திருச்சி ரயில் நிலையத்தை ரவுண்டடிக்கும் கஞ்சா கண்டுக்கொள்ளுமா காவல்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

திருச்சி ரயில் நிலையத்தை ரவுண்டடிக்கும் கஞ்சா
கண்டுக்கொள்ளுமா காவல்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சமீபகாலமாக திருச்சி ஏர்போர்ட்டையடுத்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தொடர்ந்து சிக்கிக்கொண்டு வருகின்றன. இதனை ரயில்வே நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவதாக பொதுமக்களிடையே ஒரு பேச்சு அடிப்பட்டு வந்தது. அதன்மூலம் விசாரித்தபோது கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி ரயில் நிலையத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க மற்றும் 10 வயதுள்ள சிறுவர்கள் சந்தேகத்தின் அடிப்படியில் தனியாக நின்றுகொண்டிருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சிறுவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்து அவர்கள் கையில் வைத்திருந்த பேக்கை பரிசோதித்தபோது, அதில் கஞ்சா இருந்ததைக் கண்டு வியந்தனர். மேலும் அவர்களிடம் எப்படி கிடைத்தது என்று விசாரித்தபோது தெரியாதென மூடி மறைத்துள்ளனர்.

மேலும் அதனைத்தொடர்ந்து கடந்த அக்-15 திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கொல்கத்தாவில் இருந்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 கிலோ கஞ்சா சிக்கியது போலீசார் பறிமுதல் செய்தனா்.

3

திருச்சியிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா வரையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுவது ஹவுரா விரைவு ரயில். எதிா் மாா்க்கத்தில் இந்த ரயில் வழக்கம்போல ஹவுராவிலிருந்து புறப்பட்டு, செவ்வாய் அதிகாலை 3 மணிக்கு திருச்சி வந்தடையும். அவ்வாறு வந்தடைந்த ரயில் பெட்டிகளை, திருச்சி பொன்நகா் பகுதியில் உள்ள ரயில்வே யாா்டில் சுத்தம் மற்றும் பராமரிப்பு செய்து, அதன் பின்னா் பிற்பகல் 4.20க்கு ஹவுரா புறப்பட்டுச் செல்லும்.

செவ்வாய்க்கிழமை வந்த ரயில் பெட்டிகளை யாா்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எஸ் 2, 3 பெட்டிகளில் இரு பைகள், இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், மோப்ப நாய் உதவியுடன் அவற்றை சோதித்த ரயில்வே பாதுகாப்பு படையினா் அவை வெடி பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்தனா்.

4

பின்னா் அவற்றை எடுத்து பரிசோதித்தபோது அவை கஞ்சா என்பது தெரியவந்தது. மொத்தம் 14 கிலோ கஞ்சாவை, திருச்சி கஞ்சா மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுப்போன்ற தொடர் சம்பவங்கள் நடந்துக்கொண்டிருக்க ரயில்நிலைய பாதுக்காப்பு அதிகாரிகள் இவையனைத்தும் தெரிந்தும் நவீன சோதனைக்கருவிகள் இருந்தும் சரியான சோதனை செய்வதில்லை என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.