அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆன்லைன் மோசடி – மேற்கு வங்கத்திற்கே சென்று தட்டித்தூக்கி வந்த தென்காசி போலீசார் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பங்கு சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளைஞரை கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறார் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என வந்த விளம்பரத்தை நம்பி, அதில் இருந்த லிங்க் மூலம் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து, அவர்கள் கூறிய செயலியை (App) பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் ரூ. 92 இலட்சம் முதலீடு செய்துள்ளார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக் குமார்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக் குமார்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

பின்பு அதற்கான லாபத் தொகையை பெறுவதற்கு மேலும் ரூ. 37 லட்சம் கட்ட வேண்டும் என கூறிய பின்னர் தான், அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்து தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த நபர் இந்த மோசடியில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக் குமார் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான காவல்துறையினர், மேற்கு வங்காளத்திற்கு சென்று மேற்படி பண மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பார்கனாஸ் மாவட்டம், தமக்கலியை சேர்ந்த நவாப் அலி கோல்டர் என்பவரின் மகன் 26 வயதான தாரிகுல் கோல்டர் என்பவரை கொல்கத்தாவில் வைத்து கைது செய்தனர்.
பின்னர், தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, நீதிமன்ற காவல் பெற்று, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு, மேற்கு வங்காளம் சென்று எதிரியை கைது செய்த தென்காசி சைபர் கிரைம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.