அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘கொலைச் சேவல்’ 

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ’ஆர்பி பிலிம்ஸ்’ ஆர்.பி.பாலா & கெளசல்யா பாலா. டைரக்டர் : வி.ஆர்.துதிவாணன், ஆர்ட்டிஸ்ட் : கலையரசன், தீபா பாலு, பாலசரவணன், விஜய் சத்யா, கஜராஜ், அகரன் வெங்கட், ஆதவ் சந்திரா, விஜய லட்சுமி, ஜெயலட்சுமி, தனலட்சுமி, ராஜாமணி, மஞ்சுளா, மணிமேகலை, ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா, இசை :சாந்தன், எடிட்டிங் : அஜய் மனோஜ், ஸ்டண்ட் : டேஞ்சர் மணி, எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசர் : கே.ராஜசேகர், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.

காளியும்[கலையரன்] அனுவும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள். அம்மா, தாய்மாமா, அத்தை, குழந்தைகள் என  எளிய குடும்பம், நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள். அனு நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், அடர்ந்த காட்டுக்குள் இருக்கும்  தங்களின் குலதெய்வமான நிறைசூலி அம்மனுக்கு சேவலை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்த டிராக்டரில் செல்கிறது காளி குடும்பம். டாக்டரிடம் செக்கப்பிற்காக மனைவியை அழைத்துச் சென்றுவிட்டு, டூவீலரில் குலதெய்வக் கோவிலுக்குப் போகிறான் காளி.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கொலைச் சேவல்இதற்கிடையே டிராக்டரில் போகும் போது தனது பேரக்குழந்தைகளிடம் நிறைசூலி கதையைச் சொல்கிறாள் பாட்டி. காளியும் அவனது மனைவி அனுவும் வந்து சேர்கிறார்கள். அதன் பின் நடக்கும் சம்பவங்கள்,  ஈரக்குலையை நடுங்க வைக்கும் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கொலைச்சேவல்’.

இப்படி ஒரு மிக சிறப்பான, நேர்த்தியான கதை சொல்லும் சினிமாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சுன்னே சொல்லலாம். இண்ட்ரோ சீன் அக்கப்போர் இல்லை, ஓவர் பில்டப் இல்லை,  டப்பாங்குத்து சாங் இல்லை, ஆவேச வசனங்கள் இல்லை. இது எதுவுமே இல்லாமல் படத்தில் ஏதோ ஒண்ணு இருக்கு, அதுவும் வெயிட்டா இருக்குன்னு பார்வையாளனை பரவசத்திற்குள்ளாக்கி இடைவேளை விடுகிறார் டைரக்டர் துதிவாணன். அதன் பின்னும் அந்த பரவசத்தை மேலும் பரவசமாக்கி, காட்டுப்பகுதிக்குள் சிலரை எண்ட்ரியாக வைத்து எதிர்பார்ப்பை எகிற வைத்ததில்தான் துதிவாணனின் புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட் வேலை செய்திருக்கு.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

கஜராஜும் அவரது மகனும் டூவீலரில் ஏன் போகிறார்கள்? சில முரட்டு இளைஞர்கள் சரக்கு பாட்டில்களுடன் அந்த காட்டுப்பகுதிக்கு ஏன் வருகிறார்கள்? என்பதைக் கூட கடைசி வரை நம்மால் யூகிக்க முடியவில்லை. க்ளைமாக்ஸில் அவர்களின் கொலை வெறி முகம் தெரிவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரும் கலையரசன் -தீபா பாலுவின் லவ் ஃப்ளாஷ்பேக் வந்து போன பின்பு தான் இந்த ‘கொலைச்சேவலின்’ பேஸிக் லாஜிக்கை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தளவுக்கு கதையை கனகச்சிதமாக கொண்டு போய் தூள் கிளப்பியிருக்கார் துதிவாணன்.

கொலைச் சேவல்படத்தின் முக்கால்வாசி சீன்களில் கலையரசன் வெறுமனே வந்து போவது மாதிரி தெரிந்தாலும் க்ளைமாக்ஸ் நடிப்பில் புது அவதாரமே எடுத்துட்டார் மனுஷன். இவருக்கும் தீபா பாலுவுக்குமான லவ் எபிசோட் கூட வெறும் லவ் போர்ஷனாக கடந்து போகாமல், அதிலும் அம்மா செண்டிமெண்ட் டச் வைத்து..அதில் தீபா பாலு காட்டும் ரியாக்‌ஷன் அருமை. அதே போல் க்ளைமேக்ஸில் உயிர்வலியுடன் அலறும் சீனில் கண்களின் மிரட்சி வழியே நடிப்புக்கு உயிர் கொடுத்திருக்கார் தீபா பாலு.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

படத்தின் கலகலப்புக்கு க்யாரண்டி அசிஸ்டெண்ட் டைரக்டராக வரும்  நம்ம பாலசரவணன் தான்.  மதுரை ஸ்லாங்கில் இவர் பேசும் ஸ்டைலே சுண்டி இழுக்குது. சகட்டுமேனிக்கு எல்லோரையும் டயலாக் டெலிவரியால் லந்து பண்ணி பட்டையக் கிளப்பிவிட்டார். நண்பன் கலையரசனையும் அவன் மனைவி தீபா பாலுவையும் காப்பாற்றப் போராடும் க்ளைமாக்ஸில் நம்மை கண்கலங்க வைத்திருக்கார் பாலசரவணன்.

கொலைச் சேவல்இவரின் நண்பராக வரும் அகரன் வெங்கட், கலையரசனின் தாய்மாமாவாக வரும் விஜய் சத்யா, அம்மாவாக வரும் நடிகை, கொடூரக் கொலைகாரனாக வசனமே பேசாமல் மிரட்டும் கஜராஜ், தீபா பாலுவை மிகக் கொடூரமாக வெட்டிச் சாய்க்கும் ஆதவ் சந்திரா , டீப் லவ் தாத்தா-பாட்டி என எல்லா கேரக்டர்களுமே அப்படியொரு தரமான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

பி.ஜி.முத்தையாவின் கேமராக் கண்கள் கிராமத்து இயற்கையையும் காட்டுப்பகுதியின் திகிலையும் அதிலும் அந்த நிறைசூலி அம்மனையும் தீபா பாலுவையும் கனெக்ட் பண்ணி காட்டிய ஆங்கிள், தீபா பாலுவுக்கும் கலையரசனுக்கும் வைத்த டைட் குளோஸ்-அப் என எல்லாமே அபாரம், அற்புதம். கொலைச் சேவலுக்கு திகிலூட்டுகிறது சாந்தனின் பின்னணி இசை.

சிறந்த கதை சொல்லியின் சிறந்த படைப்பு இந்த ‘கொலைச்சேவல்’.

அங்குசம் பார்வையில் ‘கொலைச் சேவல்’  45/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.