மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கப்போகிறதா நியோமேக்ஸ் ! சர்ச்சையை கிளப்பிய சுந்தர் தியாகராஜன் ஆடியோ பதிவு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கப்போகிறதா நியோமேக்ஸ் ! சர்ச்சையை கிளப்பிய சுந்தர் தியாகராஜன் ஆடியோ பதிவு !நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்பப் பெறுவதற்காக, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களுக்குள், “நியோமேக்ஸ் சட்டப் போராட்டக்குழு” என்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு சட்ட ரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இத்தகைய சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகள் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்திருப்பதோடு, நியோமேக்ஸ் நிறுவனம் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிடும் என்பதாகவும் பூச்சாண்டி காட்டியிருக்கிறார், நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களுள் ஒருவரான சுந்தர்தியாகராஜன்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

நியோமேக்ஸ் ராமமூர்த்தி.
நியோமேக்ஸ் ராமமூர்த்தி.

அவரது சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி சில விளக்கங்களை முன்வைத்திருக்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அவரது விளக்கம்:

நியோமேக்ஸ் குழும நிறுவனங்களில் முதலீடு செய்து, அதை திரும்ப பெற இயலாமல், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுத்து விட்டு, தீர்வுக்காக காத்துக் கொண்டிருக்கும், அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சிவகாசி ராமமூர்த்தியின் இந்த பதிவு எதற்காக என்றால் நேற்று (13/09/2024 ) நள்ளிரவில் மூத்த குடிமக்களுக்கு தீர்வு காண்பதற்கு என உருவாக்கப்பட்ட ஒரு சங்கத்தின் தலைவராக இருக்கும் திருச்சியை சேர்ந்த ஐயா சுந்தர் தியாகராஜன் ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் தான் இந்த பதிவு.

நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.
நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.

என்னை அல்லது ஒருங்கிணைந்த சட்ட போராட்டக் குழுவை நீங்கள் சீண்டிப் பார்த்தால் இறுதியில் நஷ்டம் உங்களுக்குத்தான் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இனி மேல் ஆடியோ போடவும். நீங்கள் என்றால் மோசடி நிறுவனத்திற்கு எல்லா விதத்திலும் ஆதரவாக பேசுவதால் உங்களைப் பற்றி பேசினாலும் அது மோசடி நிறுவனத்தார்கள் பற்றி பேசினாலும் எல்லாம் ஒன்று தான்.

உங்களைப் போன்று நாங்கள் கை கூலிகள் அல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். பாதிக்கப்பட்டவர்களாகிய எங்களுக்கு வர வேண்டிய தீர்வு தொகையை, பணமாக, அசல், வட்டி மற்றும் முதிர்வு தொகை ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்கு சட்ட ரீதியாகத் தான் போராடுகிறோம். உங்களால் இயன்றால் எங்களை சட்ட ரீதியாக எதிர்த்து போராடுங்கள். அதை விட்டு விட்டு பெரும் குற்றச் செயல்கள் மூலம் என்னை அல்லது ஒருங்கிணைந்த சட்ட போராட்ட குழுவை மிரட்டிப் பார்த்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கடுமையாக எச்சரிக்கை விடுகிறேன். நல்லவனுக்கு நல்லவன் என்பது தான் என் கோட்பாடு.

குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுக்கும் என்பார்கள். எங்களை மோசடி செய்த நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கைகள் எடுத்தாலும் அதைப் பற்றி நீங்கள் விமர்சனம் செய்வது எதனால். உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் இதில் உங்களின் கருத்துக்களை நாங்கள் யாரும் கேட்க வில்லை. தானாக வந்து வம்பு சண்டை இழுக்க வேண்டாம். எதற்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிறுவனத்திற்கு எதிராக யார் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுத்தாலும் நாங்கள் அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். இனி மேல் உங்களுக்கு தூக்கம் வராது. ஏனென்றால் நீங்கள், மக்களை ஏமாற்றியவர்கள் மற்றும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பது பெரும்பாலோர் அறிந்த விசயம். எப்பொழுது நம் வேசம் கலைந்து விடுமோ, மக்கள் நம்மை தெருத்தெருவாக ஓட ஓட விரட்டி அடிப்பார்களோ என்ற பயம் வந்து விட்டது.

neomax company
neomax company

அந்த சீன் உங்கள் அனைவரின் கணவிலும் வருவதால் இனி உங்களுக்கு தூக்கம் வராது. சாது மிரண்டால் நாடு கொள்ளாது என்ற நிலை தான் ஏற்பட இருக்கிறது. பொருத்தது போதும் என்று நாங்கள் வெகுண்டு எழுந்தால் நீங்கள் அனைவரும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட வேண்டிய காலம் வெகு விரைவில் வந்து விடும் என்பதை உணர ஆரம்பித்து விட்டீர்கள் என்பதை இந்த ஒருங்கிணைந்த சட்ட போராட்ட குழுவைப் பற்றிய உங்கள் விமர்சனம் காட்டிக் கொடுக்கிறது.

