கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்ன காவல் அதிகாரி வேதனையில் காதலி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்ன காவல் அதிகாரி
வேதனையில் காதலி!

விவேக் ரவிராஜ்
விவேக் ரவிராஜ்

Sri Kumaran Mini HAll Trichy

சமீபகாலமாக தமிழக காவல்துறையில் இருக்கும் ஒரு சில கருப்பாடுகள் செய்துவரும் குற்றங்கள் மொத்த தமிழக காவல்துறையின் மீது கரியை பூசும் விதமாக, பெண்களை பாதுக்காக்க வேண்டிய காவலர்களே பெண்களை சீரழித்து வரும் சம்பவம், தமிழக காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்- 16 தேதி திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் திருச்செந்தூர் தாலுக்கா காவல்நிலைய போலீஸ்கார் சசிகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணினை மயக்கி காதலிப்பது போல் நடித்து பின்னர் அப்பெண்ணினை கர்ப்பமாக்கியத்துடன், அதனை வீட்டில் யாருக்கும் தெரியாமல் கர்ப்பத்தை களைத்து விடும்படி கொலை மிரட்டலிட்டு அப்பெண்ணின் கர்ப்பத்தை களைத்த திட்டச்சேரி காவல்நிலைய காவல் உதவியாளர் விவேக் ரவிராஜ் தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுபஸ்ரீ (பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது). தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தற்போது திட்டச்சேரியில் காவல் உதவியாளராக பணிபுரியும் தலைஞாயிறு ஓரடியம்புலத்தை சேர்ந்த விவேக் ரவிராஜ் என்பவருக்கும் மணல்மேடு காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் போது முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பிறகு காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் கல்யாணமாகமலேயே குடும்ப வாழ்வு வாழ்ந்து வந்துள்ளனர்.

Flats in Trichy for Sale

மேலும் அந்த ஆடியோவில், திருமணம் செய்து கொள்ளும்படி கதறி அழும் அந்த இளம்பெண் சுபஶ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கொச்சை வார்த்தைகளாலும், ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுக்கிறார். உதவி ஆய்வாளரின் பேச்சைக்கேட்டு பயந்துபோன அந்த இளம்பெண் சுபஸ்ரீ, காவல்துறையில் தன்னை கர்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்த திட்டச்சேரி உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் ஏறாத, பார்க்காத அலுவலகங்களும் இல்லை, அதிகாரிகளும் இல்லை.

இதுதொடர்பாக சுபஸ்ரீயிடம் பேசியபோது…

காதல் ஆசைகாட்டி காமத்திற்காக மட்டும் பழகிய காவல் உதவி ஆய்வாளர், நாளடைவில் சுபஸ்ரீ தான் கர்பமானதை விவேக் ரவிராஜ்யிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த விவேக் ரவிராஜ், அந்த கர்ப்ப விவகாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணி பல வழிகளில் முடிவு செய்து. சுபஸ்ரீயிடம் பேசுவதை தவிர்த்துள்ளார், இதில் சந்தேகமடைந்த சுபஸ்ரீ “என்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு சுபஸ்ரீயிடம் “ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துகொள்வோம் என்றுள்ளார். அதற்கு சுபஸ்ரீ மறுப்பு தெரிவித்து உடனே திருமணம் செய்துக்கொள்ள கேட்டுள்ளார் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே நீ இல்லை என்றால் செத்து விடுவேன்” என மரண உச்சிக்கும் சென்றுள்ளார். ஆனால் இதற்கு கொஞ்சமும் இரக்கம் காட்டாத, காவல் ஆய்வாளர் விவேக் ரவிராஜ் இனிமேல் என்னிடம் பேசினாலோ, இச்சம்பவத்தை வெளியில் கூறினாளோ, உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று புதைத்து விடுவேன், என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்திலிருந்து தான் தப்பிக்க சுபஸ்ரீயிடம் அடிக்கடி தொல்லை கொடுத்து கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தியுள்ளார். அதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர் மூலம் கருக்கலைப்பும் செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் விவேக் ரவிராஜியிடம் பேச அவரது தொலைபேசி எண்ணிற்கு அழைத்தபோது அவர் அழைப்பினை ஏற்கமறுத்தார்.

தமிழக காவல்துறையில் ஒருபக்கம் ஆங்காங்கே பல ஹீரோ போலீஸ் வெளிவந்து காவல் துறைக்கே பெருமை சேர்த்து கொண்டிருக்க, இதுப்போன்ற ஓர் சில ஜீரோ போலீசார் செய்யும் செயல் அனைவருமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.