அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அறத்தமிழன் பேரியக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அறத்தமிழன் பேரியக்கத்தின் மாநில வளர்ச்சிக்குழுவின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் திருச்சி அருண் ஒட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறத்தமிழன் பேரியக்கத்தின் கோட்பாடு கைகேடுயை இயக்கத்தின் நிறுவனத் தலைவர் விஜய் சீத்தாராமன் வெளீயிட்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் பால் கிறிஸ்டியன், மாநில துணைப் பொதுச்  செயலாளர், மற்றும் மாநில வளர்ச்சிக் குழு செயலாளர் செல்வராஜ் மற்றும் சென்னை மண்டலம் ஒருங்கினணப்பாளர் அறிவுச் செல்வம், மாநில பொருளாளர் மற்றும்  மாநில இளைஞர் அணிச் செயலாளர் தலைமகன், – மாநில அமைப்பாளர் பாரி மன்னன், மாவட்ட  உணவு மற்றும் ஆரம்ப சுகாதாரம் கோவன், புத்தூர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் ஐம்பேராயம் குழு மாநில செயலாளர் சத்தியசீலன், மாநிலச் செயலாளர் சமூக நலம் கலிஸ்தராஜ், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓவியர் கஸ்பர் சிவங்கை மாவட்டச் செயலாளர்  சிங்கை ராமு, சென்னை பசுமை ஞாலம் செயலாளர் குமார்,

அரியலூர் மாவட்டம் வளர்ச்சிக் குமு ஒருங்கிணைப்பாளர் அருண், திருச்சி திருவெறும்பூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், கடலூர் மாவட்டம் சரவணன், வணிகப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் பாரூக் உசைன் .

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

திருச்சி மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யாவரும் கேளீர்

கூட்டத்தில் மாநில மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் அறத்தமிழன் ஆட்சியில்….

தமிழ் மண்ணில் வாழும் அனைவருக்கும் தரமான சுகாதாரமான உணவு எனும் நிலை உறுதி செய்யப்படும்.

அனைத்து குடும்பத்திற்கும் வாடகை இல்லாத அரசின் உரிமை வீடுகள் உறுதி செய்யப்படும்.

உலகத் தரத்திலான கட்டணம் இல்லாத அனைவருக்கும் சமமான கல்வியும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி பருவம் வரை தமிழ் கட்டாய பாடமாகவும் இருக்கும். தனியார் பள்ளிகள் அரசுடமையாக்கப்படும்.

அரசு மருத்துவமனைகள் உலக தரத்தில் தரம் உயர்த்தப்படும். நிர்வாக குறைபாடுகள் ஏற்படின் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

காவல்துறையும் நீதித்துறையும் அனைத்து குடிமக்களும் எளிமையாக அணுகும் வண்ணம் இருக்கும்.

உழவே முதன்மையானது உழவை கெடுக்கும் நிலப்பரப்பை குறைக்கும் சீர்குலைக்கும் எந்த திட்டமும் நடைமுறைப்படுத்தப்படாது. மரபு கெடாமல் உழவு நவீனமயமாக்கப்படும்.

முறையான நீர் மேலாண்மையும் நிலத்தடி நீரை உயர்த்தும் செயல்முறைகளும் நீர் நிலையை மீட்டெடுப்பதோடு புதிய நீர் நிலையை உருவாக்கும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும். நிலத்தடி நீரை கெடுக்கும் நீர்மூழ்கி பம்புகள் போன்ற இயந்திர முறைகள் கட்டுப்படுத்தப்படும். நீரை விலைப் பொருளாக்கி விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்படும்.

அனைத்திலும் தமிழ் என்ற அடிப்படையில் பெயர் பலகை தொடங்கி பயன்படுத்தப்படும் அத்தனை அரசு மற்றும் அரசு சாரா அலுவலக செயல்முறைகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்படும்.

உண்மையான சமரசமற்ற பூரண மதுவிலக்கு மற்றும் அனைத்து விதத்தில் ஆன போதை ஒழிப்பு கடும் சட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.

தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் மூலம் திரை முகமும் திரை கவர்ச்சியும் துடைத்தெறியப்படும்.

ஒழுக்க சீர்கேடுகள் கலாச்சார சீரழிவுகள் எந்த விதத்திலும் சமூகத்தை வழி கெடுப்பதை அனுமதிக்க முடியாது இந்த அவலங்கள் அகற்றப்படும்.

பெண் குழந்தைகளின் பெண்களின் பாதுகாப்பு சட்டங்களின் மூலமாக பலப்படுத்தப்படும். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நினைத்துப் பார்க்க முடியாத தண்டனைகளுக்கு உட்படுத்தப்படும் சட்ட முறைகள் உருவாக்கப்படும்.

எம் மண்ணின் மக்களின் நலனை சீர்குலைக்கும் சூழலியலை கெடுக்கும் மற்றும் எதிர்கால தலைமுறையின் வாழ்வியலை கேள்விக்குறியாக்கும் எந்த திட்டத்தையும் ஏற்கவும் நடைமுறைப்படுத்தவோ அறத்தமிழன் பேரியக்கம் அனுமதிக்காது.

அந்நிய சக்திகளின் திட்டமிடுதலின் மூலம் பறிக்கப்படும் எம் மக்களின் உரிமைகள் வேலை வாய்ப்புகள் பணிச் சூழல்கள் முறையான சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்தப்படும்.

இயற்கை வளங்களும் மனித வளமும் முறையாக பயன்படுத்தப்படுவதன் மூலம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியும் தனிமனித வருமானமும் உச்சத்தை தொடும் பொருளாதார மேம்பாடு உருவாக்கப்படும்என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.