ஓராண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் தினசரி சந்தை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

4.40 கோடி செலவில் புதியதாக கட்டிடங்கள் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைத்த தினசரி சந்தையை, கடந்த ஓராண்டு காலமாக பூட்டியே வைத்திருக்கும் கொடுமையை எங்கேனும் கேள்விபட்டிருக்கிறீர்களா? திருச்சி உறையூர் காய்கறி மார்க்கெட் தினசரி சந்தைக்கு ஏற்பட்ட அவலம் தான் இது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சந்தையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்;. ஒப்பந்ததாரர்களின் எல்லை மீறிய வசூல் நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும்; தினசரி வசூலை மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர் அ. அன்சர்தீன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் க.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த போலீசாரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மாநகராட்சியில் உரிய தீர்மானம் நிறைவேற்றி கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித்தருவதாக, போலீசாரும் வருவாய்த்துறையினரும் மாநகராட்சி அதிகாரிகளும் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை வழங்கியதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.