உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம நிகர்நிலைப் பல்கலை பேராசிரியர்கள்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

2025 ஆண்டிற்கான உலகின் சிறந்த முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர். 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத்துறைகளில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். வகைப்படுத்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளும் வெளியிட்ட குறைந்தபட்சம் ஐந்து ஆய்வுக் கட்டுரைகள், புலம் மற்றும் துணைப் புலம் சார்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். உலகின் சிறந்த முதல் 2% விஞ்ஞானிகளின் பட்டியலை அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தப் பேராசிரியர் ஜான் லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பட்டியலில் உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இடம் பிடித்து உள்ளனர். இந்தியாவில் இருந்து 3500க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இடம் பிடித்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த முதல் 2% விஞ்ஞானிகளின் பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஓய்வுபெற்ற மூத்த வேதியியல் பேராசிரியர் டாக்டர் எம். ஜி. சேதுராமன், ஓய்வுபெற்ற மூத்த இயற்பியல் பேராசிரியர் டாக்டர் ஜி. முரளிதரன், மூத்த கணிதவியல் பேராசிரியர் டாக்டர் பி. பாலசுப்பிரமணியம், மூத்த வேதியியல் பேராசிரியர் டாக்டர் எஸ். மீனாட்சி, மறைந்த வேதியியல் துறை பேராசிரியர் S. ஆபிரகாம் ஜான்,  இயற்பியல் பேராசிரியர் டாக்டர் கே. மாரிமுத்து, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் (GRI) கௌரவ வருகைதரு எமரிட்டஸ் பேராசிரியர் (இயற்பியல்) டாக்டர் எஸ். ஆறுமுகம், கௌரவ வருகைதரு எமரிட்டஸ் பேராசிரியர் (வேதியியல்) பேராசிரியர் ஆர். ரமேஷ், வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் பள்ளியின் சிறப்பு அழைப்புப் பேராசிரியர் டாக்டர் கே. அசோக்குமார், உயிரியல் துறையின் சிறப்பு அழைப்புப் பேராசிரியர் டாக்டர் பி. மலைக்கொழுந்தன், மற்றும் நுண்ணுயிரியல் துறையின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில்
சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விஞ்ஞானி முனைவர் பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தெளிவற்ற தர்க்க அணுகுமுறைகளைப் பயன்படுத்தி தரம் குறைந்த படங்களை உயர்தரப் படமாக மாற்றுதல் மேலும் கிரிப்டோகிராபி மற்றும் செயலாக்கத் தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூளையில் ஏற்படும் அதிர்ச்சியைக் கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். விஞ்ஞானி முனைவர் எம்.ஜி.சேதுராமன் அவர்கள் தாவர மூலப்பொருட்களில் இருந்து வரும் சேர்மங்களைக் கொண்டு உலோக அரிப்புகளைத் தடுக்கும் காரணிகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.  விஞ்ஞானி முனைவர் முரளிதரன் அவர்கள் (Super Capacitor) மீத்தேக்கி என்ற தலைப்பிலும், விஞ்ஞானி முனைவர் எஸ்.மீனாட்சி அவர்கள் கழிவு நீரில் இருந்து நச்சுத்தன்மையுள்ள ஃபுளூரைடு, காரியம், குரோமியம், பாதரசம் மற்றும் நச்சுக்களை உறிஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். விஞ்ஞானி முனைவர் கே.மாரிமுத்து அவர்கள் அரிதான பூமியின் தாதுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம் வெள்ளை ஒளி மற்றும் லேசர் ஒளி உமிழ்வதற்கான ஆய்வு மற்றும் அபாயகரக் கதிர்வீச்சைத் தடுப்பதற்கான கண்ணாடிகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், முனைவர். க. அசோக்குமார் அவர்கள்  அரிசி மற்றும் சிறுதானியங்களில் ஊட்டச்சத்து கூறுகளில் மரபணு வேறுபாடு. நானோ துகள்களை பயன்படுத்தி விதை முளைப்பு மற்றும் பயிர் வளர்ச்சி மேம்பாட்டிற்கான ஆராய்ச்சியினை செய்து வருகிறார் மற்றும் முனைவர். பா.மலைக்கொழுந்தன் அவர்கள் உயிர்நானோ துகள்களின் ஆற்றல் வாய்ந்த உயிர்மருத்துவ பயன்பாடுகள் ஆராய்ச்சியினை செய்து வருகிறார், கௌரவ வருகைதரு எமரிட்டஸ் பேராசிரியரான பேராசிரியர் ஆர். ரமேஷ், உயிரி-கனிம வேதியியல் (Bioinorganic Chemistry) துறையில் சிறப்புக் கவனம் செலுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கௌரவ வருகைதரு எமரிட்டஸ் பேராசிரியர் இயற்பியல் துறையில் டாக்டர் எஸ். ஆறுமுகம், நுண்ணுயிரியல் துறையின் முன்னாள் ஆராய்ச்சி மாணவரான டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, உயிரி நான்பொருட்களின் (Bionanomaterials) மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவப் பயன்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது தவிர கடந்த ஆண்டு அமரரான பேராசிரியர் ஆபிரகாம் ஜான், வேதியியல் துறை அவர்களும் தொடர்ந்து ஆராய்ச்சி பணிக்கான பட்டியலில் உச்ச 2% விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர் நானோ தொழில்நுட்பம் கொண்டு உயிர் வேதியல் காரணிகளை கண்டறியும் உணர்விகளை அமைப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இந்த உணர்விகள் சிறப்பான செயல்பாடு மற்றும் விலை மலிவான உணர்விகளாக உள்ளன.

தொடர்ந்து 6 ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் மேற்கூறிய பேராசிரியர்களும் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது தொடர்ந்து தொடர்ந்து 7-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் இடம்பிடித்த அனைவருக்கும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. ந. பஞ்சநதம் மற்றும் பதிவாளர் பேரா. கே.மாரிமுத்து மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.