நியோமேக்ஸ் விவகாரத்தில் செட்டில்மென்ட் ஆகக்கூடாது என்று தடையாக இருக்கிறேனா? சிவகாசி ராமமூர்த்தி விளக்கம் !
நியோமேக்ஸ் விவகாரத்தில் செட்டில்மென்ட் ஆகக்கூடாது என்று தடையாக இருக்கிறேனா? சிவகாசி ராமமூர்த்தி விளக்கம் !சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி, நியோமேக்ஸுக்கு எதிராக புகார் அளித்தவர்களிடையே பணமா? நிலமா? என்ற விருப்பத்தை அறிந்து கொள்வதற்காக டான்பிட் நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷனர்களின் கருத்துக்களை கணக்கில் கொள்ளக்கூடாது என்று வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்றவர்.
அதுபோல, தற்போது வாய்ஸ் ஆஃப் லா அழகர்சாமி வழக்கறிஞர் வழிகாட்டுதலில் தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் 5ஏ வகையிலான செட்டில்மெண்ட் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துக்களை தொடர்ந்து எழுதியும் வந்திருக்கிறார்.
இதன் எதிர்வினையாக, ராமமூர்த்தி சுயநலமாக இந்த விசயத்தை அணுகிவருகிறார் என்றும்; 5ஏ செட்டில்மெண்ட்படி தீர்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்று மெனக்கெடுகிறார் என்றும், இது தொடர்பாக அவர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் தொடுத்தால் முதலீட்டாளர்களை அணிதிரட்டி கொண்டுபோய் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்பதாக சிலர் மிரட்டியும் வருவதாக குறிப்பிடுகிறார் ராமமூர்த்தி.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்துகிறார் அவர். 5A செட்டில்மென்ட்டிற்கு, நான் எதிரானவன் அல்ல. அந்த எண்ணம் எனக்கு இல்லை !
நிறுவனம் மற்றும் அதனைச் சார்ந்தவர்கள் நிறுவனத்தின் பெயரில் ரசீது கொடுத்து வசூல் செய்த பணத்தில் வாங்கி உள்ள பெரும்பாலான சொத்துக்கள் அடங்கிய பட்டியலை சமர்பிக்க வேண்டும். இவையனைத்தையும் கைப்பற்றி முறையாக ஏலம் விட்டு; விற்ற பணத்திலிருந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான செட்டில்மென்ட் விகிதாச்சார அடிப்படையில், வரிசைப்படி செட்டில்மென்ட் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ள மற்றும் அரசு அடையாளம் கண்டுள்ள நிறுவனம் மற்றும் அதனைச் சார்ந்தவர்களின் சொத்துக்களின் இப்பொழுதைய நிலைமை என்ன என்பது பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.என்ற இந்த நோக்கத்திற்காகவே, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
இதில், எங்கு சுய நலம் இருக்கிறது. நீதி, நேர்மை, நியாயம், தர்மம், மற்றும் பொது நலன் உடன் அனைவரும் பலன் பெரும் வகையில்தான் மனு தாக்கல் செய்யப்போகிறோம். அதனை எதிர்த்து எத்தனை ஆயிரம் மனுக்கள் தாக்கல் செய்தாலும் நீதி மன்றங்கள் நன்கு ஆலோசித்து தீர்ப்பு அளிக்கும்.
எதிர்மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் பொழுது, பல வகைகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என நீதி மன்றத்திற்கு அதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பொழுது நல்லதே நடக்கும்.
நிறுவனமும் பாதிக்கப்பட்ட வரும் ஒத்துப்போன பின் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால். (எடுத்துக்காட்டாக மதுரை உயர்நீதி மன்றத்தின் பின்னால் உள்ள சொத்தை அனைவரின் நலனுக்காக தரிசு நிலத்தை மொத்தமாக விற்றால் ஒரு ஏக்கர் குறைந்த பட்சம் 15 கோடிக்கு போகும் மொத்தம் (40 +14) 54 ஏக்கர் உள்ளது. இவ்வளவு தொகையை செட்டில்மென்ட்டிற்கு பயன்படுத்தும் பொழுது அது அரசிற்கு எளிதாக இருக்கும்.
