பாஜகவினருக்கு எதிராக விசிக நிர்வாகி மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சென்னையில் வழக்கறிஞர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அண்ணாமலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று உள்ளது.

அதில் பேசிய அக்கட்சியின் நிர்வாகி சிறுத்தை கனி என்பவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் காரை வழிமறிப்போம் எனவும் தமிழகத்தில் எல்லா தெருக்களிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஓட்டு கேட்டு எங்கு வந்தாலும் பாஜககாரர்களை காலணியால் அடிப்போம் என ரவுடியை போல் மிரட்டுவதாகவும், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை அமைப்பாளர் நிரஞ்சன் தலைமையில் மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புகார்மனு அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட மதுரை மாநகர காவல் ஆணையர் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக புகார் அளித்த வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

 

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.