அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நியோமேக்ஸ் : ஏல நடைமுறையில் மாற்றம் தேவையா?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நியோமேக்ஸ் சொத்துக்கள் ஏலம் தொடர்பான நடைமுறையில் நீதிமன்றம் எதிர்பார்த்த மாதிரியாக ஏலம் போகாமல் சுணக்கம் ஏற்பட்டிருப்பது, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு மாதத்தை  கடந்த நிலையில், வெறும் 333 பிளாட்டுகள் மட்டுமே விற்பணையாகியிருக்கின்றன. அதிலும் 2 பேர் மட்டுமே வெளி நபர்கள். இதைவிட, ஏற்கெனவே 7000 கோடிகளுக்கு மேல் புகார்களின் மதிப்புகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 2000 கோடி அளவுக்கான சொத்துக்கள் ஏலத்துக்கு வந்திருக்கும் நிலையில், அதிலும் இதுவரையில் வெறும் 47 கோடியே 40 இலட்சம் ரூபாய் அளவுக்குத்தான் ஏலம் போயிருக்கிறது என்பதும் கவலைக்குரிய ஒன்றாக மாரியிருக்கிறது. நீதிமன்றம் எதிர்பார்த்தபடி 2000 கோடி அளவுக்கு மொத்த சொத்தும் ஏலம் போயிருந்தாலும், அதை 7000  கோடிக்கு எப்படி விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொடுப்பது என்றிருந்த  நிலையில் தற்போது அதற்கும் வழியில்லை என்ற நிலையை தோற்றுவித்திருக்கிறது.

பிளாட்டுகளின் விலை கூடுதலாக நிர்ணியக்கப்பட்டிருப்பது மற்றும் போதிய விளம்பரம் இல்லாததை குறையாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மாவட்டம் தோறும் விளம்பரபடுத்துவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

மே-15 ஆம் தேதியுடன் ஏல நடைமுறைகள் முடிவுக்கு வரும் நிலையில், இதுவரையிலான ஏலத்தில் விற்பணையாகாத பிளாட்டுகளை மீண்டும் மறு ஏலத்துக்கான அறிவிப்பு மே-16 ஆம் தேதி வெளியிடப்படும் என்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதுவரையிலான அனுபவங்களை பரிசீலித்து மறு ஏலத்தின்போது உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதேசமயம், இதுவரையில் அடையாளம் காணப்பட்ட நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களை அட்டாச்மெண்ட் செய்யும் விவகாரத்திலும் அக்கறை செலுத்த வேண்டும் அதன் நடைமுறைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் முன் எழுந்திருக்கிறது.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

முழுமையான வீடியோவை காண 

யாவரும் கேளீர்

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.