“இந்தி தெரிந்தால் தான் பிழைக்க முடியும்” புதுமுக நடிகையின் கண்டுபிடிப்பு!
கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியலில் பட்டப்படிப்பு முடித்து, சில குறும்படங்கள், மேடை நாடகங்கள் மூலம் நடிப்பில் அனுபவம் பெற்றவர், பரத நாட்டியத்திலும் ஜொலிப்பவர் வர்ஷினி கார்மேகம். இவருக்கு இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம். ஏன்னா இந்தியில் சரளமாக பேசுவாராம், எழுதுவாராம். அதுவும் போக ஐஸ்வர்யா ராய், தபு, ரேகா போல சாதிக்கனும்னா இந்தியில் நடித்தால் முடியும் என்ற நம்பிக்கை இவருக்கு.

ஆனால் ‘மொதராத்திரி’ என்ற தமிழ்ப்படம் தான் இவரை சின்ன நடிகையாக அடையாளம் காட்டியுள்ளது. இதில் ஹீரோ ரிஷிகாந்தின் முறைப் பெண், மைக் செட் இளைஞனை பார்வையால மட்டும் லவ் பண்ணும் ரம்யா கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த வர்ஷினி மீடியாக்களிடம் பேசும் போது, “இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசைக்கு நான் அடிமை. தென்னிந்திய நடிகைகளில் சாய் பல்லவி தான் எனது ஃபேவரைட். நடிகர்களில் தனுஷ் சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இப்போது ஓடிடி பிளாட்பார்ம்கள் வளர்ந்து வருவதால் இந்தி தெரிந்திருப்பது சினிமா கலைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளைக் கொண்டு வரும். ஒரே மொழிக்குள் சுருங்கிவிடக்கூடாது” என்கிறார்.
— மோனிஷா







Comments are closed, but trackbacks and pingbacks are open.