தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று தலைவர் ஜோசப் ஜான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் யூனஸ்,துணைத் தலைவர் (மகளிர்) சுப்புரத்தினம்,செயலாளர் ரவி, இணைச்செயலாளர்கள் அன்பழகன், அருணா, பொருளாளர் கோபண்ணசாமி , ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் மாநில தலைவர் ஜோசப் ஜான்,செயலாளர் ரவி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1 4 2003 க்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் உள்ளது ஒன்னு ஒன்னு 2026 முதல் ஓய்வு வரும் அரசு ஊழியர்களுக்கு டாப்ஸ் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது ஆனால் 01-04- 2003 முதல் 31-12- 2025 வரை சிபிஎஸ் – ல்பணியாற்றி ஓய்வு பெற்ற 56,000 பேர் மாத ஓய்வூதியம் இன்றி தவிக்கிறோம் எனவே எங்களுக்கு 2003 முதல் 2025 கால கட்டத்தில் அரசு பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.