அதைப் பிரித்து எழுதிக் கொடுத்தால், சிலருக்கு மட்டும் தான் அந்த நிலம் கிடைக்கும் பலருக்கு மற்ற இடங்களில் பிளாட்டாக கொடுத்தால் அது விலை குறைந்த நிலம் என கணக்கிடப்படும். தரிசு நிலத்தை பிளாட்டுகளாக மாற்ற அனுமதிப்பது, காலம் கடத்துவதற்காக செய்வது, அதை அனுமதிக்க இயலாது. உள்ள சொத்தை உள்ளபடி கைப்பற்றி அதை முறையாக செட்டில்மென்ட்டிற்கு பயன்படுத்த வேண்டும்)
( எடுத்துக் காட்டாக, இரண்டு பேர் நிறுவனத்தில் தலா ரூபாய் 25 லட்சம் டெபாசிட் செய்துள்ளார்கள் என்றால், அதில் நிறுவனத்திற்கு வேண்டிய ஒருவருக்கு மதுரை உயர்நீதி மன்றத்தின் பின்னால் உள்ள நிலம் அரசு வழி காட்டி மதிப்பில் ஒருவருக்கு கொடுத்தால் ரூபாய் 25 லட்சத்திற்கு ஒரு ஏக்கர் கிடைக்கும். அது போல் நிறுவனத்திற்கு வேண்டாதவருக்கு விருதுநகரில் நிறுவனம் நிர்ணயித்துள்ள விலை ஒரு பிளாட்டிற்கு 13 லட்சம் வீதம் 2 பிளாட்டுகள் கிடைக்கும்.
இதை எழுதி வாங்கிய பின் விற்றால் ஒரு பிளாட் சுமார் 5 லட்சத்திற்குத்தான் அதிகபட்சமாக விலை போகிறது என்றால், 2 பிளாட்டுகளுக்கு சேர்ந்து ரூ10 லட்சம் தான் கிடைக்கும். முதலீடு செய்த தொகை 20 லட்சம். ஆனால், விற்ற பின் கிடைக்கும் தொகை வெறும் 10 லட்சம் மட்டுமே.
அதே சமயத்தில் மதுரையில் ஒரு ஏக்கர் நிலம் பெற்றவர் அந்த நிலத்தை விற்கும் பொழுது ஒரு ஏக்கர் சுமார் 15 கோடிக்கு விலை போகும்.
இருவரும் முதலீடு செய்த தொகை தலா ரூ 20 லட்சம் தான். ஆனால் அதை விற்கும் பொழுது ஒருவருக்கு ரூ 10 லஞ்சமும் மற்றொருவருக்கு ரூ 15 கோடியும் கிடைக்கும். இதை தான் ஒரு தலை பட்சமாக இடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்றும் பாகுபாடுடன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை )
நிலம் என்றால் இது போல் பல வகைகளில் பிரச்சனைகள் வரும் ( அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துரைக்கப்படும் ). பணமாக செட்டில்மென்ட் என்றால் அனைவருக்கும் ஒரே மாதிரியான தீர்வு கிடைக்கும் என்பது தான் உண்மை ( இதை நீதி மன்றம் ஏற்றுக் கொள்ள தேவையான விவரங்கள் எடுத்துரைக்கப்படும் ). நிறுவனம் ஒத்துழைத்தால் தாமதம் ஆகாது.
அதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து நிறுவனத்தை ஒத்துழைப்பு கொடுக்க வலியுறுத்த வேண்டுமே தவிர நல்லது செய்ய போராடும் தனி நபரை எதிர்த்து செயல்படக் கூடாது. அவதூறு செய்வது, திட்டமிட்டு வன்முறையை தூண்டி விடுவது, மற்றும் நடக்கும் விசயங்களை மறைத்து, புரியாதவர்களை தூண்டிவிட்டு, மக்களை திசை திருப்பும் செயலில் ஈடுபடுபவர்களை பற்றி நீதி மன்றத்திற்கும் காவல் துறைக்கும் தெரிவிக்கப்படும்.
நிறுவனமும் பாதிக்கப்பட்ட வரும் சமரசமாக போகும் பொழுது மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால் ?
எல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் மொத்த நிலங்களின் விபரங்களை வெளிப்படையாக அறிவித்து, அனைத்து நிலங்களுக்கும் விலை நிர்ணயம் செய்து (அரசு வழிகாட்டி மதிப்பில் ) எல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடிய கால கட்டத்திற்குள் ஒரே மாதிரி எல்லோருக்கும் பாகுபாடு இல்லாமல் தீர்வு கொடுக்க இயலும் என்பதை உறுதி செய்த பின், யாருக்கு நிலம் வேண்டும் யாருக்கு பணம் வேண்டும் என தீர்மானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து மனு தாக்கல் செய்யப்படும்.
அப்படி செய்தால் பெரும்பாலோர் நிலத்தை தேர்வு செய்வதற்கு வழிவகுக்கும் என்ற உண்மையை மனு மூலமாக தெரிவிக்கப்படும்.
