அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘காட்டாளன்’

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தயாரிப்பு : ’கியூப்ஸ் எண்டெர்டெய்மெண்ட்ஸ்’ ஷெரீப்  முகமது. டைரக்டர் : பால் ஜார்ஜ். ஆர்டிஸ்ட் : ஆண்டணி வர்கீஸ், சுனில், கபீர் துஹான்சிங்,ஜெகதீஷ், துஷாரா விஜயன், சித்திக், பரத் திவாரி, ஆன்சன் பால், ஹரிசங்கர் நாராயணன், சந்தீப். ஒளிப்பதிவு : ரேனா திவே, இசை : ரவி பஸ்ரூர், எடிட்டிங் : ஷமீர் முகமது, ஸ்டண்ட் : கெச்சா கெம்பாக்டே & ஆக்‌ஷன் சந்தோஷ், பி.ஆர்.ஓ.: நிகில் முருகன். தமிழ்நாடு ரிலீஸ் : ஜி.எஸ்.சினிமாஸ்.

ஆனகொல்லி மலைப்பகுதியையும் வனப்பகுதியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு யானைகளைக் கொன்று தந்தத்தை வெட்டி எடுத்து யாழ்ப்பாணத்திற்கும் குஜராத்திற்கும் அனுப்பும் கடத்தல் சாம்ராஜ்யத்தின் அதிபதியாக இருக்கிறான் மாரி [ சுனில்] அந்த வனப்பகுதியின் மக்களையும் தனது அடிமையாக்கி அராஜகம் பண்ணுகிறான், எதிர்த்து கேள்வி கேட்பவர்களை வெட்டி வீழ்த்துகிறான், எரித்துக் கொல்கிறான். அப்படிப்பட்ட மாரியின் கும்பலுக்கு வந்து அவனின் வலதுகரமாகிறான் ஆண்டனி[ ஆண்டனி வர்கீஸ்]. வனத்துறைக்கும் போலீசுக்கும் தண்ணி காட்டிவிட்டு  தந்தம் கடத்துகிறான். அந்த ஆண்டனி ஏன் மாரியிடம் சேர்ந்தான்? என்பதை இரண்டு மணி நேரம் நம்மை ரத்தச்சகதியில் மூச்சுமுட்ட குளிப்பாட்டி, கதறக்கதற தியேட்டரைவிட்டு அனுப்புகிறார்கள் டைரக்டர் பால் ஜார்ஜும் ஹீரோ ஆண்டனி வர்கீஸும்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இதில் இடைவேளைக்குப் பின் திடீரென யாழ்ப்பாணம் எபிசோடில் எண்ட்ரியாகிறார் துஷாரா விஜயன். ஆண்டனி வர்கீஸை காப்பாற்றுகிறார், அவருக்காக க்ளைமாக்ஸில் வீரசாகசமெல்லாம் பண்ணுகிறார். ஏம்மா இப்படி? நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு உன்னோட சினிமா ரூட்?

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

நாற்பது வருசத்துக்கு முன்னால வந்த விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரனை’ திருப்பிப் போட்டு சிவப்பு பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அந்த ஆனகொல்லி காட்டை ஆள்வது யார்? என்ற கொலைவெறியும் கோரத்தாண்டவமும் தான் படம் மொத்தமும். படத்தில் எப்படியும் ஆயிரம் பேரையாவது துப்பாக்கியால் சுட்டு, பட்டாக்கத்தியால் வெட்டி, கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்துக் கொன்றிருப்பார்கள் போல. கொஞ்சம் அசந்திருந்தோம்னா படம் பார்க்கும் நம்மளையும் போட்டுத் தள்ளியிருப்பார்கள். க்ளைமாக்ஸில் நம்ம சினிமாவின் வன்முறை புகழ் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் வந்து கதற வைக்கிறார். காது ஜவ்வு கிழிய வைக்கிறார் மியூசிக் டைரக்டர் ரவி பஸ்ரூர்.

‘காட்டாளன்’ மலையாள சினிமா டைரக்டர்களிலும் இப்படி மரை கழண்டவர்கள் இருப்பார்கள் என்பதை நிரூபித்திருக்கிறான்.

அங்குசம் பார்வையில் ‘காட்டாளன்’ 33/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.