கட்டப்பஞ்சாயத்து ரவுடி கொட்டப்பட்டு செந்திலுக்கு காலில் மாவுக்கட்டு ! ”ஆபரேஷன் வருண்” ! சாத்தனூர் அண்ணாமலை தலைமறைவு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கட்டப்பஞ்சாயத்து ரவுடி கொட்டப்பட்டு செந்திலுக்கு காலில் மாவுக்கட்டு ! ”ஆபரேஷன் வருண்” ! சாத்தனூர் அண்ணாமலை தலைமறைவு !

திருச்சியில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய ரவுடி கொட்டப்பட்டு செந்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதே குற்றச்சாட்டில் தொடர்புடைய கட்டப்பஞ்சாயத்து பேர்வழி சாத்தனூர் அண்ணாமலை தலைமறைவாக இருந்து வருகிறார்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

திருச்சியில் மதுரை செல்லும் வழியில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

கொட்டப்பட்டு செந்தில்
கொட்டப்பட்டு செந்தில்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமையப்போகிறது என்ற அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே, இந்த பகுதியில் நிலங்களின் மதிப்பு கிடுகிடுவென உயரத் தொடங்கின. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு, விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி பிளாட் போட்டு விற்கத் தொடங்கினர்.

இதுபோன்ற, ரியல் எஸ்டேட் பிரமுகர்களை குறிவைத்து அவர்களுடன் மல்லுக்கு நின்று மாமூல் வாங்குவது தொடங்கி, அவர்களது தொழிலுக்கு பல்வேறு வகைகளில் இடையூறு செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள்தான் தற்போதைய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கொட்டப்பட்டு செந்திலும், சாத்தனூர் அண்ணாமலையும் என்கிறார்கள்.

சரித்திர பதிவேடு குற்றவாளியான கொட்டப்பட்டு செந்தில் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள். கொட்டப்பட்டு செந்திலைப்போல, நேரடியாக ரவுடியிசத்தில் இறங்காமல் சம்பந்தபட்ட இடத்தில் ஏதோ ஒரு வில்லங்கத்தை உருவாக்கி, பின்னர் அவர்களிடமே கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பதையே தொழிலாக கொண்டவர் சாத்தனூர் அண்ணாமலை என்கிறார்கள்.

இருபது வருடங்களுக்கும் மேலாக, ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஷ்ட்ரக்ஷன் நிறுவனம் நடத்தி வரும் நபரிடம் இவர்கள் இருவரும் கூட்டாக பிரச்சினை செய்த விவகாரத்தில்தான் வகையாய் சிக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் போலீஸ் லிமிட்டில் அமைந்துள்ள ஓலையூர் திருமலைசமுத்திரம் பகுதியில் பிளாட் போட்டு வீடாகவும் மனையாகவும் விற்று வந்திருக்கிறார் அந்த கன்ஷ்ட்ரக்ஷன் நிறுவனத்தை நடந்தி வந்த நபர்.

சாத்தனூர் அண்ணாமலை
சாத்தனூர் அண்ணாமலை

அந்த பகுதியில் அவர் பிளாட் போட்ட நாளிலிருந்தே இருவரும் பல்வேறு வகைகளில் குடைச்சல் கொடுத்து வந்ததாக சொல்கிறார்கள். குறிப்பாக, பலரிடமிருந்து நிலத்தை பெற்று பின்னர் அவற்றை ஒரே மனையாக்கி விற்று வந்திருக்கிறார்.

அதில் ஒரு சர்வே எண்ணின் மூலப்பத்திரம் ஒன்று தங்களிடம் இருப்பதாக சொல்லித்தான் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார், சாத்தனூர் அண்ணாமலை. ”நான் அண்ணாமலை பேசுறேன் … “ என்பதாக தொடங்கும் அந்த மிரட்டல் ஆடியோவில், மார்ச் மாதம் பத்திரமான அந்த இடத்தின் பத்திரத்தை மே மாதத்தில்தான் தொலைத்ததாகவும்; அதையும்கூட முறையாக போலீசில் புகார் கொடுத்து; பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருப்பதாகவும்; அந்த இடத்திற்கு வங்கியில் கடனும் பெற்றிருப்பதாகவும் சொல்கிறார் அந்த நபர். ஆனாலும், அப்படியா… என இழுத்து. சரி நான் பார்த்துக்கிறேன் என்பதாக பேசி முடிக்கிறார் சாத்தனூர் அண்ணாமலை.

இதனையடுத்துதான், கொட்டப்பட்டு செந்தில் மற்றும் தனது அடியாட்கள் இருவருடன், அந்த கன்ஷ்ட்ரக்ஷன் நபரின் வீட்டிற்கே சென்று மிரட்டியிருக்கின்றனர். அதுவும் அவர் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து, அவரது மனைவியை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கின்றனர்.

”உன் புருஷன் இங்கே வீடு கட்டி விக்கிறான். எங்களுக்கு செய்ய வேண்டியதை  செய்யலைனா, அவன் உயிரோட இருக்க மாட்டான். அவன்கிட்ட சொல்லு. அடுத்து ஆள தூக்கத்தான் போறோம். உன் புள்ளலாம் உயிரோட இருக்கனுமா இல்லையா?” என்று பகிரங்கமாகவே, மிரட்டியிருக்கிறான் கொட்டப்பட்டு செந்தில்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கே.கே.நகர் காவல்நிலையம்
கே.கே.நகர் காவல்நிலையம்

