எம்.ஜி.ஆரின் 100வது படம் ஒளிவிளக்கு !
எம்.ஜி.ஆரின் 100வது படம் ஒளிவிளக்கு !
தன்னுடைய சகோதரனான எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை அவரது அண்ணனான எம்.ஜி. சக்கரபாணிக்கு இருந்தது. எம்.ஜி.ஆரும் தேதி கொடுக்க, “அரச கட்டளை” படம் மெதுவாக தயாரானது.
பாடல்களை எழுத கவிஞர் வாலியை எம்.ஜி.ஆர் போட்டிருந்தார். அதில் ஒரு பாடலில் ஆண்டவன் கட்டளை முன்னாலே, உன் அரச கட்டளை என்னாகும்? படத்தில் வரும் காட்சிக்கு பொருத்தமான வரிகள். பாடிவிட்டு நிமிர்த்தால் எம்.ஜி.ஆர் முகத்தில் கோபம் ருத்ரதாண்டவமாடியது. வாலி இந்த பாடல் வரிகள் மூலம் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள் என்று கோபமாக பேசினார் எம்.ஜி.ஆர். வாலிக்கு காரணம் புரியாமல் திகைத்து நின்றார். மீண்டும் பல்லவியை படித்து பாருங்கள் வாலி என்றதும் வாலியும் படித்தார். பாதியிலேயே புரிந்து விட்டது. ஆண்டவன் கட்டளை என்பது சிவாஜி நடித்த படம்.
உடல் நலம் சரியான பிறகு பாதியிலேயே தான் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்த படங்களை நடித்துக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். இடைப்பட்ட காலத்தில் ‘தாய்க்கு தலைமகன்’ வெளியானது. ‘கொடுத்து வைத்தவள்’ தயாரானது.
ப.நீலகண்டன் எம்.ஜி.ஆரின் எந்தப்படத்திற்கும் வேலை செய்யவில்லை. காவல்காரன் மூலம் அந்த இடைவெளியையும் பூர்த்தி செய்து விட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வெளியான ஜெயலலிதா ஜோடியாக நடித்த காவல்காரன்.
காதுகொடுத்துக்கேட்டேன் குவா, குவா சத்தம் பாடலும், நினைத்தேன் வந்தாய் 100 வயது என்ற பாடலும் ஹிட்டானது. உண்மையில் படத்தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனுக்கு உள்ளுக்குள் பதற்றம்.
எம்.ஜி.ஆரால் தொடர்ந்து நடிக்க முடியுமா? பேசுவாரா? ரசிகர்களுக்கு இவர் பேசுவது புரியுமா? குரல் புரியாது தவிப்பார்களா? ஆனால் எம்.ஜி.ஆரை புரிந்து வைத்த ரசிகர்கள் அவரது மழலை மொழியை ரசித்து போற்றினர். அதனால் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை மென்மேலும் உயர்த்தினான் காவல்காரன்.
காவல்காரன் வெளியான சமயத்தில் முக்கியமான தீர்ப்பு ஒன்று வந்தது. அதாவது எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு. இறுதிக்கட்டத்தை 1967 நவம்பர் 4 அன்று தீர்ப்பின்படி எம்.ஆர்.ராதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும், அரசியல் தரப்பிலும், தொழில் போட்டியும் இருந்தது என்பது நிரூபணமானது. எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு எம்.ஆர்.ராதா தானும் இருமுறை சுட்டுக்கொண்டதாக நிரூபித்தனர் காவல்துறையினர்.
எனவே எம்.ஜி.ஆரை சுட்டுக்கொன்றுவிட்டு தான் புகழ் பெற வேண்டும் என்ற தீராத வேட்கையில் இருந்தார் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆரை கொலை செய்துவிட்டு தான் ஒரு திராவிட கழக தியாகியாக வேண்டும் என்கின்ற வேகம் எம்.ஆர்.ராதாவுக்கு அதிகமாக இருந்தது.
ராதா எம்.ஜி.ஆரை சுட்டது தற்செயலானது இல்லை. நன்கு திட்டமிடப்பட்ட சதி. ராதாவுக்கு வயது 57 ஆகிறது. இல்லாவிட்டால் இந்த குற்றத்திற்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இந்த குற்றம் 12,1967 அன்று நடந்தது. அன்றிலிருந்து ராதா சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன். இந்த இடத்தில் மிகமிக முக்கியமான தகவல்களைப் பார்க்கலாம்.
எம்.ஜி.ஆரும், ராதாவும் மிக நெருக்கமாக நின்றிருந்த சமயத்தில் துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றாலும் எம்.ஜி.ஆர் பிழைத்தது எப்படி? எம்.ஜி.ஆரை சுடுவதற்காக ராதா பயன்படுத்திய துப்பாக்கி ரவைகள் 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டது. தகர டப்பாவில் வைக்கப்பட்ட அந்த தோட்டாக்கள் தொடர்ந்து ஒன்றன் மேல் ஒன்று உராய்வதன் காரணமாக வீரியமிழந்துவிட்டன அந்த தோட்டாக்கள்.
இதனால் அந்த தோட்டாக்கள் எம்.ஜி.ஆரின் உயிரை வாங்கவில்லை. இது தடய அறிவியல் சோதனையிலிருந்து அறிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் 100வது படத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தார். அதாவது அவரது 100 படமான ‘ஒளிவிளக்கை’ வழக்கம் போல் திமுகவையும், அண்ணாவையும் திரையில் புகழ்ந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். முக்கிய மாக இந்தப்பாடலைச் சொல்லலாம். ”சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே நாங்க சட்டதிட்டம் மீறி இங்க நடப்பதில்லை”.
-ஹரிகிருஷ்ணன்