அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

யார் யாரை திருமணம் செய்தால் இவர்களுக்கு என்ன ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

”பிரவுன் பியூட்டி” என்று வர்ணிக்கப்பட்ட அந்த பேரழகியை இந்தியா மறந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 2025 ஆம் ஆண்டு உ.பி.யில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்த சாதாரண பெண் மோனாலிசா போஸ்லே. அவரது காந்த விழி அழகு பார்ப்போரை வசீகரிக்க, ஒரே நாளில் உலக புகழ் பெற்ற பேரழிகியானார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. தற்போது, மாடலாகவும் சினிமா நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அவர் தனது காதலன் முகம்மது ஃபர்மான்கான் என்பவரை காதலித்து கரம்பிடித்த நிகழ்வு மீண்டும் வைரலாகியிருக்கிறது. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி மோனலிசாவும் முஹம்மது ஃபர்மானும் காதல் திருணம் செய்து கொண்டு, தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கேரளா – தம்பானூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததையடுத்து இந்த விவகாரம் தற்போது விவாதத்திற்கு வந்திருக்கிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

மோனாலிசா போஸ்லே திருமணம்
மோனாலிசா போஸ்லே இந்து மதத்தை சேர்ந்தவர். முகம்மது ஃபர்மான்கான் இசுலாமியர். அவர் மோனாலிசா போஸ்லே-வை ஏமாற்றி, லவ்ஜிகாத் செய்துவிட்டார் என்பதாக ஒரு கும்பல் விஷம பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டிருப்பதே தற்போதைய பரபரப்புக்கு காரணம். அதுவும், மோனாலிசா போஸ்லே-வுக்கு இன்னும் 18 வயது நிறைவடையவில்லை என்றும் புரளியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

இதற்கு பதிலளிக்கும் வகையில், ”தங்களது திருமணத்தை கேரளா திருமணச்சட்டத்தின்படி கே ஸ்மார்ட்டில் பதிவு செய்திருக்கிறோம். இருவரும் 18 வயதை பூர்த்தி செய்துவிட்டோம்.” என்பதாக, ஊடகங்களுக்கு ஆதாரங்களுடன் பேட்டியளித்திருக்கிறார்கள்.

யாவரும் கேளீர்

மோனாலிசா போஸ்லே திருமணம்மேலும், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றியபோது இருவரும் காதலிக்கத் தொடங்கியதாகவும், தங்களது காதலுக்கு மதம் ஒருபோதும் தடையாக கருதியதில்லை என்றும்; அவரை மதம் மாற்றவில்லை என்றும் இப்போதும் அவர் இந்துவாகவும் தான் இசுலாமியராகவும்தான் தொடர்வதாகவும் பதிலளித்திருக்கிறார், முகம்மது ஃபர்மான்கான்.

அநாகரீகமாகவும், அறுவெறுப்பான வகையிலும் அடுத்தவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் மூக்கை நுழைத்து அரசியலாக்குவதை பிழைப்பாகவே கொண்ட கும்பலின் பித்தலாட்டங்களை ஊடக பேட்டியின் வழியே அம்பலப்படுத்திவிட்டார்கள் மோனலிசாவும் முஹம்மது ஃபர்மானும்.

–              கலைமதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.