தீர்வு விரைவில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கான வேலைகளை பார்க்க வேண்டும். அதை தவிர்த்து பொய் மற்றும் பித்தலாட்டங்களால் ஒன்றும் சாதித்து விட இயலாது. உங்களின் பதிவுகளை கேட்கும் பொழுது, எங்கள் மனது மிகவும் வேதனைப்படுகிறது. ஏனென்றால் இனியும் உங்களை நம்பி உள்ள பலர் அதிலும் படித்தவர்கள் கூட உங்களின் வேசத்தை அறிந்த பின்பும் தீர்வுக்கான மாற்று வழிகளை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறார்களே என்று.

சுந்தர் ஐயா, நீங்கள் ஊர் ஊராக செல்வது எதற்காக என்று அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். வாங்கிய கூலிக்கு நிறுவனம் கட்டளையிடும் வேலையை செய்வது. அதாவது அவர்கள் செய்யும் புதிய தொழில்களுக்கு மறைமுகமாக ஏற்படுத்திக் கொண்ட உள் ஒப்பந்தம் மூலமாக வியாபார நோக்கில் உதவுவது. பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தி புகார் கொடுக்க விடாமல் தடுப்பது. இது போன்ற பல விதமான விசயங்கள் கெட்ட எண்ணத்தில் செய்வதற்கு. இவை எல்லாம் உங்களின் சுயநலத்திற்காக செய்கிறீர்கள் என்பது எல்லோரும் அறிந்த விசயம்.

neomax company
neomax company

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

புகார் கொடுத்த எங்களுக்கு எதை, எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெரியும். எங்களால் உங்களின் மோசடி திட்டங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடும் என்ற பயத்தில் நீங்கள் நடுராத்திரியில் உளறுவதை வைத்து உங்களின் நிலையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. மாவட்டம் வாரியாக பல குழுக்கள் மூலமாக பல விதமான வழக்குகள் தொடுக்கப்படும். இப்பொழுது வந்திருக்கும் நீதி மன்ற உத்தரவு போல் பல்வேறு உத்தரவுகள் தொடர்ந்து வரும் காலம் வந்து விட்டது.

நாங்கள் படும் கஷ்டங்கள், உங்களுடைய இடை தரகர்கள் அதாவது மோசடி ஏஜெண்டுகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனி அவர்கள் அதை அனுபவிக்க போகும் பொழுது தான், தன் வினை தன்னைச் சுடும் என்பதை புரிந்து கொள்வார்கள். நமக்கென்ன நாம் சம்பாதித்து விட்டோம் என்ற மமதையில் இருந்த உங்கள் ஏஜெண்டுகளை இனி நிம்மதியாக வாழ விட மாட்டோம்.

அவர்களும் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்குவோம். இப்பொழுது நடைபெற்ற வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகளை மட்டும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறும் உங்களுக்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையை பதம் பார்த்தால் போதும் என்பதற்கு இணங்க இதே போன்று வழக்கை பொது நலன் கருதி தொடுக்கும் பொழுது அது அனைத்து நியோமேக்ஸ் குழும நிறுவனங்களின் ஏஜெண்டுகளுக்கும் பொருந்தும் என்ற தெளிவான உத்தரவு வர அதிக காலம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் வெகுண்டெழுந்து போராட ஆரம்பித்து விட்டால் உங்கள் தலைவர்கள் தானாக தீர்வை நோக்கி வந்து விடுவார்கள். தேவையான பொழுது அதை செய்வதற்கு எங்களால் இயலும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறை சாலை போதாது என்றாலும், காவலர்கள் பற்றாக்குறை என்றாலும் அதை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை. எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படி தானாக நடக்கும். ஜீ பூம்பா கதையை சொல்லி யார், யாரை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.

NeoMax_ad
NeoMax_ad

ஒருங்கிணைந்த சட்ட போராட்டக் குழுவினர் அனைவரும் நல்ல எண்ணங்களுடன் பொது நலனுடன் செயல்படுகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். முதல் தகவல் அறிக்கையில் உள்ள சட்ட விதிகள் பற்றி எங்களுக்கு நன்கு தெரியும். எப்படி உங்களிடமிருந்து அசல் மற்றும் அதற்குறிய திட்ட பலன்களை பெற வேண்டும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு அதை கொடுக்க வக்கில்லை என கூறிவிட்டு மஞ்சள் நோட்டீஸ் கொடுக்க இயலுமா? இயன்றால் செய்து பாருங்கள் அதன்பின் என்ன நடக்கும் என்பதை புரிய வைக்கிறோம்.