பணம் என்றால் எல்லோரும், ஏற்றுக் கொள்ள கூடிய கால கட்டத்திற்குள் கொடுக்க இயலும்.
அதில் பாகுபாடு இருக்காது. நல்ல விலை உள்ள நிலங்களை எழுதிகொடுத்த பின், பணம் வேண்டும் என்பவர்களுக்கு விற்பதற்கு நல்ல நிலங்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் எப்படி மெச்சூரிட்டி தொகை விரைவில் கொடுக்க இயலும்.
நிலம் எழுதி வாங்கியவர்கள் வேண்டாம் என்ற பிளாட்டுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தால் அவற்றை எப்பொழுது, எப்படி விற்று, முறையான செட்டில்மென்ட் கொடுத்து முடிக்க இயலும் என்ற திட்டத்தை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்படும்.
பொதுவாக குறைபாடுகள் இல்லாத, அனைவருக்குமான செட்டில்மென்ட் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அடங்கிய திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோருவது குற்றமா?.
நேர்மையான மனுவை எதிர்த்து எத்தனை ஆயிரம் மனுக்கள் தாக்கல் செய்தாலும் நீதி கிடைக்காமலா போய்விடும். நிறுவனத்திடம் பல நல்ல சொத்துகள் உள்ளன. அவற்றை விரைவில் கைப்பற்றி, விற்று, செட்டில்மென்ட் செய்ய முயற்சி செய்தால் பிரச்சினைகள் விரைவில் தீர்ந்து விடும்.
வங்கிகள் மூலமாக நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் இதர சொத்துக்களை, செட்டில்மென்ட்டிற்கு எப்படி பயன்படுத்தப் போகிறார்கள்? முந்தைய தீர்ப்பு படி செட்டில்மென்ட் விசயம் எந்த நிலையில் உள்ளது? என்ற அறிக்கையை சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யக்கோரி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்து மனு தாக்கல் செய்தால் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், பாகுபாடு இல்லாமல் பயன் அடைய உரிய திட்டத்தை செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே முக்கியமான கோரிக்கை.
எதற்கும் தடை ஆணை கோரப் போவதில்லை. அந்த எண்ணம் மனுதாரருக்கு இல்லை. பொது நலன் கருதி தாக்கல் செய்யப்படும் மனுவாக கருத வேண்டும்.” என்பதாக விளக்கம் அளித்திருக்கிறார் சிவகாசி ராமமூர்த்தி.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
திரு.சிவகாசி ராமமூர்த்தி அவர்கள் தொடர்பு எண் வேண்டும் அத்திப்பட்டி போல ஒரு கிராமம் முழுவதும் சிக்கியுள்ளது. அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும்
இந்த கம்பெனியில் பணம் டெபாசிட் செய்த யாருக்குமே பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை❌ ராஜா வாய்ப்பில்லை
காரணம்
100 க்கு 80 பேர் அரசாங்கத்தை ஏமாற்றி சம்பளம் வாங்கும் டீச்சர்களள்
இவர்கள் தான் இந்த கம்பெனி வளர்ச்சி அடைய உதவியவர்கள்
என்னுடைய கருத்து யாருக்குமே பணம் கொடுக்க கூடாது.
Po da vennai, do not tell like no sense message
Govinda Govinda
இவன் பணம் வாங்கிட்டு மத்தவங்க பணம் கிடைக்க விடாமல் தாமதம் செய்கிறான்
உண்மை மட்டும் வெளியில் வரட்டுமே தவறு செய்ததது யாராக இருந்தாலும் மக்கள் விடமாட்டார்கள்
ஐயா ராமமூர்த்தி சொல்லுவது சரிதான் கோவில்பட்டி அருகில் (இடைசெவல் கிராமம்)பழைய பிளாட் விலை சில ஆயிரத்தில் கம்பெனி 3லட்சம் என்று சொல்லுகிறது இந்த விலை வெளிஆளுக்கு கம்பெனியில் பணம் போட்டவர் என்றால் 1.5செலுத்தி இடத்தை வாங்கிகொள்ளவேண்டும் இதுவும் ஒரு வகை மோசடிதான்.ஐயா ராமமுர்த்தி சொல்லுவது சரிதான்
If government take the property and call for auction is worth less, even common illiterate person also know this fact. So he is intentionally doing. Everyone know guide line value and market value then it will be worth to investors.
சிறந்த அறிவு பூர்வமான அனுகுமுறை கூறும் ராமமூர்த்தி செயல் பாராட்டுக்குறியது.
Rks. கண்ணுச்சாமி, கம்பம்