காவல்துறையை கண்டீத்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..


கும்பகோணத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். செயலாளர் தரணிதரன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த செப்-20 தேதி வக்கீல் ராஜ்குமார் தனது நண்பருக்காக கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே காத்திருந்துக்கொண்டிருந்தபோது சந்தேகப்படியான நபர் ஒருவர் கத்தியால் அவரை குத்த வந்துள்ளார். இதுதொடர்பாக வக்கீல் ராஜ்குமாரை கத்தியால் குத்த வந்த கும்பகோணம் பைராகித்தோப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் மீது கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

இதுதொடர்பாக வக்கீல் ராஜ்குமாரிடம் பேசியபோது,

4

அந்நபர் யாரென்று எனக்கு தெரியாது, இதுவரை நான் பார்த்தது கூட இல்லை திடீரென்று என்னை கத்தியால் குத்த வந்த சம்பவம் என்னை பலிவாங்க நினைக்கும் யாரோ அவரை ஏவி விட்டிருக்கலாம் என்று சந்தேகமாக இருக்கிறது. மேலும் இதுதொடர்பாக காவல் நிலையங்களில் புகார் அளித்தும் அந்நபர் மீது எந்தவித நடவடிக்கைகளும் இல்லை என்றார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

எனவே போலீஸ் துறையை கண்டித்து இன்றும், நாளையும் (அதாவது நேற்று மற்றும் இன்று) கோர்ட்டை புறக்கணிப்பதும். இனியும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 21-ந் தேதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடுத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு போலீஸ் துறையை கண்டித்து கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

5
Leave A Reply

Your email address will not be published.