அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘லாக்கர்’ படம் எப்படி இருக்கு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

அங்குசம் பார்வையில் ‘லாக்கர்’  படம் எப்படி இருக்கு 

லாக்கர் (2)
லாக்கர் 

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தயாரிப்பு: நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ். டைரக்டர்கள்: என்.ராஜசேகர்& யுவராஜ் கண்ணன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனா அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்பிரமணியன் மாதவன்,தாஜ்பாபு,பெனட், ஆறுமுகம். ஒளிப்பதிவு: தணிகை தாசன், இசை: வைகுந்த் ஸ்ரீனிவாசன், எடிட்டிங்: ஸ்ரீகாந்த் கணபார்த்தி. பிஆர்ஓ: சக்தி சரவணன்.

உழைச்சு சம்பாதிச்சு உருப்படியா வாழ முடியாது என நினைக்கிறார்ஹீரோ விக்னேஷ் சண்முகம். ராங் ரூட் தான் கரெக்டா ரூட்னு முடிவு பண்ணி, அமைச்சர் ஒருவர் வாக்காளர்களுக்கு கொடுக்க அனுப்பிய பணத்தை லவட்டிவிட்டு, அதே இடத்தில் கள்ள நோட்டை வைத்து விடுகிறார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதன் பின்னர் ஷேர் மார்க்கெட்டில் இறங்கி சிலரை சீட்டிங் போடுகிறார். அதே ஷேர் மார்க்கெட்டால் சிலரிடம் பணத்தை பறிகொடுக்கிறார். இந்த நேரத்தில் தான் ஹீரோயின் நிரஞ்சனா அசோகனை காபி ரெஸ்டாரெண்டில் எதேச்சையாக சந்திக்கிறார். லவ்வில் விழுகிறார். அதன் பின், போதைப் பொருள் மற்றும் தங்கக் கடத்தல் பார்ட்டியான வில்லன் நிவாஸ் ஆதித்தனிடம் இருக்கும் பல கோடி ரூபாய் தங்கத்தை ஆட்டையப் போட பிளான் போடுகிறார்.

தனது லவ்வர் திருட்டுப் பேர்வழி என்று தெரிந்ததும் முதலில் ஷாக் ஆகும் நிரஞ்சனா, நீ பிளான் பண்ணியிருக்கும் ஆள் தான் என்னோட குடும்பத்தையும் நடுத்தெருவில் நிப்பாட்னவன். அதனால நானும் உனக்கு சப்போட்டா வர்றேன் என்றபடி ஹீரோவுடனும் அவரது நண்பர்களுடனும் கைகோர்க்கிறார். தங்கத்தை ஆட்டையப் போட்ட பின் ஹீரோ மட்டும் வில்லனிடம் மாட்டிக் கொள்கிறார்.

ஹீரோயின் கதி என்னாச்சு ? இவர் ஏன் ஹீரோவின் கொள்ளைத் திட்டத்துக்கு சப்போர்ட் பண்ணினார் என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘லாக்கர்’. வெயிட்டான கதையைப் பிடித்த இரட்டை இயக்குனர்களான ராஜசேகரும் யுவராஜ் கண்ணனும் திரைக்கதைக்கும் பிரிலியண்ட் பிளான்களுக்கும் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால் பலன் பல மடங்காக இருந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை, கம்மி பட்ஜெட்டிலும் நல்ல விதமாகத் தான் ‘லாக்கர்’ செய்திருக்கிறார்கள்.

விக்னேஷ் சண்முகமும் நிரஞ்சனா அசோகனும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர். வில்லன் கெட்டப்பிற்கு மேட்ச் ஆக தெரிகிறார் நிவாஸ் ஆதித்தன். இன்னும் கூடுதல் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர சான்ஸ் இருக்கு. கேமரா மேன் தணிகை தாசனும் இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீனிவாசனும் லாக்கரின் த்ரில்லிங் அனுபவத்தை தர நன்றாகவே வேலை செய்துள்ளனர்.  சமீபத்திய லோ பட்ஜெட் படங்களில் ‘ லாக்கர்’ க்கு ஓகே போடலாம்.

 மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.