நயன்தாராக்களும் நகர்ப்புற சைக்கோக்களும்..
நயன் சமீபத்தில் ஒரு பகிர்வில், “என்னை திருமணம் செய்த காரணத்தால் விக்னேஷ் சிவன் அனுபவிக்கும் வசைமொழியை கேட்க சகிக்கவில்லை” என்று சொல்லியிருந்தார்..
நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றியும் திருமண வாழ்க்கையைப் பற்றியும், பலதரப்பட்ட கருத்துக்கள் காலா காலமாக மக்களிடையே உலவி வருவது எல்லோரும் அறிந்ததே..
திருமணம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்.. பொது ஜன திருமணங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுத்தப்படுவதில்லை.., சினிமாக்காரர்களின் திருமணம் மட்டும் பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்யப்படுவது துரத்ரிஷ்ட்டமே..
எனக்குத்தெரிந்து ஒருவரை ஒருவர் திருமணம் செய்துக்கொண்ட சினிமாக்காரர்கள், பலகாலம் சந்தோஷமாய் குடும்பம் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்..
ஒரு காதல் தோல்வியே பலரை சிதைத்துவிடும்..நயனுக்கு ஏற்பட்ட அனுபவங்களைத்தாண்டி, அவர் இப்போது இருக்கும் ஆரோக்கியமான மனநிலையையும் வாழ்க்கையையும் பார்க்கும்போது மன நிறைவாய் இருக்கிறது…
நிறைய சினிமா விவாகரத்துக்களை பற்றி நீங்கள் சமீபத்தில் படித்திருந்தாலும், உங்கள் கண்ணுக்குத்தெரியாமல் அற்புதமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சினிமா ஜோடிகள் தான் ஏராளம்….அதில் நயன் ஒரு சமீபத்திய உதாரணம் மட்டுமே..

வைத்தியர் எனக்கூறி, 15 வருடங்களில் பல திருமணம் செய்த மயிலாடுதுறை பெண் கைது..
வாரத்தில் இரண்டு நாள் கணவனுடன் குழந்தை இருக்க வேண்டும்” என்கிற நீதிமன்ற உத்தரவினால் கொதிப்படைந்த சுசானா சேத்’ என்கிற பெங்களூர் பெண் குழந்தையை கோவாவில் கொன்று பெட்டியில் திணித்து பெங்களூர் வரை காரில் பயணம்..
கள்ளக்காதலனுடன் உல்லாசமாய் இருக்க இரண்டு குழந்தைகளை கொன்ற சென்னைப்பெண் அபிராமி..…
இவர்கள் சினிமாவில் வேலை செய்தவர்கள் அல்ல..இவர்கள் சமூகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சில உதாரணங்கள்…
திருமணம் ஆகும் முன், ஒரு தாய், தன மகளுக்கு தந்த அறிவுரை கீழே..:
கணவனுக்கும் குழந்தைக்கும் உன்னால முடிஞ்சத சமைச்சி போடு..மேற்கொண்டு ஏதாவது வேணும்னு கேட்டா, அவங்களையே சமைச்சிக்க சொல்லு..
ஆனா ஒரு விஷயம் மறந்துடாதே.. விருந்துக்கு வர்றவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சி போடு..அப்போதான் உன் கணவனும் குழந்தையும் “அம்மா சரியா சமைக்க மாட்டாங்கன்னு” சொன்னா உலகம் நம்பாது”.
அடிக்கடி விவாகரத்து வேணும்னு கேளு..அப்போதான் கணவன் அடிமை மாதிரி உன் காலடியிலேயே கிடப்பான்..
கணவனை குழந்தையிடம் கண்டிப்பா இருக்க சொல்லு…அடிச்சா கூட கண்டுக்காதே..அப்போதான் குழந்தை அப்பாவை வெறுத்து உன்கிட்ட ஓட்டுவான்…
கணவன் ரொம்ப முரண்டு செஞ்சா, குழந்தை படிப்பை நிறுத்திடு…அதுதான் உன் புருஷனை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும்..

அடிக்கடி நகை வேணும்னு கேளு..வாங்கித் தரலைனா, “நீ ஆம்பளையே இல்லைனு” அவமானப்படுத்து…
இது கற்பனை சம்பாஷணை அல்ல..இதன் முழு தாக்காததையும் 21 வருடங்கள் தாங்கிக்கொண்டவன்..
அவள் சினிமாக்காரி அல்ல..
சுசானா சேத் , அபிராமி, மயிலாடுதுறை பெண்….. இவர்கள் யாரும் சினிமாக்காரர்கள் அல்ல..
ஆனால் ஒரே ஒரு விஷயத்திற்கு மாத்திரம் என் மாஜி மனைவிக்கு நான் இன்றைக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்..
என்னையும் என் மகனையும் விஷம் வைத்து கொல்லாத கருணைக்காக..
சினிமாவில் திருமணம் செய்திருந்தால்……
சத்தியமாய் இதைவிட சந்தோஷமாய் இருந்திருப்பேன்..
— கோபி கண்ணதாசன்.