தொடர்ந்து ரஜினியை அட்டாக் பண்ணும் டைரக்டர்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘அலர் ஸ்டுடியோஸ்’ பேனரில் மலர்விழி நடேசன் தயாரிப்பு & டைரக்‌ஷனில் உருவாகியிருக்கும் படம் ‘சிக்னல் அட் 11.30’. இணைத் தயாரிப்பு ஷிவானி சுப்பிரமணி. படத்தின் ஹீரோவாக பவ்யா த்ரிகா, பூஜிதா பொன்னடா, ஹீரோயின்களாக பவ்யா த்ரிகா, பூஜிதா பொன்னடா மற்ற மெயின் கேரக்டர்களில் ஜெயப்பிரகாஷ், மூனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ‘சிக்னல் அட் 11.30’-ன் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா இருநாட்களுக்கு முன்பு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ‘பிளாஸ்ட்’ பட டைரக்டர் சுபாஷ் கே.ராஜ், நடிகர் விதார்த், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசியவர்கள்…

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ஷிவானி சுப்பிரமணி, “எனது அம்மா மலர்விழி யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இப்படத்தை டைரக்ட் பண்ணியிருந்தாலும் மிகவும் கடினமாக உழைத்து பல ரெஃபெரென்ஸ்களை கையில் வைத்துக் கொண்டு தான் படத்தை டைரக்ட் பண்ணியுள்ளார்”.

படத்தின் ஹீரோயின்கள் பூஜிதா பொன்னடா, பவ்யா த்ரிகா,  ஆர்ட் டைரக்டர் முனி கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் ராஜா, மியூசிக் டைரக்டர் இமான், எடிட்டர் கலைவாணன், நடிகர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் படத்தின் சிறப்பு குறித்து சுருக்கமாகப் பேசினார்கள்.

ஹீரோ சந்தோஷ் பிரதாப், “ரொம்ப நாளைக்குப்புறம் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன். இப்போது பெண்கள் எல்லாத்துறைகளில் சாதனைகள் புரிகிறார்கள். இந்தப் படத்தின் டைரக்டர் மலர்விழி மேடமும் இப்படத்தின் மூலம் சாதிப்பார்”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மலர்விழி நடேசன், “இது எனக்கு இரண்டாவது படம். படத்தில் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள் ஆதரவுடன் நல்ல படத்தை தந்திருக்கும் நம்பிக்கை எனக்கிருக்கு’.

“தனஞ்செயன், “நாலைந்து மாதங்களாக தமிழ் சினிமா நல்ல நிலையில் போய்க் கொண்டிருக்கு. வரிசையாக வெற்றிப்படங்கள் வந்துக்கிட்டிருக்கு. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்-2’ வசூலில் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. வெற்றிகள் தொடர வேண்டுமானால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் ஓனர்கள் 100 ரூபாய் டிக்கெட் ஃபிக்ஸ் பண்ணினால் தமிழ் சினிமா இன்னும் செழிப்பாக வளரும்”.

ஆர்.வி.உதயகுமார், “பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களை தமிழ்நாட்டில் இருக்கும் 1,200 தியேட்டர்களிலும் போட்டு கலெக்‌ஷன் அள்ளினால் அதுக்குப் பேர் வெற்றியே கிடையாது. எல்லாமே பம்மாத்து. அது சரி இப்ப எதுக்கு காலைல 6 மணிக்கு ஷோ போடணும்” என ஏடாகூடமாகப் பேசினார்.

சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கூட ரஜினி பேரைச் சொல்லாமல், ரஜினியை அட்டாக் பண்ணிய ஆர்.வி.உதயகுமார், இந்த ‘சிக்னல் அட் 11.30’ நிகழ்ச்சியிலும் ரஜினியைப் பற்றி ராங்காகப் பேசி மேடையில் இருந்தவர்களை எரிச்சலாக்கினார்.

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.