடி கலெக்ஷனை அள்ளியதால், வெரி ஹேப்பியான தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம் ஐசரி கணேஷும், படத்தின் ஹீரோ விஷ்ணு விஷாலும் மீடியாக்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லும் நிகழ்ச்சியை கடந்த 09ஆம் தேதி நடத்தினார்கள்.
சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஹீரோ விஷ்ணு விஷால், டைரக்டர் செல்லா அய்யாவு, ஐசரி கணேஷின் மகள்& இணைத் தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ், ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி, பேபி ஷாரா, டீச்சர் மோக்ஷா, கருணாஸ், முனீஸ்காந்த், காளிவெங்கட், லிஸி ஆண்டனி, ஒளிப்பதிவாளர் பாஸ்கரன், மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன், உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
டைரக்டர் செல்லா அய்யாவு சென்னை சாலிகிராமத்தில் பிஸியோதெரபிஸ்ட் டாக்டராக இருந்த உண்மையச் சொன்னார் முனீஸ்காந்த். பேசிய மற்ற அனைவருமே படத்தின் வெற்றிக்குக் காரணமான மக்களுக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாக்களுக்கும் நன்றி சொன்னார்கள்.
வேல்ஸ் மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்காமல், சவீதா காலேஜில் இடம் கிடைத்த கதையைச் சொல்லி கலகலப்பூட்டினார் டைரக்டர் செல்லா அய்யாவு.
ஐசரி கணேஷால் தான் இந்தப் படம் ஆரம்பமாகி, வளர்ந்து, ரிலீசாகி இப்ப மாபெரும் ஹிட்டடித்துள்ளதாகக் குறிப்பிட்ட விஷ்ணு விஷால், எல்லாப் புகழும் டைரக்டர் செல்லா அய்யாவுக்கே என பெருமிதம் பொங்க பேசினார்.
”வேல்ஸ் காலேஜில் இடம் கிடைக்காத செல்லா அய்யாவுக்கு, இப்ப வேல்ஸ் சினிமாக் கம்பெனியில டைரக்டர் சான்ஸ் கிடைச்சது மகிழ்ச்சி” என பேசிய ஐசரி கணேஷ், செல்லா அய்யாவுக்கு பத்து பவுனில் தங்கச் சங்கிலி & பிரேஸ்லெட் அணிவித்து குஷிப்படுத்தினார். இந்த குஷி போதாதுன்னு ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபிள்யூ காரும், படத்தில் நடித்த அத்தனை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவருக்கும் வெள்ளி நாணயங்களைப் பரிசாக வழங்கினார் ஐசரி கணேஷ்.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.