கமலா தியேட்டரை கதிகலங்க வைத்த ‘லீடர்’ ஃபங்ஷன்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்நாட்டின் மிகவும் புகழ் பெற்ற ஜவுளிக் கடையான லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் அதிபரான சரவணன் தயாரித்து, ஹீரோவாக  நடித்து வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாகவுள்ள படம் ‘லீடர்’. ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தின் ஹீரோயினாக பாயல் ராஜ்புத் நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் ஆண்ட்ரியா, ஷாம், லால், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : எஸ்.வெங்கடேஷ், இசை : ஜிப்ரான், எடிட்டிங் : பிரதீப் ராகவ், ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ.

1 நிமிடம் 21 வினாடிகள் ஓடும் ‘லீடர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனி கமலா தியேட்டரில் மார்ச்.05-ஆம் தேதி  நடந்தது. விழாவிற்கு மீடியாவை அழைக்க வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் படத்தின் பி.ஆர்.ஓ. அண்ணன் நிகில் முருகன்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

leader-functionஅதில் ‘காலை 9 மணிக்கு ரசிகர்கள் கொண்டாட்டம்,  10.40-க்கு நடிகர் ஷாம் டீசரை ரிலீஸ் பண்ணுகிறார், 11.10—க்கு நடிகர் சந்தோஷ் பிரதாப் டிரெய்லரை வெளியிடுகிறார், 11.40—க்கு டைரக்டர் துரை செந்தில்குமாரும் ஹீரோயின் பாயல் ராஜ்புத்தும் இணைந்து டீசரை ரிலீஸ் பண்ணுகிறார்கள்” என பட்டியல் போட்டு பட்டையைக் கிளப்பியிருந்தார் அண்ணன் நிகில் முருகன்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

‘லெஜெண்ட் சரவணனின் ரசிகர்கள் படையால் கமலா தியேட்டரே கதிகலங்கியது.

leader-functionடைரக்டர் துரை செந்தில்குமார் பேசியது, “தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையின் கதை இது. இந்த டீசர், சின்ன பொறி தான். படம் மொத்தமும் ஃபயராக இருக்கும். ஃபுல் எண்டெர்டெய்ன்மெண்டுக்கு நான் க்யாரண்டி” என்றார்.

தூத்துக்குடி, சென்னை, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜாரிஜியா, உள்ளிட்ட லொக்கேஷன்களில் ‘லீடர்’ ஷூட்டிங் நடந்துள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி  என ஐந்து மொழிகளில் வருகிறார் ‘லீடர்’.

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.