மறுப்பு தெரிவிப்பாரா? ஸ்டாலினுக்கு குஷ்பு சவால்!

0

மறுப்பு தெரிவிப்பாரா? ஸ்டாலினுக்கு குஷ்பு சவால்!

கடந்த 2016 தேர்தலில் வேளாண் சட்டத்தை வாக்குறுதியாக கொடுத்துவிட்டு, தற்போது அச் சட்டத்தை ரத்துச்செய்ய வலியுறுத்துகிறது திமுக என நடிகை குஷ்பு குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லட்டும். அவர் இதற்கு மறுப்பு தெரிவிக்கட்டும் என்றும் குஷ்பு சவால் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற ‘நம்ம ஊரு பொங்கல்’ விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய குஷ்பு, நாட்டிலேயே மிகப்பெரிய கட்சியான பாஜக தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார். 

4 bismi svs

தை பிறந்தால் வழி பிறக்கும் என ஸ்டாலின் தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு, ‘அது எங்கள் கட்சிக்கு (பாஜகவுக்கு)’ என்றார் குஷ்பு. ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் என ஸ்டாலின் முடிவு செய்யட்டும் எனக்கூறிய குஷ்பு, ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் என்றார். ஆனால், தேர்தலில் போட்டியிடப் போகிறேனா என்பது எனக்கே தெரியாது என்றார் குஷ்பு.

- Advertisement -

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குஷ்பு கட்சி மாறுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு, “நாங்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் விசுவாசமாக இருப்போம்,” என்றார் குஷ்பு.

ப.சிதம்பரம் போன்ற ஆட்கள் எங்களை மாதிரி ஆட்கள் கட்சியில் இருந்தால் எங்கே தனது மகனுக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என பயந்து எங்களை வெளியே தள்ளுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டதாக குஷ்பு குற்றஞ்சாட்டினார்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.