ஒரே நாளில் 80 பேர் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது புகார் ! வீடியோ
ஒரே நாளில் 80 பேர் ஏமாற்றி வருவதாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது புகார் ! வீடியோ
நியூ மேக்ஸ் நிறுவனம் ஏமாற்றி விட்டதாக தமிழகமெங்கும் உள்ள பொதுமக்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் மீது புகார் மனு கடந்த சில நாட்களாக கொடுத்து வந்தனர்.
நியோ மேக்ஸ் மற்றும் அதன் 63 துணை நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. நியோ மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு பணம் இரட்டிப்பாகும், மாதந்தோறும் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாக அளித்த வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கானோர் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி நியோ மேக்ஸ் இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்பட சிலர் மீது வழக்குப் பதியப்பட்டது. மேலும் நியோ மேக்ஸின் 17 கிளை நிறுவனங்களை ‘சீல்’ வைத்த அதிகாரிகள், விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து அதன் இயக்குநர்களான சைமன்ராஜா, கபில், இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பியுள்ளனர்.
ஜீலை 22ம்தேதி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வந்து புகார் கொடுக்கலாம் எனபொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
வீடியோ லிங்
கடந்த ஜூலை 22 அன்று மதுரையில் புகார் கொடுப்பதற்காக தென் மாவட்டத்தில் உள்ள இந்நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு அளித்தார்கள். இதில் பெரம்பலூர் மாவட்டம் வெம்பத் தட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்பாக ரூ 9 லட்சத்தி 60 ஆயிரம் இந்நிறுவனத்தின் மீது முதலீடு செய்து தங்களுக்கு மாதந்தோறும் வட்டியும் திருச்சியில் முக்கிய நகரங்களில் உள்ள ஏரியாவில் காலி மனையும் பதிந்து தருவதாக உறுதிமொழி பத்திரம் ஒன்றை கொடுத்து வாங்கிய பணத்திற்காக ரசீதும் அளித்துள்ளார்கள். இது வரை எனக்கு பணமும் வரவில்லை காலி மனையும் பதிந்து கொடுக்கவில்லை எனக்கு பணத்தை வாங்கி தாருங்கள் எனபரிதாபமாக போலீசாரிடம் மனு அளித்து கேட்டார்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த முகாம் மாலை 5 மணிக்கு அளவில் முடிந்தது மதியம் வரை சற்று மந்தமாக இருந்த என் முகாமை மாலையில் அதிகமானோர் மனு அளித்தனர். இந்த முகாமிற்கு எஸ்பி தலைமையில் டிஎஸ்பி முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் கிட்டத்தட்ட 40 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலி கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் ராமநாதபுரம் சிவகங்கை மதுரை திருச்சி சென்னைஆகிய மாவட்டங்களில் இருந்து 80 பேர் 4 கோடி 20 லட்சம் நியோ மேக்ஸ் எங்களுக்கு தரவேண்டும் என மனுவாக கொடுத்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி நிறுவனத்தால் கைது செய்து முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்றால் வருவாய்த்துறையினர் மூலமாகத்தான் கொடுக்க வேண்டும் ஆதலால் மதுரை டி ஆர் ஒ அனுமதியுடன் வடக்கு தாசில்தார் திருமலை இம்முகாமில் கலந்துகொண்டார்.
வீடியோ லிங்
இந்த ஆயுதப் படை மைதானத்தில் போலீசார் அனுமதி இல்லாமல் பொதுமக்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது மைதானத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் சிறப்பு பூஜை தினந்தோறும் நடைபெறுகிறது. பொதுமக்கள் பக்தியுடன் அதிகமாக கூடி வருகின்றனர். நியோ மேக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் பார்வையிட வந்தவர்களை டிஎஸ்பி குப்புசாமி பிடித்து வாகனம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறித்து விசாரனை நடத்தித்தினார். நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்த நாட்களில் மதுரை பொருளாதார குற்றபிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்கிறார்கள்.
நியோமேக்ஸ் நிறுவனம் – நீதிமன்றத்தில் தாங்கள் நிதி நிறுவனம் அல்ல, தொழில் நிறுவனம், பிளாட், அபார்ட்மெண்ட், ரிசார்ட்டுக்கு முன்பணம் செலுத்திய நமது வாடிக்கையாளர்களை குழப்பி புகார் கொடுத்தால் பணம் கிடைக்கது என்று குழப்பி வந்தனர்.
வீடியோ லிங்
ஆனால் மதுரையில் புகார் கொடுத்தவர்கள் நிலம் வாங்குவது குறித்து எல்லாம் பேசவில்லை, இத்தனை இலட்சம் பணம் போட்டால் இத்தனை ஆண்டுகளுக்கு மாதம் மாதம் வட்டி கிடைக்கும், குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு பணமாவே நிலமாவோ வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லி தான் பணம் வாங்கினார்கள் என்று புகார் மனு கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
செய்தி – ஷாகுல்
படங்கள் – ஆனந்த்
இதையும் கொஞ்சம் படியுங்கள்….
கோடி கோடியா மக்கள் பணம்.. ஆடித்தீர்த்த நியோமேக்ஸ்.. பரிதவிப்பில் மக்கள்!
நியோமேக்ஸ் மோசடி தொடர்பாக 2 இயக்குநர்கள் அதிரடியாக கைது ! வீடியோ !