அங்குசம் பார்வையில் ‘குடும்பஸ்தன்’  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘சினிமாக்காரன் புரொடக்‌ஷன்ஸ்’ எஸ்.வினோத்குமார். டைரக்‌ஷன் :ராஜேஷ்வர் காளிசாமி. நடிகர்—நடிகைகள் : மணிகண்டன், ஷான்வி மேகனா, ஆர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன், பிரசன்னா பாலசந்திரன், ஜென்சன் திவாகர், பாலாஜி சக்திவேல், வர்கீஸ். ஒளிப்பதிவு : சுஜித் என்.சுப்பிரமணியம், இசை : வைசாக், வசனம் : பிரசன்னா பாலசந்திரன், காஸ்ட்யூம் டிசைனர் : மீரா, ஆர்ட் டைரக்டர் : சுரேஷ் கல்லேரி. பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.

'குடும்பஸ்தன்’கோயம்புத்தூர் தான் கதைக்களம்.  கடன் வாங்கி குடும்பம் நடத்தி, வட்டிக்கு கடன் வாங்கி தொழில்நடத்தி அவதிப்படும் நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்தன்களின் கதை தான் இந்தப் படம். நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனாக மணிகண்டன், அவரது காதல் மனைவியாக ஷான்வி. இந்த இரண்டு பேரும் பொருத்தமான ஜோடி தான். வேலை போனதும் குடும்பத்தைச் சமாளிக்க மணிகண்டன் தனிமையில் புலம்புவது, அக்கா கணவன் குருசோமசுந்தரத்திடம் அவமானப்படுவது, கர்ப்பிணி மனைவி ஷான்வியிடம் ஆத்திரப்படுவது என ஏகப்பட்ட ஏரியாக்களில் ஸ்கோர் பண்ணுகிறார் மணிகண்டன்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மணிகண்டனின் மனைவியாக வரும் ஷான்வியும் அனுபவம் மிக்க நடிகை போல பல சீன்களில் அசால்டாக நடித்துள்ளார். மணிகண்டனின் அப்பாவாக வரும் ஆர்.சுந்தர்ராஜனும் அம்மாவாக வரும் நடிகையும் டபுள் ஓகே தான். படத்தில்  நான்கு பேரைத் தவிர மற்ற எல்லோருமே பெரிய திரைக்கு புதியவர்கள் தான் என்றாலும் குறையொன்றும் இல்லை.

'குடும்பஸ்தன்’
‘குடும்பஸ்தன்’

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அதனாலோ என்னவோ, படத்தின் இடைவேளை வரை எல்லோருமே பேசுகிறார்கள்… பேசுகிறார்கள்.. பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சீனில் நான்கு பேர் இருந்தால் நான்கு பேரும் பேசுகிறார்கள், பதினைந்து பேர் இருந்தால் பதினைந்து பேரும் பேசுகிறார்கள். இதனால் சந்தைக் கடை சத்தம் போல் ஒரே இரைச்சலாகி, எரிச்சலூட்டுகிறது. இடைவேளைக்குப் பின்பு தான் படத்தின் டெப்த் சீன்களே இருக்கின்றன.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

பிரபல யூடியூப் சேனலான ‘நக்கலைட்ஸ்’ குழுவின் பிரசன்னா பாலசந்திரன் தான் கதை வசனகர்த்தா. அங்கிருந்த ராஜேஷ்வர் காளிசாமி தான் டைரக்டர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“சும்மா இருந்த என்னை சொறிஞ்சுவிட்டுட்டானுகடா. மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்த கதையாகிப் போச்சு” படம் ஆரம்பிக்கும் முன்பு டைரக்டரின் வாய்ஸ் ஓவர் இது.

‘குடும்பஸ்தன்’ விமர்சனமும் ஓவர்..

 

             -மதுரை மாறன்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.