எங்களிடம் பணம் வாங்கும் பொழுது கூறியவற்றை மறந்து விட்டீர்களா, ஞாபகம் வர பழைய வீடியோ மற்றும் ஆடியோக்களை போட்டு காட்டவா? நிதி நிறுவனங்கள் போல் செயல்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியாத ஒன்றா. உங்களைப்பற்றி அறியாதவர்களிடம் பேசுவது போன்று ஒருங்கிணைந்த சட்ட போராட்ட குழுவிடம் பேச வேண்டாம். நாங்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் எங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்பதை மறந்து விட வேண்டாம் என எச்சரிக்கிறோம்.

DRO அவர்கள் அலுவலகம் பதிவு செய்யும் அறிக்கை எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின் முதல் புகார் தாரருக்கு எப்படி தீர்வு கொடுத்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இதுவும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான். முதல் நபருக்கு எப்படி செட்டில்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கின்றதோ, அதே மாதிரிதான் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இவை எல்லாம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆவணங்கள் ஆக உள்ளது. நிலமாக எப்படி கொடுக்க வேண்டும், பணமாக எப்படி கொடுக்க வேண்டும் என்பது நிரூபணம் ஆகி விட்டது.

நிறுவனம் அவர்களுக்கு வேண்டியவர்கள் உடன் ஏற்படுத்திக் கொண்ட பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம், நிறுவனம் சொத்துக்களை வாங்கியது மற்றும் விற்றது எதன் அடிப்படையில் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அதனால் எப்படி முதிர்வு தொகையை பெற வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியும்.

neomax new - 1
neomax Team – 1

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விட்டால் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் தானாக காவல்துறை கைப்பற்றி அதனை முறையாக உரிய துறை மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டுமே தவிர குற்றவாளிகளிடம் சொத்துக்களை கொடுங்கள் என யாரும் கையேந்த வேண்டியதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இனிமேல் உங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று பேசுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். உங்கள் பதிவிற்கு உடனடியாக பதில் பதிவு போடுவோம்.

உங்களால் நேருக்கு நேராக எங்களுடன் விவாதம் செய்ய இயலுமா? இயலும் என உங்களுக்கு தோன்றினால் அதற்கு ஏற்பாடு செய்யவும். நாங்கள் உங்களுடன் நேருக்கு நேராகக் கூட விவாதம் செய்ய தயாராக இருக்கிறோம். நிறுவனம் vs பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள். பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிறுவனம் எங்களுடன் வெளிப்படையான பேச்சு வார்த்தைக்கு தயாரா? நாங்கள் உரியவர்களிடம் அனுமதி பெற்று உங்களுடன் பேச்சு வார்த்தைகளுக்கு தயாராக இருக்கிறோம். பொதுநலன் கருதி இதை வெளிப்படையாக முறையாக செய்ய நிறுவனம் முன்வருமா?.

புதிய ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு பணம் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், அதை யாரை வைத்து செய்கிறார்கள் அதன் நோக்கம் என்ன என்பது பற்றிய முழு விவரங்களையும் வெளியிட இயலுமா?. அந்த புதிய தொழில் மூலம், புகார் கொடுக்காதவர்களுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரப் பூர்வமாக இயலுமா? பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் இருந்து செய்தித்தாள்கள் மூலமாக வந்த எச்சரிக்கை என்ன என்று புரியவில்லையா?

Neomas_
– 1

கடந்த ஒன்றை வருடங்களாக நீங்கள் செய்து முடித்த நல்ல காரியங்கள் என்ன என்று பட்டியல் இட இயலுமா. VG project களில் ஈடுபட்டுள்ளவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது யாருக்காக என்பதை புரிந்து கொள்ள எங்களால் இயலாதா? அந்த ஏஜெண்டுகள் பிளாட்டுகளை விற்று அதில் கிடைக்கும் கமிஷன் மூலமாக பல லட்சங்கள் அல்லது கோடிகளை சம்பாதிக்க ஓடுகிறார்கள். இதுவரை அவன் எவனாவது பாதிக்கப்பட்ட யாருக்காவது எதாவது நல்லது செய்திருக்கிறானா? பாதிக்கப்பட்டவர்கள் மனது நோகும் படி எப்படி பேசுகிறார்கள் என்பதை ஆடியோ போட்டு காட்டவா?.

முழு நேர ஏஜெண்டுகளாக செயல்பட்டவர்கள் குற்றவாளிகள். மோசடி செய்த நிறுவனத்திற்கு ஆதரவாக பேசும் நீங்கள் எந்த வகையில் நல்லவர் . நிறுவனத்தை பற்றி பேசினாலும், நிறுவனத்தின் ஆதரவு பெற்ற நிறுவனத்தின் பேச்சாளராக செயல்படும் உங்களைப் பற்றி பேசினாலும் எல்லாம் ஒன்று தான்.” என்பதாக விளக்கம் அளித்திருக்கிறார், ராமமூர்த்தி.

– அங்குசம் புலனாய்வுக்குழு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.