த.வெ.க வினர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை – எம்.பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சியில் விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

த.வெ.கவினர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. திமுக – அதிமுகவை மையப்படுத்தியே குதிரை பேரம் நடந்துள்ளதாக சி.வி சண்முகம் கருத்திலிருந்து இருந்து தெரிகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அரசியலில் குழப்பமான சூழலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது நடக்க தான் செய்யும்.

த.வெ.க அரசு காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் வழங்கும். சில இழுப்பறிகள் இருக்கத்தான் செய்யும். அது விரைவில் சரியாகும். ஒரு இடமோ அல்லது இரண்டு இடமோ வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

சனாதனம் என்பது ஜாதி ஏற்றத்தாழ்வுகள் தான். அது ஒழிய வேண்டும் என தான் உதயநிதி பேசியுள்ளார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதிமுக பிளவு எதிர்பார்த்தது தான். தமிழ்நாட்டில் தற்போது ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரு தரப்பிலும் மதச்சார்பின்மையை ஏற்றுக்கொண்ட கூடியவர்கள் தான் இருக்கிறார்கள் எனவே இங்கு பாஜக ஊடுருவ வாய்ப்பில்லை.

இந்தியா கூட்டணி என்பது பாஜக எதிர்ப்பை மையப்படுத்தியதுதான். அந்த வகையில் பாஜகவை எதிர்க்கும் திமுக இந்தியா கூட்டணியில் தான் உள்ளது. தேர்தல் முடிந்த இந்த நேரத்தில்  சில நெருடல்கள் இருக்கிறது வரும் காலத்தில் அது சரியாகும்.

நீட் தேர்வை சரியாக நடத்த முடியாத ஆட்சி தான் பாஜக ஆட்சி உலகத்தின் விஸ்வ குரு என தன்னை அழைத்துக் கொள்ளும் பிரதமர் மோடியால் நீட் தேர்வை கூட நேர்மையாக நடத்த முடியவில்லை இதற்குப் பின் வேறு அரசியல் இருக்கும்.

ஜோசியரை தனது சிறப்பு அதிகாரியாக நியமித்த விஜய் அதற்கு எதிர்ப்பு வந்த பின்பு அதனை வாபஸ் பெற்றார்.  இது விஜய் நல்ல ஆலோசனைகளை உள்வாங்க தயாராக இருப்பதை காட்டுகிறது. வரும் காலங்களில் சட்டசபையில் ஆரோக்கியமான விவாதங்கள் இருக்க வேண்டும்.

த.வெ.க அரசை கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும் அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை செய்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் கடந்த ஆட்சியில் அதுபோன்ற குழு ஏற்படுத்தப்படாததால் பல பிரச்சனைகளும் போராட்டங்களும் நடந்தது எனவே இந்த ஆட்சியில் அப்படிப்பட்ட ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும்.

இந்த சந்திப்பின் போது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் , மாவட்ட பொருளாளர் முரளி, கோட்ட தலைவர் ராஜா டேனியல் ராய், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.