சாத்தனூர் அண்ணாமலை பேசிய ஆடியோ பதிவு, கொட்டப்பட்டு செந்தில் வீடு தேடி வந்து அடியாட்களுடன் மிரட்டி சென்ற சிசிடிவி காட்சிப்பதிவுகளுடன் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார், அந்த நபர். ஆடியோ பதிவு உள்ளிட்டு சிசிடிவி ஆதாரங்கள் அனைத்தையும் பார்த்த பின்னரும்கூட, வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியதாக சொல்கிறார்கள். குறிப்பாக, கே.கே.நகர் ஸ்டேஷனில் அப்போது பணியில் இருந்த ”ஐயா” பெயர் கொண்ட எஸ்.ஐ. ஒருவர் நேரடியாக இந்த புகார் குறித்த தகவலை சம்பந்தபட்ட சாத்தனூர் அண்ணாமலை டீமுக்கே போட்டு கொடுத்துவிட்டார் என்கிறார்கள். அவங்களை பகைச்சிக்கிட்டு உன்னால தொழில் பன்ன முடியாது. பார்த்து சமாதானமா போங்கனு போலீஸ் தரப்பில் அறிவுரை வழங்கியதாகவும் சொல்கிறார்கள்.

குறிப்பாக, சாத்தனூர் அண்ணாமலைக்கு அந்த ஸ்டேஷனில் நல்ல செல்வாக்கு இருப்பதாக சொல்கிறார்கள். காரணம் அவரது அண்ணன் சாத்தனூர் சிவா. ரியல் எஸ்டேட், பெட்ரோல் பங்கு, கல்வி நிலையங்கள், என அந்த பகுதியில் செல்வாக்காக இருக்கும் சாத்தனூர் சிவா எந்தக்கட்சியும் சாராதவர். ஆனாலும், எல்லா கட்சியிலும் முக்கியமான ஆட்களின் பழக்கத்தை கொண்டிருப்பவர் என்கிறார்கள். இதனால்தான், புகாரை படித்துப் பார்த்தவுடனே நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்குள்ளாக சமாதானம் பேசிப் பார்க்கட்டும் என்று நாட்களை கடத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான், மூன்று நாட்கள் நடவடிக்கைக்காக காத்திருந்து, எதுவும் நடக்காத நிலையில்தான் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாரிடம் முறையிட்டிருக்கிறார் அந்த நபர்.

ரவுடி கொட்டப்பட்டு செந்தில்
ரவுடி கொட்டப்பட்டு செந்தில்

அவர் வீடு அமைந்திருக்கும் இடம் கே.கே.நகர் லிமிட்டில் இருந்தாலும், சர்ச்சைக்குரிய பிளாட் இருக்கும் இடம் திருச்சி மாவட்ட போலீசாரின் லிமிட்டில் அமைந்திருக்கிறது. அங்கேயும் அவர்கள் பென்சிங் எல்லாம் சிதைத்து பிரச்சினை செய்த வீடியோ பதிவுகளோடு எஸ்.பி.யிடம் முறையிட்டிருக்கிறார்கள். அதன்பிறகே, இந்த புகாரில் அதிரடியைக் காட்டத் தொடங்கியிருக்கிறார் எஸ்.பி. வருண்குமார்.

வீடு தேடி மிரட்டிய  கொட்டப்பட்டு செந்திலை தட்டித் தூக்கியிருக்கிறார்கள். கூடவே, தப்பியோட முயற்சித்தபோது கால் உடைந்துபோக, மாவுக்கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார் செந்தில். தலைமறைவான சாத்தனூர் அண்ணாமலையை வலைவீசி தேடியும் வருகிறார்கள்.

புகார் கொடுத்த கன்ஷ்ட்ரக்ஷன் நபரோ, “பொண்டாட்டி புள்ளையோடு இருக்கேன். அதே ஊரில் தொழில் செய்தாகனும். யார்யாரோ ஃபோன்ல பேசுறாங்க. ரொம்பவே பயமா இருக்கு”னு அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறி  நண்பர்களின் வீட்டில் தஞ்சமடைந்திருப்பதாவும் சொல்கிறார்கள்.

“இதுபோன்று நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அந்த நிலத்தின் உரிமையாளர்களை மிரட்டினாலோ, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டாலோ குண்டாஸ் கம்பார்ம்” என்கிறார்கள், திருச்சி மாவட்ட போலீசார் தரப்பில்.

வருண் ஐ.பி.எஸ்.
வருண் ஐ.பி.எஸ்.

கோட்டையைக் காக்கும் அகழியைப்போல, இதுபோன்ற ரவுடிகள் – கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், “ஆபரேஷன் அகழி” என்ற பெயரில் புதிய தனிச்சிறப்பான நடவடிக்கையை தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். திருச்சி மாநகர காவல்துறை, திருச்சி மாவட்ட காவல்துறை, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்ட போலீசாரையும் ஒருங்கிணைத்து இந்த தேடுதல் வேட்டை தொடரும் என்கிறார்கள் போலீசு வட்டாரத்தில்.

அதிரடிக்குப் பெயர்போன எஸ்.பி.வருண்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் கலங்கிப் போயிருக்கிறார்கள் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் என்கிறார்கள். டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று இடமாறுதலில் செல்வதற்கு முன்பாக, சில அசைன்மெண்ட்களை முடித்துவிட்டு செல்வதென தீர்க்கமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

குறிப்பாக, இதுபோன்ற ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் 25 ரவுடிகளின் லிஸ்ட்டை கையில் வைத்துக்கொண்டு அடுத்த ரவுண்டு ஆட்டத்துக்கு தயாராகிவிட்டார் என்கிறார்கள்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு, எதேச்சையாக ஏட்டையா ஒருவர் சொன்னதை வைத்து, “ஆபரேஷன் அகழி” என்று பெயரிட்டிருந்தாலும், “ஆபரேஷன் வருண்” என்று சொல்வதைப்போலவே அமைந்திருக்கிறது, எஸ்.பி.யின் அதிரடி !

– அங்குசம் புலனாய்வுக்குழு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.