சாதனை மாணவர்கள் 2021 விருது வழங்கும் விழா
சாதனை மாணவர்கள் 2021 விருது வழங்கும் விழா
இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையின் 24 ஆம் ஆண்டு விழாவில் சாதனை மாணவர்கள் 2021 விருது வழங்கும் விழா நடைபெற்றது நடைபெற்றது
விஜிபி நிறுவன திருச்சிக்கினைத் தலைவர் இரா. தங்கையா தலைமை வகித்தார். திருச்சி லிம்ரா பேக்ஸ் நிறுவனர் எம்.சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார். மணப்பாறை லட்சுமி மெட்ரிக் பள்ளித் தாளாலார் அரிமா சௌமா ராஜரத்தினம் , ரொட்டேரியன் வி.எஸ். . பாஸ்கரன் , கவிஞர் முருகபாரதி , கவிஞர் கவி செல்வா , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்
திருச்சி பாட்சா பிரியாணி நிறுவனர் முகம்மது அபூபக்கர் சித்தீக் , புலவர் தியாகசாந்தன் கனடாவிலிருந்து Dr . நரேந்திரா விவேகானந்தா , ஜெர்மனியிலிருந்து நையினைவிஜயன், இலங்கையிலிருந்து கவிஞர் சுபாஷனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
இனிய நந்தவனம் நடத்திய சிறந்த சுய முன்னேற்ற நூல் பரிசுப் போட்டியில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனுக்கு முதல் பரிசும் கவிஞர் மு.முருகேசுக்கு இரண்டாம் பரிசும் மயிலாடுதுறை இளைய பாரதிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது மூவருக்கும் நம்பிக்கை நாயகர் என்ற விருதும் வழங்கப்பட்டது
யுகே நாட்டில் மாதவ் வகெதீஷ்வா ராஜா, விகாசன் விஜயரத்தினம், லண்டனில் மகிதன் சிவகுமார், ஜெர்மனியில் அபினாச ஸ்ரீ கதன் , ஆஷா பாஸ்கரன், கனடாவில் ஹரணி கேசவராஜ், லுமிர்தா கிரிதரன், பவீஸ் மனோ ராஜ், சுவிட்சர்லாந்தில் அஜனா தயானந்தன், வைஷ்ணவி, இலங்கையில் தேஜஸ்வினி பிரணவன், ஜோசப் நகுலன், அகிலேஷ் சஜீவன், நெதர்லாந்தில் அக்க்ஷயா ரவீந்திரன், தமிழ்நாட்டில் துறையூர் ரக்க்ஷிதா, சேலம் ராஜேஸ்வரி, மகேஸ்வரி, ஜெயந்தி, நாமக்கல் புவனேஸ்வரி, ஈரோடு மணிகண்டன், கோவை நேகாஸ், நித்திஷ், மதுரை ரிதியூஷா, சிவகங்கை ஸ்ரீ வர்ஷினி, ஈரோடு வைத்தீஸ்வரன், விருதுநகர் சுஜிதா, கடலூர் ஆனந்தராஜ், பரவை வர்ஷினி, கோவை அருந்ததி, தஞ்சை விஜய், கோவை நந்திதா, திருச்சி கீர்த்தனா, மும்பை ஸ்ரீ யாமினி உள்ளிட்டோர் சாதனை மாணவர்கள் 2021 விருதினை பெற்றார்கள்.
முன்னதாக இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்க கவிஞர் முனைவர் வே.த.யோகநாதன் நன்றி தெரிவித்தார்.