அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“இன்னும் இரண்டு தலைமுறைக்கு விஜய் தான் முதல்வர்”

திருச்சியில் அடகு நகையை விற்க

‘ஸ்ரீவெங்கடேஸ்வரா தயாரிப்பில் ராஜா பத்மநாபன் டைரக்‌ஷனில் பலராம் ஜெ.பாலாஜி நடனத்தில் வெளியாகியுள்ளது ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ என்ற மியூசிக் ஆல்பம். அஸ்வமித்ரா இசையில்  ஜி.வி.பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் தினேஷ், பாடல் எழுதியது ஜெயந்தி, எடிட்டிங் :ராம் கோபி, ஒளிப்பதிவு : இளையராஜா, ஆர்ட் டைரக்டர் : சம்பத் திலக், தயாரிப்புத் தலைமை : அண்ணாமலை, பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல் நாசர்.

இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மே.13ஆம் தேதி இரவு நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் சரண், எழில், பேரரசு, ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே வழக்கம் போல் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி சொன்னார்கள்.

Silent Influencer Album டைரக்டர் ராஜா பத்மநாபன், “2025 டிசம்பரிலேயே இதை ஷூட் பண்ணிட்டோம். ஆனாலும் இப்போதைய சூழலுக்கும் பொருந்தி வருகிறது. என்னுடைய முதல் படைப்பை மீடியாக்கள் தான்  மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்”.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

பலராம் ஜெ.பாலாஜி, “சினிமாவில் நான் ஹீரோவாக வேண்டும் என்பதற்கு எனது அம்மாவும் அப்பாவும் ரொம்பவும் ஊக்கப்படுத்தினார்கள். நானும் அந்த முயற்சியில் இருந்த போது எனது அப்பா திடீரென இறந்துவிட்டதால், அவருடைய நகைக்கடை பிஸ்னஸுக்கு போய்விட்டேன். அதில் கொஞ்சம் ஸ்டராங்கான பிறகு ஹீரோவாகும் முயற்சியைவிட இந்த மாதிரி சிங்கிள் ஆல்பம் மூலம் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்த பின் ஹீரோவாகலாம் என்ற முடிவுடன் இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளேன். மீடியாக்கள் நல்லாதரவு தர வேண்டும்”.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

டைரக்டர்கள் எழிலும் சரணும் இந்த ஆல்பத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினார்கள்.

Silent Influencer Album அடுத்து பேச வந்த டைரக்டர் பேரரசு தான் முதல்வர் விஜய்யின் புகழ் பாட ஆரம்பித்தார்.

“நம்ம சினிமாவிலிருந்து விஜய் முதல்வராகியிருப்பதால், ஆண்டு தோறும் அரசு தரும் விருதுகளை அந்தந்த ஆண்டே வழங்க வேண்டும். அஞ்சு வருசம், ஆறு வருசம் சேர்த்து வழங்கக்கூடாது. சினிமா இப்ப கஷ்டத்துல இருக்கு. இதுக்கெல்லாம் விடிவு காலம் நம்ம முதல்வர் விஜய் கையில தான் இருக்கு”.

ஆர்.வி.உதயகுமார், “விருது கிடக்குது, விருது. இப்ப அதுவா முக்கியம? மக்கள் பிரச்சனைகள் தான் முக்கியம். நம்ம முதல்வர் விஜய் அதுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கணும். இன்னும் இரண்டு தலைமுறைக்கு விஜய் தான் முதல்வர். இதில் சந்தேகமேயில்லை” என பொளந்து கட்டி புல்லரிக்க வைத்தார்.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.