எம்.ஜி.ஆர். முதன் முதலில் சொந்தமாக வாங்கிய வீடு
அந்த வீடு சற்று சிறியதாக இருந்தாலும் வீட்டிற்கும் முன்னும் பின்னும் காலி இடம் இருந்தது. சென்னை நகரில் ராயப்பேட்டை என்பது ஒரு முக்கியமான இடம். மேலும் இந்த வீடு இருக்கும் நல்ல பெரிய ரோடு பெயர் லாயட்ஸ்சாலை இப்போ அவ்வை சண்முகம் சாலை ஐ கிளாஸ் ஏரியா இந்த வீட்டின் கதவு எண் 160 கூட்டு எண் 7.
எம்.ஜி.ஆர். அவர்களுடைய ராசி நம்பர் 7 நாளடைவில் அந்த வீட்டில் உள்ள காலி இடங்களில் வசதிக்குத் தகுந்தார் போல் கட்டிடங்கள் கட்டி பழைய கட்டிடத்தை புதுப்பித்து, புதுசையும், பழசையும் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய வீடாக்கி விட்டார்கள்.
அந்த வீட்டிற்கு “தாய் வீடு” என்று பெயர் வைத்தார் எம்.ஜி.ஆர் பிறகு அந்த வீட்டை ஒரு புதிய வீடாக கட்டியதை அந்த வீட்டை விற்ற அட்வகேட் ராமன் அவர்களிடம் விவரங்களை சொல்லி அந்த வீட்டின் திறப்பு விழாவில் விளக்கேற்றி வைத்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொண்டார் எம்.ஜி.ஆர்.
அதன்படி அட்வகேட் ராமன் அவர்களும் வந்து விளக்கேற்றி வைத்து ஆசீர்வாதம் செய்தார். இதை போல் இன்னும் பல சொத்துக்களை வாங்கி நல்ல பெயரும் புகழுமாக வாழவேண்டும் எம்.ஜி.ஆரை பார்த்து சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த அட்வகேட் காலை தொட்டு வணங்கினார்.
அவர் எம்.ஜி.ஆரை தூக்கி தோள்பட்டை தட்டி கொடுத்து வாழ்த்தினார்.
அவருக்கு அப்போது வயது 60க்கு மேல் இருக்கும். ஒரு வக்கீல் அதிலும் பிராமின், இவர் நம்ம குடும்பத்தின்மீது இவ்வளவு அன்பு பாசம் வைத்து இருக்கிறாரே! இவரை என்றும் மறக்கக்கூடாது என்று சத்தியதாய் மிக உணர்ச்சி வசத்தோடு மகன்களிடம் சொன்னார்.
வருடத்திற்கு வருடம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் அதிகமாக புக்கானது இவர் நடித்த படங்கள் நல்ல வருமானத்தை பட தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது. 1950க்கு மேல் இவருடைய வீட்டிற்கு முன் எம்.ஜி.ஆர் அவர்களை பார்க்க காலையிலும் மாலையிலும் ரசிகர்கள் கூட்டமாக வீட்டுக்கு வெளியே ரோட்டில் நின்று கொண்டு இருப்பார்கள்.
எம்.ஜி.ஆர். அவர்களும் சூட்டிங்குக்கு போகும் போதும் திரும்பி வீட்டிற்கு வரும் போதெல்லாம் ரசிகர்களை பார்க்காமல் போவதில்லை. இதை கண்ட சத்தியதாய் மிகவும் பெருமை அடைந்தார்.
இந்த நிலை மாதம் வருடம் என்ற முறையில் தமிழ்நாடு எங்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரசிகர்கள் பெருகிவிட்டார்கள்.
பிறகு 1954க்கு மேல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தமிழ்நாடு எங்கும் ரசிகர் மன்றங்கள் பெருகிவந்தது. 1960ல் இருந்து 1976 வரை தமிழக மக்களின் இதயங்களிலும், அகில உலக தமிழ் மக்கள் இதயங்களிலும் கொடி கட்டி பறந்தார்.