பெரியார் விஷயத்தில் சீமானை நான் ஆதரிக்கிறேன் – எச். ராஜா….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெரியார் விஷயத்தில் சீமானை நான் ஆதரிக்கிறேன் – எச். ராஜா பேட்டி வீடியோவை காண

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

அரட்டாப்பட்டி சுரங்கம் அறிவிப்பிற்கு இன்னும் 24 மணி நேரமானால் உங்கள் குடி கெட்டுப் போய்விடுமா?

மதுரை ஜான்சி ராணி பூங்கா பகுதியில்  செய்தியாளர்களை சந்தித்த மூத்த தலைவர் எச். ராஜா….

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நேதாஜி  ஐ என் ஏ -வில் பெருவாரியாக இருந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள், அதில் முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரிய பங்காற்றினார்.

காரைக்குடியில் தமிழக முதல்வர் பேசும்போது நிலை தடுமாறி பேசி உள்ளார், வள்ளுவரையும் வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள் என்று பேசியுள்ளார். களவாடுவது, கள்ள ரயிலில் செல்வது திராவிடர்களின் உரிமை. வள்ளுவர் யார்? வள்ளலார் யார்? அடிப்படை ஞானம் இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார்.

திருக்குறள் கட்டமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில். அதன் அடிப்படையில் தான் திருக்குறளும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வள்ளுவரை விட சனாதனி உண்டா? பல இடங்களில் ஹிந்து தெய்வங்களைப் பற்றி வள்ளுவர் பேசியுள்ளார்.  தங்க தட்டில் இருக்கும் மலம் என்று தந்தை பெரியார் பேசினார்.

எச். ராஜா....
எச். ராஜா….

வள்ளலார் திருநீறில்லாமல் இருந்திருக்கிறாரா?

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

முருகன் தோத்திரத்தை வள்ளலார் சொல்லியிருக்கிறார். அடுத்து மகாதேவ மாலை சிவனைப் பற்றி எழுதியிருக்கிறார், வள்ளலார் பெருமகனாய்விட மிகச் சிறந்த ஹிந்து உண்டா? களவாட நிதி உதயநிதி ஸ்டாலின், சனாதன இந்து தர்மத்தை பற்றி இழிவாக அழிப்பேன் என்று பேசினார். அதற்கு அவர் மீது பல வழக்குகள் உள்ளது.

சனாதனம் என்று சொன்னால் இந்து மதம் என்று நீதிமன்றமே  சொல்லியுள்ளது. களவாடுவது கள்ள ரயில் ஏறி வருவது திராவிட மாடல்தான் அதில் நாங்கள் போட்டி போட வரவில்லை.  முதல்வர் சரியாக பேச வேண்டும். உங்களை விட களவாணி கூட்டம் இல்லை. அரிட்டாப்பட்டி சுரங்கம் அறிவிப்பிற்கு இன்னும் 24 மணி நேரம் ஆகட்டுமே இருந்தால் உங்கள் குடிகெட்டுப் போய்விடுமா?

நான் முன்னேற்றத்திற்கு எதிரானவன் அல்ல என்று ஜோசப் விஜய் பேசுகிறார், விமான நிலையம் வேண்டும் ஆனால் பரந்தூரில் இல்லை.

நண்பர் விஜய் விமான நிலையத்தை எங்கு கொண்டு வரவேண்டும் விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்தால், மத்திய சர்க்கார் அங்கு விமான நிலையத்தை அமைக்கும்.

எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்சனைகள் புரிவதில்லை.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தற்போது சீமான் தொடர்ச்சியாக பெரியாரைப் பற்றி பேசி வருகிறார். ஆனால், சந்தேகம் இல்லாமல் ஈவேரா பத்தி முதலில் பேசியது எச். ராஜா தான் பாஜக தான்.  ஈவேரா தேச துரோகி, 47 ஆகஸ்ட் 15 துக்க தினம், கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்று சொல்லியவர். தேசத்துரோகி ,ஈவேரா தமிழ் விரோதி, தமிழ் மீது பற்று உள்ள எவரும் குச்சியால் கூட ஈவேராவை தொட மாட்டான், தமிழ் காட்டுமிராண்டி மொழி.

தமிழை படிக்காதீர்கள் தமிழிலை படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது, வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசு, பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு என்று பேசியவர் ஈவேரா, ஈவேரா ஒரு தலித் விரோதி, பட்டியலின சமூக மக்களின் முதல் எதிரி ஈவெரா.

seemanபள்ளனும், பறையனும் கோயிலுக்குள் போகக்கூடாது, அப்படி போனால் சூத்திரன் பார்ப்பான் அளவிற்கு உயர மாட்டான் தாழ்ந்து போவான் என்று பேசியவர் ஈவேரா.

சீமான் விஷயத்தில் தற்போது நான் அவரை ஆதரிக்கிறேன் என்று எச். ராஜா பேசினார். பெண்களை விலைக்கு வாங்கி அனுபவித்தவர்கள் திராவிடக்காரர்கள் ஈவேரா விலைமாதர் வீடு புகுந்து வருவார், நண்பரோடு போவார், அதனால்தான் கூட்டு பலாத்காரம் நடக்கிறது.  ஈவேரா ஒரு விலங்கு, விலைமாதர்களோடு கூத்தடிக்க அவரது மனைவி சமையல் செய்து அனுப்ப வேண்டும். காவிரி ஆற்றங்கரையில் நண்பர்களோடும் விலை மாதர்களோடும் கூத்தடிப்பார் என்று  சுவாமி சிதம்பரனார் பேசியுள்ளார். இது அவரது வார்த்தை, வழக்கு கொடுத்தால் அவர் மீது கொடுக்க வேண்டும்.

 

—  ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.