அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேர்தல் களத்தில் வசீகர பேச்சால் பட்டையை கிளப்பும் எம்.எல்.ஏ. கதிரவன் …!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தேர்தல் களத்தில் இளம் அரசியல்வாதியாக, ஒருமுறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொண்டு தொகுதி மக்களிடம் நல்ல பெயரை எடுத்திருக்கும் எம்.எல்.ஏ.வாக கொண்டாடப்படும் திருச்சி மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் தேர்தல் பரப்புரையில், மைக்கை பிடித்தால் தேர்ந்த அரசியல்வாதியே ஏறெடுத்து பார்க்கும் அளவுக்கு பட்டையை கிளப்பி வருகிறார்.

“மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு மருத்துவத்துறை சார்ந்த சேவைகளை செய்து வரும் என்னை, அதே துறை சார்ந்து அவமானப்படுத்தி வீழ்த்த வேண்டும் என்பது எதிர்தரப்பினரின் கனவாக உள்ளது.  அதற்காக எதிர்க்கட்சியினர் என் மீது அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். உங்கள் ஒத்துழைப்புடன் அவற்றையெல்லாம் வீழ்த்தி வெற்றி பெற்று எனது கல்வி சேவையும், மருத்துவ சேவையும் நான் உங்களுக்குத் தொடர்ந்து வழங்குவேன்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

மக்களை ஏமாற்றி சம்பாதிக்க, மணலை வைத்து சம்பாதிக்க, மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரால், மக்களின் வரிப்பணத்தை சூறையாட அதிமுகவினர் ஓட்டு கேட்டு வருகின்றனர். ” என்பதாக எதிர்க்கட்சியினரை அவருக்கே உரிய மென்மையான பாணியில், நறுக்கென்று சாடி வருகிறார்.

2026 June 11 - 17 Angusam Book

மேலும், “என்னைப் பொறுத்தவரை எனக்கு எந்த ஜாதி, மதமும் கிடையாது. மண்ணச்சநல்லூர் தொகுதியில் இருக்கும் ஒவ்வொருவரும் என் உறவினர்கள் தான். நீங்களும் என்னை அப்படித்தான் பார்க்கிறீர்கள். இந்த பந்தத்தை, யார் வந்தாலும் பிரிக்கவே முடியாது.” என்பதாக, மக்களின் மனங்களை கவரும் கலையையும் கைவசம் கொண்டிருக்கிறார்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

நிறைவாக, “ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு கல்வி, மருத்துவம் இரண்டும் மிகவும் முக்கியமானது. அந்த இரண்டையும் எனது தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்த வரை வாழ்நாள் முழுவதும் சேவையாகவே அளித்துக் கொண்டிருப்பேன். மீண்டும் தமிழகத்தில், திமுக தலைமையிலான நல்லாட்சி மலரவும் தொடரவும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் மகத்தான திட்டங்கள் கொண்டு வருவதற்கும், எனக்கு  உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ” என்பதாக, வேண்டுகோள் தொகுதி மக்களிடையே, உங்கள் வீட்டு பிள்ளையாகவே பேசி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், எம்.எல்.ஏ. கதிரவன்.

  –  அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.